August 28, 2016

இது பில்கிஸின், கண்ணீர் காவியம்..!


-ஆமினா முஹம்மத்-

பில்­கிஸை நீங்கள் மறந்­தி­ருக்கக் கூடும்! பல­ருக்கு இப்­ப­திவே முதல் அறி­மு­க­மா­கவும் இருக்­கலாம்...  மறந்­த­வர்­க­ளுக்கு நினை­வூட்­ட­லா­கவும், புதி­ய­வர்­க­ளுக்கு சுருக்­க­மான அறி­மு­கத்­து­டனும் கட்­டு­ரையை துவக்­கலாம்.."ஐந்து மாத கர்ப்­பி­ணி­யான பில்கிஸ் வன்­பு­ணர்­வுக்கு ஆளாக்­கப்­பட்டார். ஒரு­வரால் அல்ல.. 

கற்­பனை செய்து பாருங்கள்! கொடூ­ரமாய் இருக்­கி­ற­தல்­லவா? நல்­ல­வேளை நமக்­கேதும் இப்­ப­டி­யொன்று நிக­ழ­வில்லை என்ற   பெரு­மூச்சு வெளிப்­ப­டு­கி­றதா?  நம்­மைப்போல் ஒரு பாது­காப்­பான சூழலில், அழ­கான வாழ்க்­கையில், இயற்­கையின் வனப்­பை­போ­லவே செழிப்­பாக இருந்த குடும்பம் தான் பில்கிஸ் உடை­யது! கோரச் சம்­பவம் நடக்கும் வரை அவரை யாருக்கும் தெரி­யாது... அவர் தனக்­கான நியா­யத்தை கேட்டு வாதாடி நிற்­க­வில்லை எனில்  14க்கும் மேற்­பட்ட குடும்ப உற­வி­னர்கள் மண்­ணோடு புதைக்­கப்­பட்­டது போல் நமக்கும் தடயம் கிடைக்­காது போயி­ருக்கும் !

பில்­கிஸுக்கு நேர்ந்த அவலம் எதனால்? 
அவர் முஸ்லிம் பெண்­மணி என்ற ஒரே கார­ணத்­தினால் !!! ஆம்... அவ்­வ­டை­யா­ளத்தை தவிர்த்து அவரை பாலியல் வன்­மு­றைக்­குள்­ளாக எந்த முகாந்­தி­ரமும் அந்த நாசக்­கா­ரர்­க­ளுக்கு தெரிந்­தி­ருக்­க­வில்லை! 

சினி­மாக்­களில் மட்­டுமே பார்த்­தி­ருக்க முடிந்த கற்­ப­னைக்கும் எட்­டாத கொடூ­ரங்­களை ஒரே நாளில் சந்­தித்த , 'வாழும் துயரம்' அவர்.
பெப்­ர­வரி 27, 2002ல் கோத்ரா ரயிலில் பற்­றிய தீ கல­வ­ர­மாக உரு­வெ­டுத்து ஆயி­ரக்­க­ணக்­கான முஸ்­லிம்­களை காவு வாங்­கி­யது.

தனக்கு நேர்ந்த கொடு­மையை சொல்­வ­தற்கு பலர் உயி­ரோடு இல்லை, பலர் உயி­ருக்கு பயந்து சொல்­லத்­த­யாராய் இல்லை! ஆனால் தனக்கு இழைக்­கப்­பட்ட அநீ­திக்காய் படிப்­ப­றி­வற்ற ஓர் இளம்பெண் துணிந்து வந்தார்.  

அதனை அவர் சொல்லக் கேட்போம்... 
"என் கணவர் வேலை­யில்­லா­த­வ­ராக அப்­போது இருந்­தாலும், வச­தி­கொண்ட வீட்டில் திரு­மண வாழ்க்கை சுக­மாக சென்­றுக்­கொண்­டி­ருந்­தது. எங்­க­ளுக்கு 3 வயதில் ஒரு மகள் இருந்தாள். பெயர் சாலிஹா. நான் 5 மாத குழந்­தையை வயிற்றில் சுமந்­த­வ­ளாக இருந்தேன்.

பெப்ரவரி 28! சரி­யாக கோத்ரா சம்­ப­வத்­திற்கு அடுத்த நாள் எங்கள் கிரா­மத்தின் பஞ்­சா­யத்­திற்­குட்­பட்ட பகு­தி­களில் இந்­துத்­து­வா­வி­னரால் பேர­ணிக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

அது கல­வ­ர­மாக மாறிப்­போக பல முஸ்லிம் வீடுகள் தீக்­கி­ரை­யா­கின. நாங்கள் பாது­காப்­பான இடங்­க­ளுக்கு தப்பிச் செல்ல நாடிய போது ஊர்த்­த­லைவர் தடுத்து "யாராலும் உங்­க­ளுக்கு தீங்கு ஏற்­ப­டுத்த முடி­யா­தென்று" உறுதி கூறினார்.

ஆனால், அதன் பின்னர் கல­வர கும்பல் எங்கள் இல்­லங்­களை நோக்கி கற்­களை வீசத்­தொ­டங்­கின. அதி­லி­ருந்து தப்­பிக்க ஓட்டம் பிடித்தோம். அப்­போது நான் செருப்பு கூட அணிய அவ­காசம் பெற்­றி­ருக்­க­வில்லை.

