Header Ads



இலங்கை - இந்தியா பாலம் அமைக்கப்படாது


இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பாலம்  அமைக்கும் திட்டம்  எதுவும்  கிடையாது என திட்டவட்டமாக திராணிக்கும் அரசாங்கம், ஹனுமானின் வாலில் தொங்கிக்  கொண்டேனும்  ஆட்சியை பிடிக்கவே  பொது எதிர்க்கட்சி முயற்சிக்கின்றது என்றும் அரசு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சபை முதல்வரும் உயர்கல்வி மற்றும்  நெஞ்சாலைகள் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல மேலும்  தெரிவிக்கையில்,

 இலங்கைக்கும் இந்தியாவுக்கும்  இடையே  பாலம் அமைக்கும் திட்டம்  எதுவும் கிடையாது. அதுத் தொடர்பில் நாம் சிந்திக்கவும் இல்லை.  திட்டமும் கிடையாது. 

ஆனால் பொது எதிர்க்கட்சியென்ற  கூட்டம் ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு   அமைச்சுக்களை பிடித்துக் கொண்டு தடுமாறுகின்றது. 

ஒரு கால கட்டத்தில் மத்திய வங்கி பிணை முறிவுகளில் தொங்கிக் கொண்டிருந்தார்கள். 

அதன் பின்னர் வற்வரியை  பிடித்துக் கொண்டனர். 

இது முடிய வெளிநாட்டு நீதிபதிகள் இலங்கை வந்து விசாரணைகளை நடத்தவுள்ளனர் என்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசியல் செய்தனர். 

இன்று இறுதியில் தொங்குவதற்கு எதுவும் இல்லாமல்  ஹனுமானின்  வாலில்  தொங்கியுள்ளனர். 

இந்தக் கூட்டம் காலையில் எழுந்தவுடன் எதில் தொங்கிக் கொள்வது எதனை வைத்து அரசியல் செய்வது  என்ற சிந்தனையுடனேயே  நித்திரையிலிருந்து  விழிக்கின்றன. 

இன்று ஹனுமானின் வாலில் தொங்கிக்  கொண்டாவது ஆட்சியை  பிடிக்கும் முயற்சியையே முன்னெடுக்கின்றனர். 

இலங்கைக்கும் இந்தியாவுக்கும்  இடையே  பாலம் அமைக்கும் தேவையெதுவும் எமக்கு  இல்லை. 

No comments

Powered by Blogger.