Header Ads



ஒன்றாக நடனம் கற்ற ரணிலும், சந்திரிக்காவும் தற்போது அமெரிக்காவின் தாளத்திற்கு ஆட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடந்த மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களை கைது செய்யப்படுவதை அரசாங்கத்தின் பிரதானி ஒருவர் தடுத்துள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களின் விபரங்களை பொலிஸார் கண்டறிந்த பின்னர், அவர்களை கைது செய்யாது நீதிமன்றத்தில் சரணடைய செய்யுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாணவர்களுக்கு ஒரு சட்டம், களனி மாணவர்களுக்கு இன்னுமொரு சட்டம் செயற்படுத்தப்படுவது இதன் மூலம் தெளிவாகியுள்ளது. அமைச்சர் சம்பிக்க ரணவக்க இது பற்றி என்ன கூறுகிறார் என கேள்வி எழுப்புகிறேன்.

இதனிடையே தானும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும் சிறுவயதில் ஒன்றாக நடனம் கற்றுக்கொண்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார்.

எனினும் இவர்கள் தற்போது அமெரிக்காவின் தாளத்திற்கு ஆடி வருகின்றனர்.

அதேவேளை எதிர்வரும் முதலாம் திகதி பசில் ராஜபக்சவுக்கு பிணை கிடைக்காது. பசிலிடம் தவறுகள், குறைக்க இல்லை எனக் கூறவில்லை. பசில் இல்லாவிட்டாலும் 28 ஆம் திகதி பாதை யாத்திரையை வெற்றிக்கரமாக மேற்கொள்ள போவதாகவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.