உறுதி கொடுத்த ஊர் தலைவர் வீட்டில் 500க்கும் மேற்­பட்ட பெண்கள் , குழந்­தைகள் ஒன்று கூடினோம். ஆனாலும் பாது­காப்­பற்­ற­வர்­களாய் உணர்ந்தோம். நாங்கள் தப்பி வேறிடம் செல்வ­தற்­கு­ரிய எல்லா வழி­களும் கல­வ­ரக்­கா­ரர்­களால் அடைக்­கப்­பட்­டி­ருந்­தன.

28ஆம் திகதி நள்­ளி­ரவில் எங்கள் வீடுகள் திட்­ட­மிட்டு எரிக்­கப்­பட தொடங்­கின. நாங்கள் உங்­களை கொல்வோம், நாங்கள் உங்­களை வெட்­டியே தீருவோம் எனும் கோஷங்கள் உரக்க ஒலித்­தன. 

காட்டில் அடைக்கலம் 
எங்­க­ளுக்கு பொலீஸ் பாது­காப்பு தேவைப்­பட்­டது. அதற்­காக கிராம ஆண்கள் காவல்­நி­லை­யத்தில் உதவி கேட்­டனர். ஆனால் எங்­க­ளுக்கு பாது­காப்பு மறுக்­கப்­பட்­டது.

வேறு வழி­யில்­லாமல் பல முஸ்­லிம்கள் தங்கள் உயி­ரைக்­காப்­பாற்­றிக்­கொள்ள காடு­க­ளுக்கு சென்று சில நாட்கள் மறைந்து வாழ்ந்­தனர்.

அன்­றைய நாள் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை உண்ண உண­வின்றி அருந்த நீரு­மின்றி உயி­ருக்கு பயந்து எங்கள் கிரா­மங்­க­ளி­லேயே பல்­வேறு இடங்­களில் ஒளிந்­து­கொண்டே இருந்தோம். ஆனால் அசா­தா­ரண சூழல் திணிக்­கப்­பட்ட நிலையில் அது சாதா­ரண விஷ­ய­மாக இருக்­க­வில்லை.

எங்­க­ளுக்கு அடைக்­கலம் கொடுத்­த­வர்­க­ளுக்­கெல்லாம் மிரட்டல் விடுக்­கப்­பட்­டது. அவர்­களை வெளியே அனுப்­ப­வில்லை எனில் உன் வீட்­டையும் கொளுத்­துவோம் என்று ஆவே­ச­மாக அவர்கள் கத்­தி­யதால் பலரும் அடைக்­கலம் கொடுக்க அஞ்­சினர். 

மிரட்­ட­லுக்கு அஞ்­சிய , உறுதி அளித்த எங்கள் ஊர் தலை­வரும் அவர் வீட்­டி­லி­ருந்து எங்­களை வெளி­யேற்­றி­விட்டார். எங்கள் வீடு­க­ளுக்கே செல்­ல­லா­மென நினைத்தால் , அது ஏற்­க­னவே தீக்கு இரை­யா­கி­யி­ருந்­தது.

மீண்டும் காவல்­துறை அதி­கா­ரி­க­ளிடம் பாது­காப்பு கோரினோம். அவர்­களோ எங்­களை அக்­கி­ரா­மத்தை விட்டு வெளி­யே­றிச்­செல்ல அறி­வு­றுத்­தினர்.

இர­வா­கி­யி­ருந்­தது. அரு­கி­லி­ருக்கும் கிரா­மத்தில் காங்­கிரஸ் எம்.எல்.ஏ பிஜல்பாய் தாமோர் வீட்­டுக்கு அடைக்­கலம் தேடி சென்றோம். துர­திஷ்­ட­வ­ச­மாக அவர் அப்­போது ஊரி­லில்லை. அவர் மகனும் கூட எங்­களை ஆசு­வா­சப்­ப­டுத்த குடிக்க நீரும் சில திண்­பண்­டங்­க­ளையும் கொடுத்­து­விட்டு அங்­கி­ருந்து செல்­லும்­படி சொல்­லி­விட்டார். 

வேறு வழி­யில்லை! வேறிடம் செல்ல வேண்டும். இன்­னு­மொரு கிரா­மத்­திற்கு சென்றால் அங்­குள்ள முஸ்­லிம்கள் உயி­ருக்கு பயந்து எங்கோ தப்­பி­யோ­டி­யி­ருந்­தனர். அங்­கி­ருந்த பள்­ளி­வாசல் அன்­றைய இர­வுக்கு பாது­காப்பு கொடுத்­தது.

ஷாமின்! என் ஒன்­று­விட்ட சகோ­தரி... நிறை­மாத கர்ப்­பிணி. திடீ­ரென பிர­சவ வலி ஏற்­பட மருத்­துவ உத­வியும் கிடைக்­காத அந்த நேரம் செய்­வ­த­றி­யாது திகைத்தோம். அவள் பள்­ளி­வா­ச­லி­லேயே தன் குழந்­தையை பிர­ச­வித்தாள்.

