Header Ads



ஈரானில் ஒரே நாளில் 20 மரண தண்டனை

ஈரானின் பல்வேறு கொலை சம்பவங்களில் ஈடுபட்டதாவும், தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவித்ததாகவும் தொடரப்பட்ட வழக்கில் மரண தண்டனை பெற்ற 20 தீவிரவாதிகளுக்கு, ஒரே நாளில் தண்டனை நிறைவேற்றப்பட்டது என்று ஈரான் ஊடகம் தகவல் வெளியிட்டு உள்ளது. இவர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை தூக்கிலிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

“மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் கொலை செய்தவர்கள்... பெண்கள் மற்றும் குழந்தைகளை கொலை செய்தவர்கள், அழிவிற்கு காரணமானவர்கள். நாட்டின் பாதுகாப்பிற்கு எதிராக செயல்பட்டவர்கள், குர்திஷ் பிராந்தியத்தில் மதத் தலைவர்களை கொலை செய்தவர்கள்,” என்று அரசு தலைமை வழக்கறிஞர் முகமது ஜாவித் மாண்டஷேரி கூறியதாக ஐ.ஆர்.ஐ.பி. செய்தி வெளியிட்டு உள்ளது.

இதுபற்றி ஈரான் புலனாய்வுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், 2009-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த குண்டுவெடிப்புகள், கொள்ளைச் சம்பவங்கள் உள்ளிட்ட 24 ஆயுத தாக்குதல்களை பட்டியலிட்டுள்ளது. 

மேலும், இந்த தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும், மற்றவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.