Header Ads



ஏழை மாணவர்களின் கல்விக்குக்கு உதவ, தம்முடன் கைகோர்க்குமாறு 'ஸம் ஸம்' அழைப்பு

கல்வி ஒரு சமூகத்தின் முதுகெலும்பாக இருக்கின்றது.கல்வி இல்லாத சமூகம் தனது அடையாளத்தையே இழந்துவிடும் அபாயம் இருக்கின்றது. எனவே ஒவ்வொரு சமூகமும் கல்விக்குரிய முக்கியத்துவத்தைக் கொடுப்பதும் அதனைப் பெற்றுக் கொள்வதும் அவசியமாகும். எனவே எதிர்கால சந்ததிக்கு வழிகாட்டவும் சவால்களை வென்றெடுக்கவும் ஆத்மீகத்துடன் கூடியக கல்வியை வழங்குவதில் நாம் கரிசனை கொள்ள வேண்டும். 

ஏழை மாணவர்களின் கல்விக்குக் கை கொடுக்கும் நோக்கில் ஸம் ஸம் பவுண்டேஷன் School with a Smile எனும் வேலைத் திட்டத்தை அண்மைக் காலமாக செயற்படுத்தி வருகின்றது. கடந்த வருடம் சுமார் 12000 மாணவர்கள் இத்திட்டத்தினால் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத் திட்டத்தின் மூலம் வருமானம் குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் 3000 ரூபா பெறுமதியான ஒரு பாடசாலை உபகரணப் பொதியைப் பெறுகிறார்.இதில் ஒரு புத்தகப் பை,அப்பியாசக் கொப்பிகள்,காகிதாதிகள் மற்றும் 1000 ரூபா பெறுமதியான சப்பாத்துக்கான ஒரு வவுச்சர் என்பன உள்ளடங்குகின்றன.

மாணவர்களின் கல்வி வாழ்க்கை இடைநிறுத்தப்படுவதைத் தடுப்பதற்கும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்கும் பெற்றோர்களின் சுமையைக் குறைப்பதற்கும் என இத் திட்டம் பல நோக்கங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இத் திட்டம் முஸ்லிம்களை இலக்காகக் கொண்டு மாத்திரம் அல்லாமால் இத் திட்டத்தில் 30 வீதம் முஸ்லிம் அல்லாத மாணவர்களுக்கும் வழங்கப்படுவது இதன் சிறப்பம்சமாகும். இதனால்  சகவாழ்விற்கான விதையை பிஞ்சு உள்ளங்களில் விதைப்பதிலும் நாம் அனைவரும் ஒரே நாட்டின் மக்கள் என்ற உணர்வை ஊட்டுவதிலும் இத் திட்டம் வெற்றியடைந்துள்ளது என்பது எமது அனுபவமாகும்.

நாடு முழுக்க வசிக்கும் அனைத்து மாணவர்களின் தேவையையும் ஒரு நிறுவனத்தினால் நிறைவு செய்ய முடியாது என்பதே யதார்த்தம்.ஆனால் ஒவ்வொரு ஊரிலும் உள்ள பள்ளிவாசல் நிர்வாகம்,சமூக நிறுவனங்கள் மனது வைத்தால் இதனை சாத்தியப்படுத்தலாம்.ஸம் ஸம் அமைப்பானது அது மேற்கொள்ளும் வேலைத் திட்டங்களை காலப்போக்கில் ஒவ்வொரு ஊரும் முன்னெடுக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. அந்தவகையில் எதிர்வரும் ஆண்டுக்கான School with a Smile வேலைத் திட்டம் தற்போது முன்னெடுக்கப்படும் இச் சந்தர்ப்பத்தில் உங்களுடன் ஒரு மகிழ்ச்சியான விடயத்தை பகிர்ந்து கொள்கின்றோம். 

இது போன்ற செயற் திட்டத்தை உங்கள் ஊரிலும் நீங்கள் அமுல்நடாத்த உங்களுக்கு ஒரு அரிய சந்தர்ப்பம் காத்திருக்கிறது.500 மாணவர்களுக்குக் குறையாத தொகையை நீங்கள் பொறுப்பேற்றால் அதே தொகையை ஸம் ஸம் பவுண்டேஷன் உங்களுக்கு வழங்கத் தயாராக இருக்கின்றது என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம். உதாரணமாக ஒரு ஊரில் உள்ள ஒரு நிறுவனமோ அல்லது பல நிறுவனங்களோ இணைந்து 1000 மாணவர்களுக்கான உதவித் தொகையை வழங்க முன்வரும் பட்சத்தில் ஸம் ஸம் பவுண்டேஷன் மேலும் 1000 மாணவர்களுக்கு உதவி செய்யும். அப்போது அப் பிரதேசத்தில் 2000 மாணவர்கள் இத் திட்டத்தினால் பயன்பெறுவர். அந்தவகையில் ஸம் ஸம் பவுண்டேஷன் மொத்தம் 10,000 மாணவர்களுக்கு உதவத் தயாராக உள்ளது.இத் திட்டத்தை நீங்கள் எம்முடன் இணைந்து செயற்படுத்த முன்வரும் பட்டசத்தில் உங்கள் பிரதேசத்தில் 30 வீதம் முஸ்லிம் அல்லாத மாணவர்களுக்கும் இப் பொதிகள் வழங்கப்பட வேண்டும் என்பது எமது நிபந்தனையாகும்.

எனவே இது தொடர்பில் ஆர்வம் உள்ளவர்கள் ஆகஸ்ட் 31 ஆம் திகதிக்கு முன்னர் எம்மைத் தொடர்பு கொள்ளவும்.ஏனைய விடயங்களை நாம் நேரடியாக சந்தித்து உரையாடலாம்.

வாருங்கள் ஏழை மாணவர்களின் கல்விக்குக் கை கொடுப்போம். வருங்கால இலங்கையின் கல்விச் சமூகத்திற்கு ஒளியூட்டுவோம்.

தொடர்புகளுக்கு –
திட்ட முகாமையாளர்
Rizwan Seedin 0772118888
www.schoolwithasmile.com

No comments

Powered by Blogger.