Header Ads



வகுப்பறையில் மாணவியை, அடித்துக்கொலை செய்த மாணவர் - மோடியின் இந்தியாவில் அவலம்..!

தமிழகத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள கரூரில் உள்ள கல்லூரி ஒன்றில், மாணவி ஒருவர் அடித்து கொல்லப்பட்டார்.

பட்டப்பகலில், கல்லூரியின் வகுப்பறையில் அனைவருக்கும் முன்பாக நடைபெற்ற இந்த சம்பவம் மிகப்பெரிய வெறிச்செயலாக பார்க்கப்படுகிறது.

சோனாலி என்கிற அந்த மாணவியை அடித்துக் கொலை செய்த உதயகுமார் என்கிற அந்த இளைஞரும், இச்சம்பவம் நடைபெற்ற கல்லூரியில் படித்து வரும் மாணவர் என தெரிகிறது.

உதயகுமார் என்கிற அந்த மாணவர், சில காலத்திற்கு முன்பாக அந்த கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார் என்றும், கல்லூரியிலிருந்து முழுமையாக நீக்கம் செய்யப்பட்டு விட்டார் என்றும் இருவேறு தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

கரூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவி சோனாலி, இன்று தனது வகுப்பறையில் நடைபெற்று வந்த பயிற்சி தேர்வு ஒன்றில் பங்கேற்றிருந்தார்.

அப்போது திடீரென மரக்கட்டையுடன் வகுப்பறைக்குள் நுழைந்த உதயகுமார், தன்னை தடுக்க வந்தவர்களையும் தாக்கிவிட்டு, மாணவி சோனாலியின் தலையில் அடித்து சாய்த்துள்ளார்.

படுகாயமடைந்த சோனாலிக்கு உயர் மருத்துவ சிகிச்சை அளிக்க மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக மதுரை தனியார் மருத்துவமனை அருகே செய்தியாளர்களிடம் பேசிய மாணவி சோனாலியின் உறவினர்கள், என்ன நடந்தது என்பது தொடர்பான தகவல் தங்களுக்கு இன்னமும் தெரிவிக்கப்படவில்லை என குறிப்பிட்டனர்.

மேலும் கல்லூரி நிர்வாகத்தினர் யாரையும் தங்களால் இப்போது உடனடியாக தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்தனர்.

மாணவர் கைது

மாணவியை கட்டையால் தாக்கிய உதயகுமாரை கரூர் காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள்.

கொலை சம்பவம் பகிரங்கமாக நடைபெற்ற காரணத்தால், கொலைக்கான காரணம் குறித்தே காவல்துறையினர் விசாரணை மேற்கொள்வதாகவும் கூறப்படுகிறது.

ஒருதலை காதல் விவகாரமாக இருக்க கூடுமோ என்கிற கோணத்திலும் விசாரணைகள் நடைபெறுகின்றன.

சென்னையில் ஐ.டி.துறையில் பணியாற்றி வந்த ஸ்வாதி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான பரபரப்பு அடங்குவதற்குள் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதால், இது அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

குறிப்பாக, பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து பல்வேறு தரப்பிலும் கவலைகள் வெளியிடப்படுகின்றன.

3 comments:

  1. தலைவன் எவ்வளியோ அவ்வளியே மக்களும்

    ReplyDelete
  2. ஒரு நாட்டில் நடக்கும் குற்றச்செயல்களுக்கெல்லாம் நாட்டின் தலைவர் பொறுப்பேற்க வேண்டும் என நினைப்பது எவ்வளவு முட்டாள்தனம் என்பதை விட ஒருவருக்கு கரி பூசுவது என்று தீர்மானித்துவிட்டால் எவ்வளவு கீழ் மட்டத்திட்கும் இறங்கலாம் என நினைப்பது கேவலமான ஒரு நிலை. இஸ்லாமிய நாடுகளில் நடக்கும் குற்றச்செயல்களை எவ்வாறு பட்டியலிடுவது?

    ReplyDelete
  3. குமார் சொன்னது சரி. நாட்டில் நடக்கும் எல்லா குற்றங்களுக்கும் அந்த நாட்டின் தலைவர் பொறுப்பல்ல. ஆனால் இஸ்லாமிய நாடுகளில் மற்ற நாடுகளைவிட குற்றச் செயல்கள் குறைவாகவே நடக்கின்றன.

    ReplyDelete

Powered by Blogger.