பள்­ளி­வாசல் அமைந்­தி­ருந்த, நாங்கள் தங்­கி­யி­ருந்த கிராமம் ஏற்­க­னவே இனச்­சுத்­தி­க­ரிப்­புக்கு உள்­ளாக்­கப்­பட்­டதால் அங்­கி­ருப்­பது பாது­காப்­பற்­றது என எண்ணி குத்ரா எனும் கிரா­மத்­திற்கு பழங்­கு­டி­யினர் உத­வி­யுடன் சென்றோம்.

எங்கள் கிரா­மத்­தி­லி­ருந்து 500 முஸ்­லிம்கள் தப்பி வந்தோம். 17 உறுப்­பி­னர்கள் மட்டும் குத்­ராவில் தங்­கிக்­கொண்டோம். ஷாமினால் பய­ணிக்க முடி­ய­வில்லை. ஈன்­றெ­டுத்த வேதனை அவளை சோர்­வாக்­கி­யி­ருந்­தது.

ஆகையால் இக்­கி­ரா­மத்­தி­லேயே 3 நாள் வரை மறைந்­தி­ருக்க எண்­ணினோம். எங்கள் அடை­யா­ளங்­களை மறைக்க பழங்­கு­டி­யினர் அவர்­களின் துணி­களை எங்­க­ளுக்கு அணி­ய­வைத்­தனர். ஷாமின் மீதான இரக்­கத்தால் எங்­க­ளுக்கு அடைக்­கலம் கொடுத்­தனர். இல்­லையேல் அதுவும் கிடைத்­தி­ருக்­காது. 

ஆனால் அதுவும் எளி­தா­ன­தாக இருக்­க­வில்லை. முஸ்­லிம்­களை அவர்கள் தங்­க­ளுடன் வைத்­துள்­ளார்­களா என பலர் விசா­ர­ணை­க­ளுக்கு உள்­ளா­கினர். எனவே அதி­காலை 4 மணிக்கு மாறு­வே­டத்தில் அங்­கி­ருந்து புறப்­பட்டோம்.

துயரங்கள் தொடர்ந்தன
உயி­ருக்காய் பயந்­தோ­டிய நாட்கள் எல்லாம் கண்ணீர் மட்­டுமே சுமந்­தி­ருந்தோம். அடுத்த நொடி என்ன ஆபத்­தி­ருக்­கி­றது என்­பதை அறி­யாத பட­ப­டப்­புகள் கொடூ­ர­மா­னவை. எதுவும் சிந்­திக்க முடி­ய­வில்லை! சிந்­த­னை­யெல்லாம் எப்­படி உயிரை காப்­பாற்­று­வ­தி­லேயே இருந்­தது.

இரு நாட்­க­ளுக்கு பிறகு பழங்­கு­டி­யி­னரின் வழி­காட்டல் உத­வி­யுடன் சபர்வாட் கிரா­மத்­திற்கு சென்றோம். இங்­கி­ருந்து ,மானாபாய் எனும் நீண்­டநாள் நண்­பரை சந்­தித்து உதவி பெற நினைத்தோம். அவர் இருக்கும் பகுதி பனி­வேலா. அங்கு செல்லும் வழியில் ஒரு குக்­கி­ரா­மத்தில் ஓய்­வெ­டுத்­துக்­கொண்டோம். அது இரு மலை­க­ளுக்கு இடை­பட்ட இடம்.

குறு­கிய சாலை வழியே செல்­லக்­கூ­டிய பகுதி.

நாங்கள் சாலை வழியே சென்ற போது திடீ­ரென ஒரு நபர் என் மாமாவை தாக்கினான். கீழே சரிந்த அவர் ஒரு மணி நேரத்­திற்கு பின்பே சுய­நி­னைவு பெற முடிந்­தது. விரை­வி­லேயே சில நபர்கள் சூழ்ந்­து­கொண்­டனர். அவர்­களை முன்பே எனக்கு தெரியும். ஆம்! அவர்கள் என் சொந்த கிரா­மத்தை சேர்ந்­த­வர்கள்.

சற்று முன்னர் நாங்கள் தங்­கிய சபர்வாட் கிரா­மத்­தினர் தான் நாங்கள் எங்­கே­செல்­கிறோம் என்ற தக­வலை இவர்­க­ளுக்கு கொடுத்­துள்­ளார்கள். இவ்­வெ­றி­யர்கள் டாட்டா ஸ்மோவில் வந்­தி­ருந்­தனர்.

"முஸ்­லிம்கள் இங்­கே­யி­ருக்­கி­றார்கள்! கொல்­லுங்கள்! கொல்­லுங்கள்" எனும் ஆவேச குரல்­களை எழுப்­பினர்.

அவர்கள் சபர்வாட் மற்றும் பனி­வேலா கிரா­மத்­தி­லி­ருந்த வெறி­பி­டித்த மக்­களை திரட்டி வந்­தி­ருந்­தனர். தொடர் ஓட்­டத்தின் கார­ண­மாக எங்கள் உடல் சோர்ந்­தி­ருந்­தது, உத­விக்கு ஆள் இல்­லாத நிலை உள்­ளத்­தையும் சோர்­வ­டைய செய்­தி­ருந்­தது. எங்­களால் இனி அவர்­க­ளுடன் சண்­டை­யிட முடி­யாது! அதற்­கு­ரிய சக்­தி­யையும் இழந்­து­விட்டோம்.

