Header Ads



கைது செய்யப்படுபவர்கள். வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது ஏன்..?

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கைது செய்து விளக்கமறியலில் வைக்கும் சில முக்கிய பிரமுகர்கள் திடீரென நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது குறித்து இன்று நாடாளுமன்றத்தில் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் ஜயதிஸ்ஸ , சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவிடம் எழுப்பிய கேள்வியின் போது இந்த விவாதம் ஏற்பட்டது.

நளின் ஜயதிஸ்ஸ,ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட நபர்கள் குறித்து பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு உரிய விசாரணைகளை நடத்தி அவர்களை கைது செய்த பின்னர், அவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.

கண்டியில் இருந்து கொழும்பு பாத யாத்திரை மேற்கொள்ளவிருந்தவர்களும் கடும் சுகவீனம் எனக் கூறி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

ஏதேனும் ஒரு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்படும் முக்கிய பிரமுகர்கள் அரசியல்வாதிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு மறுநாள் ஏதே ஒரு சுகவீனத்தை கூறி வைத்தியசாலைக்கோ தேசிய வைத்தியசாலைக்கோ செல்வது வழமையான சம்பவமாக தற்போது மாறியுள்ளது.

இதன் மூலம் நீதிமன்றம், மருத்துவ பரிந்துரைகளை வழங்கும் சுகாதார துறை மீதான நம்பிக்கையும் இல்லாமல் போகும்.

அப்படியானால், சுகவீனமடைந்தவர்களை மாத்திரமா நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கைது செய்கின்றனர்.

அப்படியானால், நிதி மோசடி விசாரணைப் பிரிவின் சிகிச்சை பிரிவு ஒன்றை ஆரம்பிக்க நேரிடும் என்றார்.

இதற்கு பதிலளிக்க அமைச்சர் சாகல ரத்நாயக்க, பிணை வழங்கினால், பாத யாத்திரை செல்லக் கூடியளவில் உடல் நிலை குணமாகும் என்றார்.

2 comments:

  1. "Basil arrested" by the FCID should read as "Basil
    was hospitalised by the FCID." In future nobody
    should be arrested . All should be hospitalised.
    Joker's paradise !

    ReplyDelete
  2. This is an already agreement between government and related accused

    ReplyDelete

Powered by Blogger.