Header Ads



அரேபிய உடையை கழற்றிவிட்டு, லண்டன் புகையிரதத்தில் ஷேக் முகமது பின் ரஷீத்


பிரித்தானியாவில் பொதுமக்களோடு இணைந்து ஐக்கிய அமீரக பிரதமரும் அவரது மகனும் ரயில் பயணம் மேற்கொண்ட சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.

ஐக்கிய அமீரகத்தின் துணை ஜனாதிபதியும் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் தமது மகனும் இளவரசருமான ஷேக் ஹம்தான் பின் முகமது உடன் இணைந்து லண்டனின் மத்திய பகுதியில் அமைந்துள்ள சுரங்க ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

கொளுத்தும் வெயில் கூட்ட நெரிசல் எதையும் பொருட்ப்படுத்தாமல் பொதுமக்களுடன் இணைந்து இருவரும் பயணம் மேற்கொண்டது சமூக வலைப்பக்கங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

பட்டத்து இளவரசரான ஷேக் ஹம்தான் பின் முகமது அவ்வப்போது புகைப்படங்களெடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துகொண்டிருந்தார். இந்த ரயில் பயணத்தின் சிறப்பு என்னவெனில் இருவருமே அரேபிய உடையில் இல்லாமல் சாதாரண உடையில் பொதுமக்களுடன் இணைந்து பயணம் மேற்கொண்டதுதான்.

ஷேக் முகமது பின் ரஷீத்தின் சொத்து மதிப்பு 4 பில்லியன் டொலர்களுக்கும் அதிகம் என கூறப்படுகிறது.

பாரம்பரிய அரபு நாட்டு உடையுடன் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுலா மேற்கொள்ளும் நபர்கள் தாக்குதலுக்கு உள்ளாவதால், அரேபிய சுற்றுலாப்பயணிகளை அந்தந்த நாட்டுக்கேற்ற உடைகளை பயன்படுத்த ஐக்கிய அமீரகம் கோரியுள்ளது.



6 comments:

  1. Better if you can practice daily

    ReplyDelete
  2. அரபிகள் மேற்கத்திய நாட்டுக்கு போகும்போது மேற்கத்திய நாட்டு உடைகளை அணிகின்றார்கள் சில பெண்களும் ஆனால் மேற்கத்திய நாட்டவர்கள் அரபு நாட்டுக்குள் வரும் போது அறபு நாட்டு உடையை ஆணோ பெண்ணோ அணிவதில்லை ஆண்கள் இல்லாவிட்டாலும் பெண்களாவது ஓரளவுக்காவது நாகரிகமாக உடுக்க மாட்டார்கள் யாரும் கண்டு கொள்வதில்லை

    ReplyDelete
  3. ORU TRAIN CABIN FULLA HIRE PANNI SHOW KATURAN DUBAI MARKETUKU THANIYA NADNTHU VARALAMA ?HEE HEE HHEE

    ReplyDelete
  4. Idhellam our news? Vela illapa ungalukellam...

    ReplyDelete
  5. He is very simple man...he used to travel alone in uae without any guards..i saw him driving alone in alkhail road and met him in a masjid also.

    ReplyDelete
  6. மேற்கத்திய சுகங்களுக்காக கொள்கைகளையே துறப்பவர்களுக்கு ஆடைகள் ஒரு பொருட்டா என்ன..?

    ReplyDelete

Powered by Blogger.