Header Ads



சிங்ஹலே பற்றி அறிக்கை கோரும் ரணில், முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வாதம் பற்றி ஆராயவும் உத்தரவு

- ARA.Fareel-

இன­வாத செயற்­பா­டுகள் மற்றும் இன­வாத பிர­சா­ரங்­க­ளுக்கு எதி­ராக அண்­மையில் கொழும்பில் நடை­பெற்ற சிவில் அமைப்­பு­களின் அமைதிப் பேர­ணியை 'சிங்­ஹ லே' அமைப்­பினர் குழப்பி முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வாத கருத்­துக்­களை வெளி­யிட்டு அச்­சு­றுத்­தி­யமை தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு அறிக்­கை­யொன்­றினைச் சமர்ப்­பிக்கும் படி பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பொலிஸ்மா அதிபர் பூஜித ஜய­சுந்­த­ரவைப் பணித்­துள்ளார். 

நேற்று முன்தினம் அல­ரி­மா­ளி­கையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தலை­மையில் நடை­பெற்ற ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கலந்து கொண்ட கூட்­டத்­திலும் கொழும்பில் நடை­பெற்ற இன­வா­தத்­துக்கு எதி­ரான அமைதிப் பேர­ணியை சிங்­ஹலே குழப்­பி­யமை தொடர்பில் கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­டன. 

வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர அங்கு கருத்து தெரி­விக்­கையில் 

‘நாட்டில் மீண்டும் இன­வாதம் தலை­தூக்கி வரு­கி­றது. இன­வா­தத்­துக்கு அர­சாங்கம் ஒரு போதும் இட­ம­ளிக்­கக்­கூ­டாது. அர­சாங்கம் இதனை தடை­செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும். கொழும்பில் இடம்­பெற்ற இன­வாதச் செயற்­பா­டுகள் மற்றும் இன­வாத பிர­சா­ரங்கள் என்­ப­வற்­றுக்கு எதிர்ப்பு தெரி­வித்து மேற்­கொள்­ளப்­பட்ட அமைதிப் பேரணி சிங்­ஹலே அமைப்பைச் சேர்ந்­த­வர்­களால் குழப்­பி­ய­டிக்­கப்­பட்­டுள்­ளது.

அவர்­களால் அச்­சு­றுத்­தல்கள் விடுக்­கப்­பட்­டுள்­ளன. ஆனால் பொலி­ஸா­ரினால் அவர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்றார். 

இதற்குப் பதி­ல­ளித்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இச் சம்­பவம் தொடர்­பான அறிக்­கை­யொன்று பொலிஸ்மா அதி­ப­ரிடம் கோரப்­பட்­டுள்­ள­தா­கவும் இன­வா­தத்­துக்கு எதி­ராக நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும் எனவும் தெரி­வித்தார். 

கடந்த 15 ஆம் திகதி கொழும்பு பௌத்­தா­லோக மாவத்­தையில் சிவில் அமைப்­புகள் ‘நாமெல்­லோரும் ஒரே இரத்தம்’ என்ற தொனிப்­பொ­ருளில் அமைதிப் பேரணி ஒன்­றினை ஏற்­பாடு செய்­தி­ருந்­தன.

இப்­பே­ர­ணியில் அனைத்து இனத்­த­வர்­களும் கலந்து கொண்­டி­ருந்­தனர். நாம­னை­வரும் ஒரே இரத்­தத்தைச் சேர்ந்­த­வர்கள். எல்­லோ­ரி­னது இரத்­தமும் சிவப்பு என்று அவர்கள் பதா­தை­களை ஏந்­தி­யி­ருந்­தனர். 

அமைதிப் பேரணி ஆரம்­பித்த சிறிது நேரத்தில் பௌத்த குரு­மார்கள் அடக்­கிய சிங்­ஹலே அமைப்­பினர் அவ்­வி­டத்­துக்கு வந்து அமை­திப்­பே­ர­ணியை குழப்­பினர்.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கருத்­து­களை வெளியிட்டனர். அரை மணி நேரத்துக்குள் முஸ்லிம்களை அழித்து விடமுடியும் என்றும் அச்சுறுத்தினர்.

இதனையடுத்து பொலிஸார் அவர்களை அவ்விடத்திலிருந்தும் அப்புறப்படுத்தினார்கள். அவர்கள் பொலிஸாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

1 comment:

Powered by Blogger.