Header Ads



பிரதமர் ரணில், முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்கிறாரா..?

-க.முகம்மதுத்தம்பி-
(கல்வியமைச்சின் முன்னாள் மேலதிகச் செயலாளர்)

நிகா­பிற்கு தடை­வி­திக்கும் யோச­னைக்கு உறு­தி­யான மறுப்­பினை இன்­றைய நல்­லாட்சி அரசின் பிர­தம மந்­திரி ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தி­ருப்­பது, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேனவின் தலை­மையின் கீழுள்ள அர­சாங்­கத்தின் மீது முஸ்லிம் மக்கள் கொண்­டுள்ள நம்­பிக்­கையை மேலும் பலப்­ப­டுத்­தி­யுள்­ளது.

இதற்­காக முஸ்லிம் சமுகம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்கவுக்கு நன்­றி­யுள்­ள­வர்­க­ளாக என்றும் இருப்பர். 

சென்ற ஆட்­சியின் போது முஸ்­லிம்கள் பல இன்­னல்­க­ளுக்கு முகம் கொடுத்­ததன் பேறாக நாட்டில் உள்ள சகல மக்­களும் கட்சி பேத­மின்றி ஜனா­தி­பதித் தேர்­தலின் போது பொது அபேட்­ச­க­ராக களம் இறங்­கிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னாவை ஆத­ரிக்க முன்­வந்­தனர்.

முஸ்லிம் மக்கள் இந் நாட்டில் பூரண மத சுகந்­தி­ரத்­து­டனும், ஏனைய மதத்­த­வர்­க­ளுடன் சகோ­தர உணர்­வு­டனும் ஏனைய மதங்­களை மதித்­த­வர்­க­ளா­க­வுமே என்றும் வாழ விரும்­புப­வர்கள். சென்ற ஆட்சிக் காலத்தில் பாரி­ய­ளவில் முஸ்­லிம்­க­ளது மத கலாச்­சார உரி­மைகள் பாதிக்­கப்­பட்டு பெரிதும் கவ­லைப்­பட்­ட­வர்­க­ளாக அன்­றைய ஆட்­சி­யி­லி­ருந்து விடு­பட ஆட்சி மாற்றம் வேண்டி பூர­ண­மாக பொது அபேட்­ச­க­ருக்கு ஆத­ர­வ­ளித்து ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்த கார­ண­மா­யி­ருந்­தனர். இது நாட­றிந்த உண்­மையே.

இன்­றைய நல்­லாட்­சியில் முஸ்­லிம்கள் பெரிதும் நம்­பிக்கை கொண்டு ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ருக்கு பாரி­ய­ளவில் ஒத்­து­ழைப்பும் வழங்கி வரு­கின்­றனர். முஸ்­லிம்கள் எதிர்­வரும் காலங்­க­ளிலும் இவ்­விரு தலை­வர்­களின் கொள்­கை­களில் நம்­பிக்கை கொண்டு அவர்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிப்­பதும் “இன்ஷா அல்லாஹ்” உறு­தியே.

தற்­போ­தைய பாரா­ளு­மன்­றத்­திலும் பொது எதிர­ணி (JO) குழு­வினர் BBS அமைப்­பினர் எடுத்­த­தற்­கெல்லாம் இன பாகு­பாட்­டு­டனும், குரோத மனப்­பாங்­கு­டனும் தங்­க­ளது கருத்­துக்­களை முன்­வைக்­கின்­றனர். இதனால் இவர்கள் மீது முஸ்­லிம்கள் எவ்­வித நம்­பிக்­கையும் கொள்­வ­தற்­கில்லை. 

இவ் அர­சாங்கம் பத­விக்கு அமர்த்­தப்­பட்­டதும் முஸ்லிம் சமய கலா­சார விவ­கா­ரங்­க­ளுக்கு முஸ்லிம் அமைச்சர் ஒரு­வரை நிய­மித்து முஸ்­லீம்கள் சமய/மத உரி­மை­களை பேணுதல் மற்றும் பள்­ளி­வா­சல்கள் பரா­ம­ரிப்பு மேம்­பாடு மொத்­த­மாக முஸ்­லிம்­க­ளது சமய கலா­சார நலனில் அக்­கறை கொண்டு செயற்­பட வழி­வ­குத்­தமை முஸ்­லிம்கள் மீது கொண்ட அக்­க­றையே. 

இத­னையும் முஸ்­லிம்கள் பெரிதும் வர­வேற்­றுள்­ள­தோடு, இன்­றைய அரசு தங்­க­ளது விவ­கா­ரங்­களில் அக்­க­றை­யுடன் செயற்­பட்டு வரு­வ­தை­யிட்டு பெரிதும் நம்­பிக்­கையும் கொண்­டுள்­ளனர்.

