Header Ads



அபிவிருத்திக்கான ஆரம்பக்கட்ட வேலைகள் தொடக்கம்

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) மேற்கொண்ட முயற்சியின் பலனாக மஞ்சந்தொடுவாய் சவுண்டஸ் மைதானத்தின் அபிவிருத்திக்கான ஆரம்பக்கட்ட வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. அந்த வகையில், விளையாட்டுத்துறை அமைச்சின் கொழும்பு அலுவலகத்திலிருந்து வருகை தந்த தொழில் நுட்பக்குழு கடந்த 09.08.2016 அன்று சவுண்டஸ் மைதான நில அளவை வேலைகளை மேற்கொண்டனர்.

மஞ்சந் தொடுவாய் சவுண்டஸ் மைதானம் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக எவ்வித அபிவிருத்தியும் காணாமல் மிகமோசமாக இருந்து வருகிறது. இது தொடர்பில் தீவிர கவனம் செலுத்திய NFGG யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் இம்மைதானத்தை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சில மாதங்களுக்கு முன்னால் சவுண்டஸ் விளையாட்டுக்கழக உறுப்பினர்களிடம் உறுதியளித்திருந்தார். 

அதற்கிணங்க விளையாட்டுத்துறை அமைச்சர் தயசிறி ஜயசேன அவர்களை அழைத்து வந்து இம்மைதானத்தின் நிலமைகளை நேரில் பார்வையிடச் செய்ததோடு இதனை சகல வசதிகளும் கொண்ட ஒரு மைதானமாக அமைத்துத் தருமாறு அமைச்சரிடம் வேண்டுகோளும் விடுத்திருந்தார். இதனை ஏற்றுக் கொண்ட அமைச்சர் அவர்கள் இம்மைதான அபிவிருத்திக்கான சகல திட்டமிடல்களையும் உடனடியாக பூர்த்தி செய்வதாகவும் அடுத்த வருட ஆரம்பத்தில் இதற்கான நிதியினை ஒதுக்குவதாகவும் உறுதியளித்திருந்தார். அந்த உறுதி மொழிக்கேற்பவே கடந்த 09.08.2016 அன்று சவுண்டஸ் மைதான நில அளவை வேலைகள் மேற் கொள்ளப்பட்டன.

இப்பணியின் போது NFGG யின் காத்தான்குடி பிராந்திய தலைமைத்துவ சபைச் செயலாளர் MACM ஜவாஹிர் அவர்களும் அதன் சிரேஸ்ட உறுப்பினர்களான ACM முஹ்ஸின் மற்றும் AGM பழீல் ஆகியோரும் அத்தோடு சவுண்டஸ் விளையாட்டுக் கழக பிரதிநிதிகளும் பிரசன்யமாகியிருந்து தொழில் நுட்பக் குழுவினருக்கு ஒத்தாசைகளை வழங்கினர்.

No comments

Powered by Blogger.