Header Ads



ஜெனீவா மாநாடும், யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திலுள்ள சவால்களும்..!!


-Jan Mohamed-

யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு பல சவால்களும், கடும் நிபந்தனைகளும் தடைக் கற்களாக காணப்படுகின்றன.

1. மீள்குடியேற்றத்துக்கான நிபந்தனைகள்

யுத்தம் 2009 ஆம் ஆண்டு முடிவடைந்த பின்னர் 2000 யாழ்ப்பானத்தைச் சேர்ந்த குடும்பங்கள் 2010 1 ஆம் ஆண்டளவில் மீள்குடியேற்றத்துக்கு விண்ணப்பித்திருந்தனர். இவர்களின் சுமார் 50 குடும்பங்களுக்கு மாத்திரம் மீள்குடியேற்ற நிதி என்ற பெயரில் 20000 ரூபா 2011 இல் வழங்கப் பட்டது. அதன் பிறகு பல்வேறு காரணங்கள் கூறப் பட்டு இந்த உதவி ஏனைய  முஸ்லிம்களுக்கு வழங்கப் படவில்லை. 

அத்துடன் மீள்குடியேற விண்ணப்பித்திருந்தவர்கள் யாழ் ஒஸ்மானிய கல்லூரி ஹதீஜா கல்லூரி மற்றும் பொது இடங்கள் பள்ளிவாசல்கள் என்பவற்றில் தங்கியிருந்த நிலையில் அவர்களின் வீடுகள் திருத்திக் கட்ட அல்லது புதிதாக அமைக்க எந்த உதவியும் வழங்கப் படவில்லை. 

அதேவேளை பாடசாலைகள் மீள ஆரம்பிக்க வேண்டியிருந்ததால்  வெளிமாவட்டங்களீல் இருந்து மீள்குடியேற வந்த முஸ்லிம்கள் பாடசாலைக் கட்டிடங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலையிருந்தது. மேலும் ஆறு மாதங்களுக்கு மேலாக  பலமாதங்கள் வீடுகட்டும் உதவிக்காக காத்திருந்த போதும் யாழ் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் மற்றும் மாவட்டச் செயலாளர் போன்றோர் மீள்குடியேற்ற உதவிகளை வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  

மேலும் 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டுவரை வீடுகளைக் கட்ட எந்த உதவியும் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழோ அல்லது வேறு அரசாங்க நிதிகளிலோ வழங்கப் படவில்லை. எம்.எப்.சி.டி என்ற நிறுவனம் மட்டுமே சில வீடுகளைக் கட்டிக் கொடுத்தது. அவர்களும் யாழ்ப்பாணத்தில் அரச அதிகாரிகளினால் ஏற்படுத்தப் பட்ட தடைகளினால் தமது உதவித் திட்டங்களை கைவிட்டு விட்டு அங்கிருந்து வெளியேறினார்கள்.  

மீள்குடியேறூம் நோக்கில் யாழ் சென்ற 2000 குடும்பங்களும் தங்குமிடமின்றியும், தொழில் இன்றியும், மலசல கூட வசதிகள் இன்றியும் மிகவும் கஷ்டப் பட்டனர். அதேவேளை அதிகாரிகளின் இழுத்தடிப்புப் போக்கினால் இனிமேலும் உதவிகள் கிடைக்காது என்று ஏமாற்றமடைந்த 1600 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறி அகதிகளாக தஞ்சமடைந்திருந்த ஊர்களுக்கு திரும்பி விட்டனர். 

ஏனைய ஐநூறு குடும்பங்களில்   காணிகள் இல்லாத பலர் உள்ளனர். இவர்கள் ஹதீஜா கல்லூரியிலும் (35 குடும்பங்கள்) , சின்னபள்ளிவாசல் மையவாடிக் காணியிலும் (40 குடும்பங்கள்),   இன்னும் சிலர் வேறு சில பொதுக் கட்டிடங்களிலும் மேலும் சிலர் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளிலும் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் ஏறக் குறைய 100 குடும்பங்களுக்கே வீடமைப்பு உதவிகள் ஐந்து வருடத்தின் பின்னர் தற்போது தான் வழங்கப் பட்டு வருகின்றன. இந்த 74 வீடமைப்புத் திட்டமும் 16.08.2016 வரை பூர்த்தி செய்யப் படவில்லை.  இவை இன்னும் எத்தனை மாதத்தில் பூர்த்தி அடையும் என்பது யாழ்ப்பாணத்திலுள்ள அரசாங்க அதிகாரிகளுக்கே வெளிச்சம். 

மீள்குடியேற முயற்சி செய்யும் யாழ் முஸ்லிம்களுக்கு தமிழ் அதிகாரிகள் விதிக்கும் நிபந்தனைகளாவன. 

அ) மீள்குடியேறுவோர் தமது பதிவுகள் அத்தனையையும் யாழ்ப்பாணத்தில் கொண்டிருக்க  வேண்டும்.

ஆ) யாழ் கிராம அதிகாரிகளினால் வழங்கப் 'ஆ அட்டை' வைத்திருக்க வேண்டும் . 

இ) மீள்குடியேற விரும்புவோர் தம்து காணியில் கொட்டில் அமைத்து வாழ வேண்டும்.

