Header Ads



சுவிஸில் புர்காவுக்கு தடைவிதிக்க 70 வீத ஆதரவு - பொது வாக்கெடுப்பு வருகிறது


இஸ்லாமியர்களின் முழு நீள உடையான புர்காவை சுவிட்சர்லாந்தில் தடை செய்வது குறித்து பெரும்பான்மையான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளது வெளியான ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் இஸ்லாமியர்களின் புர்கா உடையை தடை செய்வது குறித்த ஆய்வில் 70 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

டிசினோ மாகாணத்தில் யூலை முதல் திகதியில் இருந்தே குறிப்பிட்ட சில பகுதிகளில் புர்கா உடைக்கு தடை விதித்துள்ளனர். இந்த நிலையில் குறிப்பிட்ட அமைப்பு ஒன்று நாடு முழுவதும் புர்கா உடைக்கு தடை கோருவது குறித்து சுவிஸ் மக்களிடம் ஆய்வு நடத்தியுள்ளது.

ஒட்டுமொத்தமாக 15,824 பேர் கருத்து தெரிவித்துள்ள இந்த ஆய்வில் 55 சதவிகிதம் பேர் முழுமையாக ஆதரித்துள்ளனர். மேலும் 16 சதவிகிதம்பேர் தடை இருந்தால் சிறப்பு என கருத்து தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக ஜேர்மானியர்கள் அதிகம் கொண்ட பகுதியில் வாழும் மக்களில் 72 சதவிகிதத்தினர் இந்த முடிவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி பிரஞ்சு மக்கள் அதிகம் வாழும் பகுதியில் 70 சதவிகிதம் பேர் தடைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதில் அரசியல் சார்புடையவர்களும் அதிகம் கலந்துகொண்டது மட்டுமின்றி பெருவாரியான எண்ணிக்கையில் புர்கா உடை தடைக்கு ஆதரவும் தெரிவித்துள்ளனர். இதில் கிரீன் கட்சி ஆதரவாளர்கள் மட்டும் 33 சதவிகிதம் பேர் இந்த முடிவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சோசலிஸ்ட் கட்சியின் தலைவர் Christian Levrat, புர்கா உடை என்பது பெண்களுக்கு நடமாடும் சிறை போன்றது எனவும், இதை முற்றிலுமாக அகற்ற வேண்டும் எனவும், அது தடை விதிப்பதால் அல்ல கல்வி மற்றும் ஆதரவினால் மட்டுமே நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

புர்கா தடை குறித்து ஆய்வு மேற்கொண்ட குறிப்பிட்ட அமைப்பானது அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு உள்ளாக 100,000 கையெழுத்துக்களை பொதுமக்களிடம் இருந்து சேகரித்து சுவிட்சர்லாந்தில் பொது வாக்கெடுப்பிற்கு முயற்சி மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளது.

6 comments:

  1. எந்த உடையை வேண்டுமானாலும் அணிய சுதந்திரம் அனைவருக்கும் தேவை. ஆனால் சுய அடையாளத்தை மறைக்கும் ஆடைகள், முகமூடிகள் என்பவை பொது இடங்களுக்கு பொருத்தமற்றவை. இந்த விடயத்தில் மதத்தை கொண்டுவந்து நுழைக்காமல், நடைமுறை ரீதியாக சிந்தித்தாலே போதும்.

    ReplyDelete
  2. நீ முதலில் இஸ்லாத்துக்குள் நுளைந்து கொண்டு அதுக்கு அப்புறம் இதைப்பற்றி பேசு,சும்மா சும்மா அல்லாஹ்வின் சட்டத்தில் கை வையாதே

    ReplyDelete
  3. Mr.hari there lot of contradiction in ur religious pls this our kind request go n correct it pls

    ReplyDelete
  4. abdulla என்னுடைய மதத்தை நான் தூக்கிப் பிடித்து பிரச்சாரம் செய்யவும் இல்லை, பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான எதையும் அந்நிய நாடுகளில் செய்து, அந்த மக்களின் வாழ்க்கையை குழப்பவும் இல்லை.
    லண்டனில் நாடு ரோட்டில் தீ மிதிப்போம் என்றோ, டொராண்டோவில் பறவைக் காவடி ஆடுவோம் என்றோ யாராவது சொன்னால் அதையும் எதிர்ப்போம், எங்களது மதம் எப்படிப் போனாலும், என்னிடம் குறுகிய மதவெறிப் பார்வை இல்லை.

    ReplyDelete
  5. Hari Thivahar உங்களிடம் குறுகிய மத வெறிப் பார்வை இல்லை. நல்ல விடயம். ஆனால் மதத்தை பிரச்சாரம் செய்வது என்பது வேறு விடயம். நாம் பின்பற்றும் மதத்தினால் நமக்கு இறைவனுடைய திருப்தி கிடைக்கும் என்று கருதினால் அந்த இறைவனுடைய திருப்தி மற்ற மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பது தவறா? முஸ்லிம்கள் இஸ்லாத்தைப் பின்பற்றினால் இறைவனுடைய திருப்தி கிடைக்கும் என்று நம்புகிறார்கள். இதனால்தான் முஸ்லிம்கள் இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்கிறார்கள். எல்லா மக்களும் இறைவனுடைய திருப்தியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இது தவறா? எனக்கும் உங்களைப் போன்று குறுகிய மத வெறி இல்லை. ஆதலால் உங்கள் மதத்திலுள்ள முக்கிய விடயங்களை எனக்குச் சொல்லுங்கள். நான் கேட்பேன். அது போல நீங்கள் ஆசைப்பட்டால் இஸ்லாத்திலுள்ள முக்கிய விடயங்களை நாங்கள் சொல்கிறோம்.

    ReplyDelete

Powered by Blogger.