Header Ads



உயர் கல்வியமைச்சர் வரவிருந்த நிலையில், தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திக்கக் கோரி பல்கலைக்கழக நுழைவாயில் முன்பாக இன்று சனிக்கிழமை (20) காலை, மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆய்வு கூடம் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு கூடம் என்பவற்றுக்கான அடிக்கல்லினை நட்டி வைப்பதற்காகவும் மாணவர்களுக்கான விடுதியைத் திறந்து வைப்பதற்காகவும் இன்று (20) காலை, உயர் கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல வருகை தரவிருந்தார். 

பல்கலைக்கழகத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதாக அமைச்சர் உறுதியளித்தால் மாத்திரமே அமைச்சரை பல்கலைக்கழகத்துக்குள் செல்லவிடுவது எனத் தெரிவித்து மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டமையால் பிற்பகல் 02 மணிவரை அமைச்சரின் வருகை இடம்பெறவில்லை. 

பொறியியல் பீடம், வணிகம் மற்றும் முகாமைத்துவ பீடம் உள்ளிட்ட ஐந்து பீடங்களின் மாணவர்கள் ஒன்றிணைந்து இவ்வார்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர். 

பல்கலைக்கழகம் சுதந்திரமாக இயங்குவதற்குத் தடையாகவுள்ள பொலிஸ் காவலரனை உடன் அகற்ற வேண்டும், அரசியல் நாடகத்தை பல்கலைக்கழகத்தில் அரங்கேற்றப்படுவதை உடன் நிறுத்து, விடுதியில் போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உடனடி தீர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மாணவர்கள் முன்வைத்துள்ளனர்.

1 comment:

  1. Not only south eastern. Same things happend in trincomalee campus of EUSL also.

    ReplyDelete

Powered by Blogger.