இன்­றைய ஆட்­சி­யிலும் ஆங்­காங்கே நாட்டில் அமை­தி­யையும் சக வாழ்­வையும் விரும்­பாத சில சக்­திகள் வீணான குழப்­பங்­களை மக்கள் மத்­தி­யிலும் ஏற்­ப­டுத்த முற்­படும் வேளையில் இன்­றைய பாது­காப்பு உயர் அதி­கா­ரிகள் மற்றும் ஆட்­சி­யா­ளர்கள் உண்­மை­யாக மக்­க­ளது சக­வாழ்வில் அக்­கறை கொண்டு செயற்­ப­டு­வதால், அவ்­வப்­போதே பிரச்­ச­னைகள் தீர்ப்­ப­தற்­கான வழி­வ­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வதும் பாராட்­டுக்­கு­ரி­ய­தாகும்.

இவ் அர­சாங்­கத்தின் காலப்­ப­கு­தியில் முஸ்­லிம்­க­ளது பள்­ளி­வாசல் நிர்­மாணம் தொடர்­பான பிரச்­ச­னைகள் மற்றும் சமயம் தொடர்­பான ஷரீஆ சட்ட தொடர்­பான விட­யங்­களில் உள்ள கருத்து வேறு­பா­டுகள் அனைத்­தும் களை­யப்­பட்டு தங்­க­ளது சமய/மார்க்க கட­மை­களை நிறை­வாக பூர­ண­மாக பின்­பற்­று­வ­தற்கும் ஏனைய மதத்­த­வர்­க­ளோடு சௌஜன்­ய­ான முறையில் வாழ்­வ­தற்கும் வழி­வ­கைகள் மேற்­கொள்ள முடியும் என்ற நம்­பிக்­கையையும் வளர்த்து வரு­கின்­றனர். 

மேலும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சு பூரண பொறுப்­புடன் செயற்­பட்டு எமது மக்­களை நிம்­ம­தி­யாக பூரண சமய கலா­சார விழு­மி­யங்­களை பேணி­ய­வர்­க­ளாக எமது நாட்டின் அர­சியல் யாப்பில் உறு­தி­ய­ளிக்­கப்­பட்­ட­வாறு பூரண மத சுதந்­தி­ரத்­துடன் வாழ்­வ­தற்­கேற்ப சகல காரி­யங்­க­ளையும் முன்­னெ­டுத்து பாது­காப்­ப­ளிக்கும் என்ற நம்­பிக்­கையும் முஸ்­லிம்கள் கொண்­டுள்­ளனர்.

இதன்பால் சகல முஸ்லிம் அமைப்­பி­னர்­களும் ஒற்­று­மை­யாக ஒரே சமூகம் என்ற பார்­வையில் வீணான கருத்து மோதல்கள் முரண்­பா­டு­களைத் தவிர்த்து சமய ஒழுக்க நெறிக்­குட்­பட்ட அமைப்பில் எமது வாழ்க்­கையை சம்­பூ­ர­ண­மாக ஆக்­கிக்­கொள்­வ­தா­னது, எமது சமூக மேம்­பாட்­டுக்கு பெரிதும் உதவக் கூடி­ய­தாக அமையும். 

முஸ்­லிம்­களைப் பாதிக்கும் எந்த தீர்­மா­னத்­தையும் எடுக்க முடி­யாது என்று அண்­மையில் எமது பிர­தமர் நிகாப் ஆடை தொடர்­பாக தெரி­வித்த கருத்து அவர் முஸ்­லிம்­களின் சமய கலா­சார விடயங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான அமைப்பில் செயற்படுவதில்லை என்பதனை உறுதியாக தெளிவுபடுத்தியுள்ளார்.

முஸ்லிம் மக்களது விடயத்தில் இவ்வாறு பிரதமர் கருத்து தெரிவிப்பது இன்றைய அரசு எமது சமூகத்தின் சமய கலாசார நலனில் பூரண அக்கறையுடன் செயற்படுவதனை வெளிக்காட்டி நிற்கின்றது.

இதன்பால் இன்றைய ஆட்சியாளர்களுடன் நாம் ஒற்றுமையாக என்றும் விசுவாசமாக எமது செயற்பாடுகளை முன்னெடுத்து எமது சமூக நலன்பேணிடுவோம்.

1 comment:

  1. வரவேற்கத்தற்க கருத்துக்கள்.

    ReplyDelete

Powered by Blogger.