ஆனாலும் ஆளுக்­கொரு திசை­யாக ஓட்டம் பிடிக்க நினைத்தோம்! பய­னில்லை- சுற்­றி­வ­ளைக்­கப்­பட்டோம். நாங்கள் 17 நபர்கள் தான்... நான்கு ஆண்கள் மட்­டுமே எங்­களில் உண்டு! எட்டு பெண்­களும் மீத­முள்­ள­வர்கள் சிறு குழந்­தை­க­ளா­கவும் இருந்­தனர்.

அவர்­க­ளிலோ 25க்கும் மேற்­பட்ட வெறி­யர்கள் இருந்­தனர்.
அவர்கள் எம் பெண்­களின் ஆடை­களை கிழித்­தெ­றிந்து பாலியல் தொல்­லைக்கு ஆளாக்­கினர். நிர்­வா­ண­மாக்­கப்­பட்ட பெண்கள் வன்­பு­ணர்­வுக்கு ஆளாக்­கப்­பட்­டனர்.

அவர்­களின் வெறி 2 நாட்­க­ளுக்கு முன் பிறந்த குழந்­தை­யையும் விட்­டு­வைக்­க­வில்லை! ஷாமின் 2 நாள் வயது குழந்­தையை கொடூ­ர­மாக கொன்­றனர். என் தாய்­மாமா, என் தந்­தையின் தங்கை மற்றும் அவரின் கண­வ­ரையும் அடித்­துக்­கொன்­றனர். வன்­பு­ணர்­வுக்­கா­ளான பெண்­க­ளையும் கொன்­றனர்.

பஞ்சாக எறியப்பட்ட பிஞ்சுமகள்
அதன் பின் என்­னிடம் வந்­தனர். நான் என் 3 வயது மகளை கையில் ஏந்­தி­யி­ருந்தேன். என்­னி­ட­மி­ருந்து வலுக்­கட்­டா­ய­மாக அவளை பறித்­துக்­கொண்ட அந்த வெறி­யர்கள், தன் வெறியின் விசைக்­கேற்ப அவளை தூக்கி வீசினர். அவளின் பிஞ்சு தலை பாறையில் மோதிய போது என் இத­யமே சுக்­கு­நூறாய் உடைந்­தது.

அவள் இறந்து போனாள். நான்கு பேர் என் கை மற்றும் கால்­களை பிடித்­துக்­கொள்ள பலபேர் ஒருவர் பின் ஒரு­வ­ராக என்னை வன்­பு­ணர்­வுக்­குள்­ளாக்­கினர். அவர்­களின் வெறி அடங்­கிய பின்பும் கூட கண்­மூ­டித்­த­ன­மாக என்னை உதைத்தும் அடித்தும் துன்­பு­றுத்­தினர். என் கழுத்­துப்­ப­கு­தி­யினை காலால் அழுத்­தி­யி­ருந்தான் ஒருவன். கற்கள் கொண்டு தாக்­கப்­பட்டேன்.

இரும்பு தடியால் என் தலையில் தாக்­கிய போது நினை­வி­ழந்து போனேன். நான் இறந்­து­விட்­ட­தாக நினைத்த அந்த வெறி­யர்கள் என்னை புத­ருக்குள் தூக்கி வீசினர்.

எங்­களை தாக்­கிய போது அவர்கள் உதிர்த்த முறை­கே­டான வார்த்­தை­களை என்னால் எப்­போதும் திருப்­பிச்­சொல்ல முடி­யாத அள­வுக்கு கேவ­ல­மா­னவை. " கோத்­ராவில் எங்கள் மக்கள் கொன்­ற­தற்­காக உங்­களை கொல்வோம்! எந்த ஒரு முஸ்­லி­மையும் உயி­ருடன் விட்டு வைக்க மாட்டோம்" என ஆக்­ரோ­ஷ­மாக கத்­தினர்.

என் கண் முன்னே என் அம்மா, என் தங்கை மற்றும் என் 12 உற­வி­னர்­களும் கொல்­லப்­பட்டனர். தன் துன்­பத்தை கத்தி சொல்ல முடி­யாத மிரு­கங்­களை துன்­பு­றுத்தி துடி­து­டிக்க வைத்து கொல்­லப்­ப­டு­வதை போலவே என் உற­வி­னர்கள் சித்­தி­ர­வ­தைக்­குள்­ளாக்­கப்­பட்டு கொல்­லப்­பட்­டனர்.

இத்­த­னைக்கும் 28ம் திகதி காலையில் என் கண­வரும் இன்னும் சில உற­வி­னர்­களும் பிஜேபி ஊழியர் வீட்டில் ஏற்­பாடு செய்­யப்­பட்ட கிரா­மத்­தி­னர்க்­கான கூட்டத்தில் எங்­க­ளுக்கு பாது­காப்பு கொடுக்கும் படி கெஞ்­சி­யுள்ளார்.

இப்­போது எங்­களை வன்­பு­ணர்­வுக்கு ஆளாக்கி கொன்­ற­வர்கள் அப்­போது அக்­கூட்­டத்தில் இருந்­த­வர்கள் தான்!

17 பேரில் 2 குழந்­தை­களும் (சதாம் -வயது 7, ஹுசைன் -வயது 5) நானும் மட்டும் பிழைத்­துக்­கொண்டோம்! அவர்கள் இரு­வரும் எப்­படி தம்மை காத்­துக்­கொண்­டார்கள் என எனக்கு தெரி­ய­வில்லை.

