Header Ads



ஒலுவில் மக்களால் நாளை, மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு

(எம்.ஏ.றமீஸ்)

ஒலுவில் பிரதேசத்தில் இடம்பெற்று வரும் கடலரிப்பினைத் தடுக்கக் கோரி நாளை(29) அப்பிரதே மக்களால் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணிக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஒலுவில் துறைமுக நிர்மாணத்தினை அடுத்து ஒலுவில் கடற்கரைப் பிரதேசம் வெகுவாக கடலரிப்பின் தாக்கத்திற்குள்ளாகி வருகின்றது. இதனை தடுக்கும் வகையில் அப்பிரதேச மக்களும் பொது நல அமைப்புக்களும் அரசியல்வாதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும் காலத்திற்குக் காலம் தெரியப்படுத்தி வருகின்றபோதிலும் அது கண்டுகொள்ளப்படாமல் இருந்து வருகின்றது.

நீண்ட காலமாக கடலரிப்பிற்குள்ளாகி வரும் இப்பிரதேத்தின் கரையோரத்தினை அண்டியிருந்த கட்டடங்கள் மரம் செடி கொடிகள் போன்றன கடலிற்குள் காவு கொள்ளப்பட்டுச் சென்றுள்ளன. இனிவரும் காலங்களில் ஒலுவில் பிரதேசமே கடலிற்குள் சென்று அழிந்து விடும் அபாயம் எதிர்நோக்கியதாக அப்பிரதேச பொது மக்கள், ஒலுவில் அனைத்துப் பள்ளிவாசல்கள் நிருவாகம், ஒலுவில் அபிவிருத்தி ஆலோசனைக் குழு, பொதுநல அமைப்புகள், விளையாட்டுக் கழகங்கள் போன்றன இவ் ஆர்ப்பாட்டத்திற்கான அழைப்பினை விடுத்துள்ளன.

நாளைய தினம் ஜும்ஆ தொழுகையினைத் தொடர்ந்து ஒலுவில் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் ஒலுவில்; அன்ஸாரி ஜும்ஆ பள்ளிவாசல் ஆகியவற்றின் முன்றலில் ஆரம்பமாகும் இவ் ஆர்ப்பாட்டப் பேரணி ஒலுவில் பிரதான வீதி வழியாகச் சென்று கடலரிப்பிற்குள்ளாகும் வெளிச்ச வீட்டு சுற்றுவட்டாரத்தினை அடையவுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி, பிரதர் உள்ளிட்ட அமைச்சர்கள், துறைசார்ந்த அதிகாரிகளுக்கான மகஜர் கையளிக்கப்படவுள்ளதுடன், கடலரிபிப்pனைத் தடுக்கக் கோரி ஆயிரக்கணக்கான பொதுமக்களால் இடப்பட்ட கையெழுத்து வேட்டைப் பத்திரமும் இதன்போது கையளிக்கப்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.