Header Ads



யானைக்கால் நோய் அற்ற நாடாக, இலங்கை பிரகடனம்

இலங்கையை யானைக்கால் நோய் அற்ற நாடாக பிரகடனம் செய்யும் நிகழ்வு இன்று -21- பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆசிய வலயக் பணிப்பாளர்களின் தலைமைத்துவத்தின் கீழ் குறித்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

தென்கிழக்காசிய நாடுகளில் யானைக்கால் நோய் அற்ற நாடு என்ற ரீதியில் இலங்கை, இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

ஏற்கனவே மாலைத்தீவு யானைக்கால் அற்ற நாடுகளில் முதலிடத்தில் காணப்படுகின்றது.

2020 ஆம் ஆண்டுக்குள் யானைக்கால் நோயை இல்லாதொழிக்கும் நோக்குடன் உலக சுகாதார ஸ்தாபனத்தால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

No comments

Powered by Blogger.