நாங்கள் சித்­தி­ர­வ­தைக்­குள்­ளாக்­கப்­பட்டு கொல்­லப்­பட்ட போது சுற்றி நின்று வேடிக்கை பார்த்த பொது­மக்­களில் எவரும் ஹிந்து பெண்கள் இல்லை. அவர்கள் அனை­வரும் நடுத்­தர வயது ஆண்கள் மட்­டுமே. நாங்கள் வன்­பு­ணர்­வுக்கு ஆளாக்­கப்­பட்ட போது இவர்­க­ளெல்லாம் ஆபாச வார்த்­தை­களில் கத்­திக்­கொண்­டி­ருந்­தார்கள்.

அவர்கள் என்னை வன்­பு­ணர்­வுக்கு உள்­ளாக்­கிய போது நான் ஐந்து மாத கர்ப்பிணி என கூட என்னால் சொல்ல முடி­யாத அள­வுக்கு அவர்­களின் கால்கள் என் கழுத்­திலும், வாயிலும் மிதி­பட்­டி­ருந்­தன.

சொந்த ஊர் மக்களாலேயே வன்புணர்வுக் கொடுமை
ஹிந்­துக்­களில் சாதி பேத­மின்றி இந்த கொடூ­ரத்தில் பங்­காற்­றினர். என் கிரா­மத்தை சேர்ந்­த­வர்­களும் அதில் ஒரு பகு­தி­யினர் தான்! எப்­படி என்னால் அவர்­களை அடை­யாளம் காண முடி­யாமல் போகும் ? அவர்கள் என் கிரா­மத்தை சேர்ந்­த­வர்­களே!

இரண்டு மணி நேரத்­திற்கு பின் என் கண்­களை திறந்த போது என் உலகம் சிதைக்­கப்­பட்­டதை கண்டேன். என்னால் நிற்க கூட முடி­ய­வில்லை! ஆனால் அவர்கள் கையில் மீண்டும் சிக்க விரும்­ப­வில்லை. நிர்­வா­ணத்தை மறைத்­துக்­கொள்ள கந்தல் துணி­யேனும் கிடைக்­குமா என தேடி­ய­லைந்தேன். மேலங்கி கிடைத்­தது.

என்னை சுற்றி என் உற­வி­னர்­களின் பிணங்கள் இருந்­தன. மண்ணில் சரிந்­தி­ருந்த அந்த உடல்­களை பார்க்­கவும் என்னால் முடி­ய­வில்லை.

ஓர் இரவும் கழிந்து, அடுத்த நாள் பகல் பொழுதும் கழிந்­தது. தண்ணீர் தாகமும் பசியும் என்னை மேலும் துன்­பு­றுத்­தி­ன. என்னால் தாங்­கிக்­கொள்ள முடி­ய­வில்லை! தாகத்­தி­லேயே செத்­து­வி­டு­வேனோ என எண்­ணத்­தோன்­றி­யது. அதனால் மலைப்­பாங்­கான அந்த இடத்தை விட்டு கீழி­றங்கி உணவும் உடையும் கிடைக்­குமா என தேடி­ய­லைய ஆரம்­பித்தேன்.

சில தொலைவில் அடி­குழாய் ஒன்றை பார்த்தேன். அது அந்த பகு­தியில் வாழும் பழங்­கு­டி­யி­னர்க்கு சொந்­த­மா­னது. என்னை கண்­டதும் நான் ஒரு முஸ்லிம் என அறிந்து என்னை தாக்க வந்­தனர்.

அதி­லி­ருந்து என்னை காத்­துக்­கொள்ள நான் முஸ்லிம் இல்லை என்றும் உங்­களை சேர்ந்­தவள் தான் என்றும் பொய் சொன்னேன் அவர்கள் மொழி­யி­லேயே. அவர்கள் நம்­பி­னார்கள். எனக்கு நீரும் உடையும் கொடுத்­தனர்.

கொஞ்சம் உறங்­கினேன். அப்­போது தான் பொலிஸ் வேன் அந்த பகு­திக்கு வந்து தேட ஆரம்­பித்­தது. ரந்­திக்புர் கிரா­மத்­தி­லி­ருந்து வந்த குடும்­பத்­தினர் கொல்­லப்­பட்­டதை குறித்து அவர்கள் அங்கே கேட்­டார்கள்.

பொலிஸ்­கா­ரர்கள் எனக்கு பாது­காப்பு தரு­வார்கள் என நம்­பினேன். அவர்­களும் என்னை அவர்கள் கொண்டு வந்த வண்­டியின் பின்­புறம் ஓய்­வெ­டுத்­துக்­கொள்ள சொன்­னார்கள். உயிர் பிழைத்­தது என் அதிஷ்ட்டம் என்­றார்கள். அவர்­க­ளுடன் அங்­கி­ருந்து புறப்­பட்டேன். லிம்­கேதா விற்கு அழைத்து சென்­றனர்.

எனக்கு உணவு கொடுத்த பின் என் கதையை கேட்­டார்கள். ஆனால் என் புகாரை ஏற்­றுக்­கொள்­வ­தற்கு பதி­லாக அவர்கள் என்னை பயம் காட்­டினர்.

