Header Ads



கருவில் இருக்கும் குழந்தைக்கு, ஆப்பரேஷன் செய்து சாதனை


ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் முதல் முறையாக கருவில் இருக்கும் 24 வார குழந்தைக்கு ஆப்பரேஷன் செய்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். 

கருவுற்ற பெண் ஒருவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவரது வயிற்றில் இருந்த 24 வார குழந்தை, ஸ்பைனா பிபிடா (Spina bifida) என்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஸ்பைனா பிபிடா என்பது முதுகு தண்டுவடத்தை சுற்றிய எலும்புகள் சரியாக வளர்ச்சி அடையாத நிலை ஆகும். இந்த நோய் ஆஸ்திரேலியாவில் மிக அரிதான ஒன்றாகும்.

கருவுற்ற பெண்ணுக்கு மயக்க மருந்து அளித்து, அப்பெண்ணின் கருப்பை உடலில் இருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளது. பின்னர் கருப்பைக்குள் சில திரவங்களை உட்செலுத்தி உள்ளனர். இதனால் கருப்பையின் மேற்பகுதிக்கு வந்த குழந்தையில் உடலை திருப்பி, அதன் முதுகு தண்டுவட பகுதியில் ஆப்பரேஷன் செய்துள்ளனர். பின்னர் கருப்பையை மீண்டும் அப்பெண்ணின் உடலில் வைத்து தைத்துள்ளனர்.

டாக்டர், நர்ஸ்கள் என சுமார் 40 பேர் கொண்ட மருத்துவ குழு இந்த ஆப்பரேஷனை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. அமெரிக்க நிபுணர்கள் குழுவின் உதவியுடன் ஆஸ்திரேலிய டாக்டர்கள் குழு இதனை செய்து முடித்துள்ளது. இந்த ஆப்பரேஷன் குறித்து டாக்டர் வெல்லன்ஸ் கூறுகையில், இது மிகவும் கடினமான ஆப்பரேஷன் என எங்களுக்கு தெரியும். இருந்தாலும் குழந்தையின் எதிர்கால நலன் கருதியே இந்த ஆபத்தான ஆப்பரேஷனை செய்தோம் என்றார்.

No comments

Powered by Blogger.