Header Ads



மைத்திரிபால சிறிசேன, எனது பதவியை பறித்துக்கொண்டார் - மஹிந்த

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி தம்மிடமிருந்து பறிக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

2015ம் ஆண்டு வரையில் தாம் கட்சியின் தலைவராக கடமையாற்றியதாகவும் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைத் தழுவியதன் பின்னர், மைத்திரிபால சிறிசேன தமது பதவியை பறித்துக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கட்சியின் தலைமைப் பொறுப்பினை தாம் மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியை சீர்குலைத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

தாம் இரண்டு தடவைகள் தேர்தலில் தோல்வியடைந்துள்ளதாகவும் இதனால் கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம்மை வற்புறுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத் தேர்தலில் சொந்தத் தொகுதியிலேயே தோல்வியைத் தழுவியிருந்தார் எனவும், தாம் ஒரு தடவையே தேர்தல் தோல்வியை எதிர்நோக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. Pl, pl I like to see you crying though!

    ReplyDelete
  2. அட பாவமே. மஹிந்த ராஜபக்சவே ஒரு அப்பாவி. அவரிடம் இருந்து பதவியை பறிச்சிட்டாரே

    ReplyDelete
  3. உடனடியாக ஜனாதிபதி ஆணைக்குழுவை நோ நோ மஹிந்த ஆணைக்குழுவை நியமித்து விசாரணை செய்து தீர்வு காண வேண்டும்

    ReplyDelete
  4. கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் .நீ விதைத்ததை அறுவடை செய்வாய் இன்னும் நீயும் உன் கூட்டமும்,நிறைய அநுபவிக்க தயாராக இருங்கட பன்றிகளா

    ReplyDelete

Powered by Blogger.