ஒரு­வேளை இந்த வன்­பு­ணர்வு சம்பந்த­மான குற்­றச்­சாட்டை சொன்னால் என்­னுடல் இருக்கும் மோச­மான நிலையில் என்னை மருத்­துவ பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­து­வார்கள் என்றும் விஷ ஊசி செலுத்தி என்னை மருத்­து­வர்கள் கொல்­வார்கள் என்றும் கூறினர். நான் பயந்தேன் , எனினும் நான் சொன்­ன­வற்றை ஒன்று விடாமல் புகா­ராக ஏற்­றுக்­கொள்ளச் சொன்னேன்.

ஆனால் அவர்­களோ நான் சொன்­ன­வற்­றுக்கு புறம்­பாக 500 பேர் சேர்ந்த மக்கள் குழு என்­னையும் உற­வி­ன­ரையும் அடித்­து­விட்­ட­தாக கதை கட்டி எழு­தினர். சக்தி முழு­வதும் இழந்த என்னால் என் புகார் குறித்து பொலி­ஸா­ருடன் முறை­யிட முடி­ய­வில்லை. இவர்­க­ளிடம் அது பய­ன­ளிக்­காது என்­ப­தையும் அறிந்­துகொண்டேன்.

ஆகையால் என் எண்­ணத்தை கைவிட்டு என்னை கோத்ரா முகா­மிற்கு அழைத்­துச்­செல்­லும்­படி வேண்­டுகோள் விடுத்தேன்! நான் என் உற­வி­னர்­களை பார்க்க விரும்­பினேன். 

கண்முன்னே உறவினர் படுகொலை
நான் படிக்­கா­தவள். நான் சார்ந்த அமைப்பு பெண்­களை பள்­ளிக்கு செல்­வதை அனு­ம­திக்­காத தப்லீக் ஜமாத்தை சேர்ந்­தது. ஆனாலும் கற்­ப­ழிப்பு நடத்­தப்­பட்ட ஐந்து நாட்­க­ளுக்கு பிறகு, மெடிக்கல் செக்கப் செய்ய முடி­வெ­டுத்தேன். நான் வன்­பு­ணர்­வுக்­குள்­ளாக்­கப்­பட்­டதை உறுதி செய்யும் சான்­றி­தழை பெற்றேன். 

என் அம்மா, என் 2 சகோ­த­ரர்கள், இரு சகோ­த­ரிகள் மற்றும் என் மூன்று வயது மகள் கொல்­லப்­பட்­டனர்.

ஆனாலும் என்னால் அந்த குற்­ற­வா­ளி­களை அடை­யாளம் காட்ட முடியும். அந்த மிரு­கங்­களை பல வரு­டங்­க­ளுக்கு முன்­பி­ருந்தே எனக்கு நன்கு தெரியும். நாங்கள் ஊரில் பால் விற்று வந்தோம்.

எங்­க­ளிடம் பால் வாங்­கிச்­செல்லும் வாடிக்­கை­யா­ளர்கள் அவர்கள். ஒரு­வேளை அது அவர்­க­ளுக்கு அவ­மா­ன­மாக இருந்தால் அதற்­காக அவர்கள் இவ்­வாறு என்னை செய்­தி­ருக்க வேண்­டி­ய­தில்லை. இந்­நி­கழ்­வு­க­ளுக்­கெல்லாம் பிறகு என் தந்தை மன­நிலை குன்­றி­ய­வ­ரா­கி­விட்டார்.

எண்­ணிப்­பார்க்க முடி­யாத திருப்­பங்­க­ளு­டனும் மோச­மான சொற்ப நாட்­க­ளுக்­குள்ளும் நான் அனா­தை­யாக்­கப்­பட்­டு­விட்­டதால் சக்தி முழு­வதும் இழந்­து­விட்டேன் ! ஆனாலும் இதனை பாதி­யி­லேயே நான் கைவி­டு­வ­தாக இல்லை! எப்­படி என்னால் அவர்­களை மன்­னிக்க முடியும் ? "

முடித்தார். பத்­தி­ரிக்­கை­யாளர் ஷீலா பட்-­இடம் தனக்கு நேர்ந்­த­வற்­றை­யெல்லாம் விவ­ரித்தார் பில்கிஸ். அதன் பின்னர் தான் பலரின் கவ­னத்­திற்கு இக்­கொ­டூரம் சென்­றது. 

எதிர்­பார்த்த படியே மோடியின் காவல்­துறை 2003ல் இந்த வழக்கை "சம்­பவம் உண்­மைதான். ஆனால் கண்­டு­பி­டிக்க இய­லா­தவை" என கூறி முடி­வுக்கு கொண்டு வந்­தது. இது­பற்றி சகோ­தரி பில்கிஸ் குறிப்­பி­டு­கையில் " இரு­முறை புகார் அளித்தேன். முத­லா­வ­தாக லிம்­கேதா வில், அடுத்­த­தாக நான் தங்­கி­யி­ருந்த கோத்ரா முகாமில் .

அவர்கள் என் கைரே­கையை பெற்­றுக்­கொண்­டார்கள். ஆனால் படிப்­ப­றி­வற்­ற­வ­ளாக இருந்­ததால் அதில் என்ன எழு­தப்­பட்­டி­ருந்­தது என்­பதை நான் அறி­ய­வில்லை"

அதன் பின் பில்கிஸ் தேசிய மனித உரி­மைகள் ஆணை­யத்தை அணுக அஃது அஹ்­ம­தாபாத் சுப்ரிம் கோர்ட்டில் விசா­ர­ணைக்கு வந்­தது.

