Header Ads



2 முஸ்லிம் கிராமங்களை தெரிவுசெய்து, அநீதி செய்துவிட்டார்கள் - இரா.துரைரெட்ணம்

கிழக்கு மாகாண சபையின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் சமாந்தரமான கிராம அபிவிருத்தித் திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டம் விகிதாசார முறையில் தெரிவு செய்யப்படாமையால், தமிழ்க் கிராமங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அம்மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.

இம்மாவட்டத்துக்கு சமாந்தரமான கிராம அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி, விகிதாசார முறையில் ஒதுக்கப்படவில்லை.

இம்மாவட்டத்தில் 76 சதவீதமான தமிழர்களும் 23 சதவீதமான முஸ்லிம்களும், ஒரு சதவீதமான ஏனைய இனத்தவர்களும் வாழ்கின்றனர்.

இந்நிலையில், இத்திட்டத்துக்காக 04 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இதற்காக 03 தமிழ்க் கிராமங்களும் ஒரு முஸ்லிம் கிராமமும் தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அவ்வாறில்லாமல், 02 தமிழ்க் கிராமங்களும் 02 முஸ்லிம் கிராமங்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

இதன் மூலமாக தமிழ்க் கிராமங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

குறித்த திட்டத்துக்காக ஒரு கிராமத்துக்கு 90 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்படவுள்ள நிலையில், ஒரு தமிழ்க் கிராமம் தெரிவு செய்யப்படாமையால் 90 இலட்சம் ரூபாய் இல்லாமல் செல்வது கவலையான விடயமாகும்.

இதற்கான காரணத்தைக் கேட்கும்போது, தீர்க்கமான பதில் இல்லையெனவும் அவர் கூறினார்.

3 comments:

  1. நிச்சயமாக இது ஒரு அநீதியான வேலையே .

    ReplyDelete
  2. துரைரெட்ணம் அவர்கள் கூறும் கணக்கு படி பார்த்தால் எடுக்கப்பட்ட தீர்மானம் பிழையானதே. ஆனால் இது எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டது என்பதை உரியவர்கள் பதிலிருப்பது அவர்களது கடமையாகும். அதே நேரம் துரைரெட்ணம் கூறியவாறு தான் கொடுக்க வேண்டும் என்பது இல்லை. பின்தங்கிய கிராமங்களை வரிசைப்படுத்தி அதன் பிரகாரமும் கொடுக்கப் படலாம் என்ற கண்ணுக்கும் உள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

    ReplyDelete

Powered by Blogger.