 இவ்வாறு 2010 ஆம் ஆண்டு அமைக்கப் பட்ட கொட்டில்கள் ஏராளம் மழை வெய்யில் காரணமாகவும் திருடர்களின் களவுகளினாலும் அழிவடைந்துவிட்டன. எத்தனை மாதங்கள் தான் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கொட்டிலில் வாழ்வது என்பதை தமிழ் அதிகார்கள் சிந்திக்கவே மறுத்தனர். 
ஈ) மேலும்  பல நிபந்தனைகள் 

2. காணியில்லாதவர்கள்

1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30  ஆம் நாள் யாழ்ப்பாணத்திலிருந்து விடுதலைப் புலிகள் எல்.ரி.ரி.ஈ எனும்  தமிழ் ஆயுதக் குழுவால் ஆயுத முனையில் வெளியேற்றப் பட்ட முஸ்லிம்கள் 20 வருடத்தின் பின்பே மீள்குடியேற முயன்றனர். கடந்த 1990 இல் 3500 குடும்பங்களைக் கொண்டிருந்த யாழ்ப்பாண முஸ்லிம்கள் தற்போது 6500 குடும்பங்களைக்  கொண்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான காணிகள் யாழ்ப்பாணத்தில் இல்லை. 2010 ஆம் ஆண்டு மீள்குடியேற விண்ணப்பித்திருந்தவர்களில் ஏறக் குறைய 1000 குடும்பங்கள் காணிகள் இல்லாதவர்கள். தற்போதும் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் குடும்பங்களில் இருநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் சொந்தக் காணி இல்லாதவர்கள். இவர்களுக்கு யாழ் மாவட்டத்தில் சொந்தமாக காணிகள் வழங்கப் பட்டு அங்கு வீடுகளும் அமைத்துக் கொடுக்கப் படவேண்டும். 

உண்மையான பிரச்சினை

யாழ்ப்பாண முஸ்லிம்களின் சொத்துக்கள் பணம் நகை வாகனக்கள், சைக்கில்கள், மோட்டார் சைக்கில்கள், கதிரைகள் மேசைகள் , பல்புகள், பேன் மின்விசிறிகள், பிரிட்ஜுகள், அடுப்புகள், சட்டிபானைகள், அலுமாரிகள், கதிரைகள், கட்டில்கள் , உடைகள், சாப்பாட்டுப் பொருட்கள் போன்ற அனைத்தும் கொள்ளையடிக்கப் பட்ட பின்னரே வெளியேற்றப் பட்டனர். 2010 ஆம் ஆண்டு திரும்பிச் சென்று பார்த்த போது வீடுகள் பள்ளிவாசல்கள் பொது சேவைக் கட்டிடங்கள் கடைகள் என்பன அழிக்கப் பட்டே காணப் பட்டது. 

இது மீள்குடியேற்றப் பிரச்சினை மட்டுமல்ல. மேற்படி அழிக்கப் பட்ட வீடுகளை திருத்த உதவி வழங்க வேண்டியது அரசாங்கத்தினதும் உதவி வழங்கும் நிறுவனங்களினதும் கடைமையாகும். இந்த வெளியேற்றத்துக்கு நீதி பெற்றுக் கொடுக்கவேண்டிய கடைம ஜெனீவா மாநாட்டுக்கும் உண்டு.

2 comments:

  1. (1) ஜெனிவா தீர்மாணங்கள் வரும் போது அதில் உங்களது கோரிக்கைகளையும் சேர்க்காமல், ராஜபக்‌ஷவின் சலுகைகளுக்காக அதனை எதிர்த்து விட்டு இப்போது வெட்கமற்று அதைப்பற்றி பேசுகிறார்கள்.

    (2) 1990 யில் 3500 குடும்பங்கள் இருந்தால் இப்போது அவர்களைத்தானே குடியேற்றுவது நியாயம். மிகுதியானவர்கள் வீடு வாங்கியோ அல்லது வாடகை எடுத்தோ தான் குடியேற்றுவது தான் நியாயம். இப்படி கள்ளவேலைகள் செய்து தாமதங்களை ஏற்படுத்திவிட்டு NPC யினர் மேல் பொய்
    குற்றம் சொல்லுவது அநியாயம்.

    ReplyDelete
  2. அஜன் அந்தோனிராஜ் அவர்களே (1)ஜெனிவா தீர்மாணத்தில் எதிராக முஸ்லீம்கள் வாக்களித்தார்கள் என்று கூறியுள்ளிர்கள் முதலில் ஒன்றை விளங்கிக் கொள்ளுங்கள்
    புலிகளுக்கு ஆதரவாக எக்காலத்திலும் முஸ்லீம்கள் வாக்களிக்கமாட்டார்கள் அதைமுதலில் விளங்கிக் கொள்ளுங்கள் அது மகிந்த அரசோ அல்லது மைதிறி அரசாக இருந்தாலும் சறி அதை முதலில் விளங்கிக் கொள்ளுங்கள்,

    (2) 90 றில் 3500 குடும்பம் எப்படி உருவாகிட்டுதோ அதேபோல் பாசிச புலிகளால் வெறும் 500/-பணத்துடன் 2மணித்தியாளத்தில் ஆயுத முனையில் அடித்து விறட்டாவிட்டால் இண்று 26 வருடம் அதே இடத்தில் 9000 குடும்பம் அதே இடத்தில் எப்படியோ வாழ்ந்துதான் இருப்பார்கள், முழுச்சொத்தையும் சூரையாடி விட்டு
    முஸ்லீம்கள் மேல் கள்ளப்பட்ட சுமத்துவது என்ன நியாயம்,

    ReplyDelete

Powered by Blogger.