பின்னர் இவ்­வ­ழக்கு சிபிஐ க்கு மாற்­றப்­பட்ட பின் உண்­மைகள் வெளி­வர ஆரம்­பித்­தன. மருத்­து­வர்­களும் பொலிஸும் இந்­நி­கழ்­வுக்கு துணை புரிந்­ததும், தட­யங்­களை அழித்­ததும் அம்­ப­ல­மா­னது. 2 மருத்­து­வர்கள், 6 பொலிஸ் உட்­பட 20 பேர் மீது வழக்கு பதி­யப்­பட்­டது.

சிபிஐ தன் அறிக்­கையில் இந்­நி­கழ்வு குஜராத் பொலிஸ்ஸின் ஒட்­டு­மொத்த தோல்­வி­யையும் அவர்­களின் உடந்­தை­யையும் சுட்­டிக்­காட்­டி­யது. இந்த வழக்கு போக்கின் கார­ண­மாக பில்கீஸ் அச்­சு­றுத்­தல்­களை சந்­திக்க நேர்ந்­ததன் கார­ண­மாக அவ­ருக்கு CISF பாது­காப்பு கொடுக்­கப்­பட்­டது. சம்­பவம் நடந்­தது முதல் வழக்கு முடியும் வரையில் 20க்கும் அதி­க­மான இடங்­க­ளுக்கு பாது­காப்பு கருதி மாற்றினார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

பில்கிஸ் குஜராத்துக்கு வெளியே வழக்கு விசா­ரணை நடத்­தும்­படி சுப்ரிம் கோர்டில் மனு கொடுத்தார். அவரின் கோரிக்­கையை ஏற்று இவ்­வ­ழக்கு மும்­பைக்கு மாற்­றப்­பட்­டது. "நீதியின் மீதான நம்­பிக்­கையை மீண்டும் மீட்­டெ­டுக்க வைத்­தது" என இம்­மு­டிவு குறித்து கூறினார்.

இதற்­கி­டையில் பொலி­ஸாரால் பில்கீஸ் உற­வி­னர்கள் புதைக்­கப்­பட்ட பனி­வேலா கிரா­மத்தை ஏய்ம்ஸ் மருத்­து­வ­ம­னையின் டாக்டர் தோஹ்ரா குழு ஆய்வு செய்த போது அங்கே 60 கிலோ உப்பு கிடைத்­தது.

உடலை சீக்­கி­ர­மாக மக்­கச்­செய்­வ­தற்­காக திட்­ட­மிட்டு போலிஸார் இவ்­வாறு செய்­தது நிரூ­ப­ண­மா­னது. மண்ணின் ஈரப்­பதம் கார­ண­மாக அவர்­களின் எண்ணம் நிறை­வே­ற­வில்லை. பில்கிஸ் சொன்ன அடை­யா­ளங்கள் வயதும் மருத்­து­வ­குழு ஆராய்ச்சி முடி­வோடு ஒத்­துப்­போ­னது. 8 பேரின் உடல்கள் மட்டும் கிடைத்­தன. மீதம் ஆறுபேர் காணா­த­வர்கள் பட்­டி­யலில் சேர்க்­கப்­பட்­டனர். மருத்­து­வக்­கு­ழுவின் அறிக்கை இவ்­வ­ழக்கின் போக்கை மேலும் வலு­வாக்­கி­யது.

ஆறு­வ­ருட போராட்­டத்தின் பய­னாக, பில்கிஸ் வைத்­தி­ருந்த நம்­பிக்­கையை காக்கும் வண்ணம் சிறப்பு நீதி­மன்றம் குற்­ற­வா­ளி­க­ளுக்கு தீர்ப்­ப­ளித்­தது. பிடி­பட்ட 20 பேரில் 12 பேர் குற்­ற­வா­ளி­க­ளாக அறி­விக்­கப்­பட்­டனர். அவர்­க­ளுக்கு 2008, ஜன­வரி 18ல் ஆயுள் தண்­டனை விதித்­தது. ஒருவர் விசா­ர­ணையின் போதே இறந்­து­விட்­டி­ருந்தார். 7 பேர் மீது குற்றம் நிரூ­பிக்­கப்­ப­டா­ததால் விடு­விக்­கப்­பட்­டனர்.

நீதி கிடைத்த போதும் விடு­விக்­கப்­பட்ட ஆறு­பே­ருக்­காக தன் ஆதங்­கத்­தையும் சகோ­தரி பதிவு செய்தார். அந்­ந­பர்­க­ளுக்கும் தண்­டனை பெற்­றுத்­த­ரு­வதில் உறு­தியாய் உள்ளார். இனி­வரும் காலங்­களில் அடுத்­த­டுத்த கேஸ்­க­ளுக்கும் சிபி­ஐக்கு தன் முழு ஒத்­து­ழைப்பு தரு­வ­தாக கூறினார். இத்­தீர்ப்பு பற்றி ஊடகவியலாளர் கூட்டத்தில் பேசி­ய­போது " இது என் தனி­பட்ட போராட்­ட­மல்ல. பாலியல் வன்­கொ­டு­மைக்கு ஆளாக்­கப்­பட்ட பல பெண்­க­ளுக்­கான போர்.

