Header Ads



சுவிஸ் மக்களிடையே அச்சம்

பிரான்ஸ், ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளில் சமீபகாலமாக நடைபெற்றுவரும் தீவிரவாத தாக்குதல்களை அடுத்து சுவிட்சர்லாந்தில் பெரும்பாலான மக்கள் பாதுகாப்பு குறித்த அச்ச உணர்வில் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் இதுகுறித்து 18,000 பொதுமக்களிடம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மக்களிடம் நைஸ் தாக்குதல் மற்றும் ஜேர்மனியின் ஆன்ஸ்பக் பகுதியில் வெடிகுண்டு தாக்குதல் உள்ளிட்டவை குறித்து கருத்து கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் ஒட்டுமொத்தமாக 75 சதவிகித மக்கள் பாதுகாப்பின்மையை முன்னைவிட அதிகமாக உணர்வதாக தெரிவித்துள்ளனர். இதன் விளைவாக சுவிட்சர்லாந்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் தங்களின் தனிப்பட்ட சுதந்திரத்தையும் விட்டுத்தர தயார் என 64 சதவிகித மக்கள் தெரிவித்துள்ளனர்.

சுவிஸில் தற்போதுள்ள பாதுகாப்பு அம்சங்களை இன்னும் மேம்படுத்த வேண்டும் என 29 சதவிகித மக்கள் தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி நாட்டின் முக்கிய பகுதிகளில் பொலிஸ் மற்றும் ராணுவத்தினரின் நடமாட்டம் அதிகப்படுத்த வேண்டும் எனவும் 27 சதவிகித மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் தற்போதைய பாதுகாப்பு ஏற்பாடுகளே போதுமானது, நாடு எவ்வித அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளும் நிலையில் உள்ளதாக 11 சதவிகித மக்கள் மட்டுமே தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதே உலக நிலவரம் குறித்த மக்களின் புரிதலை தெளிவு படுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர் பாபியோ தெரிவித்துள்ளார்.

தீவிரதவாதத்தை ஒடுக்க நாட்டு மக்களால் மட்டும் முடியும் விடயமல்ல, அது அந்தந்த நாட்டின் ஒத்துழைப்புடன் மட்டுமே சாத்தியம் என மக்கள் தெளிவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மத்திய புலனாய்வு சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவது குறித்து பொதுமக்களின் வாக்கெடுப்பு வரும் செப்டம்பர் 25 ஆம் திகதி நடைபெற இருக்கும் இந்த தருவாயில், அதுகுறித்த மக்களின் புரிதலை அறிந்துகொள்ளவே இந்த ஆய்வினை தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்டுள்ளது.

No comments

Powered by Blogger.