Header Ads



சவூதி அரேபிய மன்னர் சல்மானுடன், ஜனாதிபதி மைத்திரி தொலைபேசி உரையாடல்

இலங்­கைக்கு மேல­தி­க­மாக ஹஜ் கோட்டா பெற்றுக் கொள்­வது தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இன்று திங்­கட்­கி­ழமை சவூதி அரே­பிய மன்­ன­ருடன் தொலை­பே­சி­யூ­டாக நேரில் உரை­யா­ட­வுள்ளார்.

தேசிய ஒரு­மைப்­பாடு மற்றும் நல்­லி­ணக்க இரா­ஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி ஜனா­திப­தி­யுடன் பேச்­சு­வார்த்தை நடத்தி இதற்­கான ஏற்­பா­டு­களைச் செய்­துள்ளார்.

முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தனிப்­பட்ட விஜ­ய­மொன்­றினை மேற்­கொண்டு நேற்று லண்­ட­னுக்குப் பய­ண­மானார்.

அவர் லண்­ட­னுக்குப் பய­ண­மா­வ­தற்கு முன்பு இலங்­கைக்கு மேல­தி­க­மாக ஹஜ் கோட்டா பெற்றுக் கொள்­வ­தற்­கான ஏற்­பா­டு­களைக் கவ­னிக்கும் பொறுப்பு இரா­ஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி­யிடம் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீ­மினால் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்­கைக்கு மேல­தி­க­மாக ஹஜ் கோட்டா பெற்றுக் கொள்­வது தொடர்­பாக இரா­ஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஆரம்பக் கட்ட பேச்­சு­வார்த்­தை­களை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் நடத்­தினார்.

இத­னை­ய­டுத்தே இன்று ஜனா­தி­பதி சவூதி மன்­ன­ருடன் மேல­திக ஹஜ் கோட்டா தொடர்பில் தொலை­பே­சி­யூ­டாக கலந்­து­ரை­யா­ட­வுள்ளார்.

இலங்­கைக்கு மேல­தி­க­மாக ஹஜ் கோட்டா வழங்­கு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சவூதி ஹஜ் அமைச்­ச­ரிடம் கடித மூலம் கோரிக்­கை­யொன்­றினை முன்­வைத்­திருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். மேலும் முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்­சரும் மேல­திக கோட்டா வழங்­கு­மாறு சவூதி ஹஜ் அமைச்­சரைக் கோரி­யி­ருந்தார்.

கடந்த வருடம் இலங்­கைக்கு 600 மேல­திக கோட்டா வழங்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். தேசிய ஒரு­மைப்­பாடு மற்றும் நல்­லி­ணக்க இரா­ஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸியைத் தொடர்பு கொண்டு இது தொடர்பில் வின­வி­ய­போது;

‘கடந்த கால ஹஜ் ஏற்­பா­டு­க­ளுக்­கான தலை­வ­ராக கட­மை­யாற்­றிய அனு­ப­வங்­களைக் கொண்டு இவ்­வ­ரு­டமும் மேல­திக ஹஜ் கோட்டா பெற்றுக் கொள்­வது தொடர்­பி­லான ஏற்­பா­டு­களை ஜனா­தி­ப­தி­யுடன் இணைந்து மேற்­கொண்டு வரு­வ­தாகக் கூறினார்.

மேல­திக கோட்டா கிடைக்கும் எனவும் நம்­பிக்கை வெளியிட்டார்.

விடிவெள்ளி  ARA.Fareel

No comments

Powered by Blogger.