பாலியல் வன்­முறை திட்­ட­மி­டப்­பட்டு எங்கள் சமு­தாயப் பெண்கள் மீது நடத்­தப்­பட்­டது. என்­னு­டைய இப்­போ­ராட்டம் பாதிப்­ப­டைந்த பல பெண்­க­ளுக்கு சக்­தியை கொடுக்கும். அவர்கள் தண்­டிக்­கப்­ப­டு­வதால் மட்­டுமே வெறுப்பு ஓய்ந்து விடாது.

ஆனால் நீதி இன்னும் சாக­வில்லை என்­ப­தற்­கான சிறிய அறி­கு­றிதான் இது..!" என்றார். உண்மை தான் ! எவ்­வித பண­ப­லமும் இன்றி, எந்த ஒரு அதி­கார வர்க்­கத்தின் ஆத­ரவும் இன்றி தனித்து போராடி தனக்­காக நீதியை தனி­யாளாய் நிலை­நாட்­டிய பில்­கிஸ்ஸின் செயல் ஒவ்­வொரு பாதிப்­ப­டைந்­த­வர்­க­ளுக்கும் ஒரு முன்­மா­திரி தான்.

மோடிக்கு தலையிடி
மோடிக்கு பெரும் தலை­வலி என்றே தான் எண்­ணத்­தோன்றும் சகோ­தரி பில்கிஸ் அவர்கள் தரும் பதி­ல­டி­க­ளைப்­பார்த்தால்! முத­ல­மைச்­சர்க்­கான தேர்தல் சம­யத்தில், "நீங்கள் ஓட்டுப்போடுவீர்களா?" என கேட்கப்பட்ட போது, "நான் ஏன் ஓட்டளிக்க வேண்டும் ?, பல கொடுமைகள் எனக்கு நிகழ்த்தியதோடு என் குடும்பத்தாரை என் கண் முன்னே கொடூரமாய் கொன்றார்கள். இவற்றுக்கு பின்னாவது குஜராத் அரசு என்னை பாதுகாத்திருக்க வேண்டும், எனக்கு நீதி பெற்றுத் தந்திருக்க வேண்டும். இவையெல்லாம் செய்ய வக்கற்ற அரசு இயந்திரத்திற்காகவா நான் ஓட்டளிக்க வேண்டும். முடியாது. நான் விரும்பவுமில்லை" என்றார் காரமாக.

இப்படியான விரக்தியாளர்களை தான் இந்த மதவாத அரசு உருவாக்கியுள்ளது. உங்களுக்கு நீதி கிடைக்க வேண்டி மோடியின் ஆதரவுக்காக அவரை சென்று சந்திப்பீர்களா என கேட்டபோது " தன் சொந்த மாநிலத்தில் எனக்கு நீதியும் பாதுகாப்பும் தர முடியாத நபரை நான் எப்போதும் சந்திக்க விரும்பவில்லை.

நான் அவரை நம்பப்போவதுமில்லை " என்ற அவரின் ஒவ்வொரு சொல்லும் மோடியின் ஒவ்வொரு பிம்பத்தையும் உடைத்துக்கொண்டே வந்தன.

இன்று இவரை நாம் மறந்திருக்கலாம், இவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை மக்கள் புறக்கணித்திருக்கலாம். நமக்கொரு துன்பம் நிகழாத வரை அத்துன்பத்தின் ரணங்கள் நமக்குப் புரியப்போவதில்லை! ஆனால் அவருக்கான அநீதிகளை ஒதுக்கிவிட்டு கொடூரனை ஆட்சிகட்டிலில் அமர வைக்க துடித்த ஒவ்வொரு சாமானியனும் குற்றவாளிகளே தான். வெட்கபட வேண்டும் நாம்...

மூன்று பெண்குழந்தை ஒரு ஆண் குழந்தையுடன் 20க்கும் மேற்பட்ட முறை வீடும் ஊரும் மாறி மாறி அலைக்கழிக்கப்பட்டும், அவ்வப்போது பொலிஸ் நெருக்கடிகளோடும், இதற்கு சாவே மேலோ என்ற சிந்தனையில் அடிக்கடி வயப்பட்டும் கூட "வாழ்வதற்காய் போராட வேண்டுமெனில் போராடத் தயங்கமாட்டேன்"

என திடமாய் வாழ்நாளை கழித்துக்கொண்டிருக்கிறார்...  14 வருடத்தில் ஏதேதோ நடந்துவிட்டது! குற்றவாளிகளெல்லாம் சுதந்திரமாய்... பில்கிஸ் மட்டும் கேள்விக்குறியாய்......... டெல்லி மாணவி நிர்பயா இறந்ததே நலம் தான்! இந்தியாவில் நீதி வேண்டுவோர் தான் குற்றவாளிகள். 

சகோதரி பில்கிஸ்ஸின் நல்வாழ்வுக்காய் பிரார்த்திப்போம்.

-விடிவெள்ளி-

1 கருத்துரைகள்:

Indian PM Modi and his puppets are notorious criminals. They must be hanged in the presence of ICC jurists.

Post a Comment