Header Ads



சுவாதி கொல்லப்படும் போது, ரமழான் நோன்பு இருந்தார் - தமிழச்சி

சுவாதி கொலை பற்றி ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அவதுாறாக கருத்துத் தெரிவித்துள்ளார்.

அதை வாபஸ் பெறாவிடில் வழக்கைச் சந்திக்க நேரிடும் என பா.ஜ.,தேசியச் செயலர் எச்.ராஜா கூறினார். அவர் இதுபற்றி கூறியதாவது:

சென்னை மென்பொறியாளர் சுவாதி கொலையில் ஈடுபட்டவர்கள் தப்பிவிடக்கூடாது.

இக்கொலை பற்றி ஆர்.எஸ்.எஸ்.,க்கு எதிராக, திருமாவளவன் அவதுாறாக கருத்து தெரிவித்துள்ளார்.

சம்பவத்தை திசை திருப்பி, ஆதாரமின்றி, யாரையோ காப்பாற்றும் வகையில் இவ்வாறு செய்துள்ளார். அதை வாபஸ் பெற்று, மன்னிப்புத் தெரிவிக்க வேண்டும்.

இக்கொலை வழக்கை, சி.பி.ஐ.,யிடம் மாநில அரசு ஒப்படைக்கலாம், என்றார்.

தொல் திருமாவளவன் அளித்துள்ள பேட்டியில்,

சுவாதி கொலை வழக்கில் காவல்துறையினர் புலனாய்வைத் தொடங்கும் முன்பே பிலால் மாலிக் மற்றும் ராம்குமார் பெயர்கள் வெளிவரத் தொடங்கி விட்டது. ஆனால், காவல்துறைக்கே பிலால் மாலிக் யார் என்பது தெரியவில்லை.

வை.ஜி. மகேந்திரன் பேஸ்புக்கில் ஒரு முஸ்லிம் என்றும், பிலால் மாலிக் என்றும் பெயர்களை வெளியிட்டார். இந்த பிலால் மாலிக் என்பவர் யார், அவரைப் பற்றிய தகவல்கள் ஏன் வெளியாகவில்லை. அதோடு, சமீபமாக, சித்திக் பிலால் அல்லது மாலிக் என்பவர் சுவாதி கொலை வழக்கில் அடிபடும் பெயராக மாறியுள்ளது.

ரம்ழான் பண்டிகையின் போது சுவாதி நோன்பு இருந்ததாகவும், அவர் விரைவில் இஸ்லாமுக்கு மாறிவிடுவார் என்ற தகவல் ஆர்எஸ்எஸ் அமைப்புக்குத் தெரிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

விசாரணையின் போது, இரத்தக் கறை படிந்த சட்டை ராம்குமார் தங்கியிருந்த அறையில் இருந்து கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அது தற்போது மறுக்கப்படுகிறது. இதில் எது உண்மை?

ராம்குமாரும் சுவாதியும் பேஸ்புக்கில் நட்பாகி, ராம்குமார் நெல்லையில் இருந்து சென்னை வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், ராம்குமாரின் பேஸ்புக்கில் 2014ம் ஆண்டுக்குப் பிறகு எதுவுமே பதிவாகவில்லை. சுவாதி பற்றிய பதிவு எதுவும் இல்லை. சுவாதி கொல்லப்பட்டவுடன் சுவாதி என்று ராம்குமார் தனது பேஸ்புக்கில் தேடல் செய்திருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. நன்கு அறிந்த ஒருவரைப் பற்றி அவர் ஏன் Search செய்ய வேண்டும்?

சுவாதிக்கும் ராம்குமாருக்கும் காதல் இருந்ததாக பேஸ்புக்கில் எந்த தகவலும் இல்லை. சுவாதிக்கும் பிலாலுக்கும் நட்பு இருந்தது என்றும், சுவாதி கொலைக்குப் பின்னால் பிலால் மாலிக் என்பவர் இருப்பதாகவும் தகவல்கள் வெளியானதன் பின்னணி என்ன? உடனடியாக பிலால் மாலிக்கை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தாதது ஏன்?

காவல்துறை எங்கள் மேன்ஷனில் வந்து விசாரிக்கவில்லை. அப்பகுதியில் இருக்கும் அனைத்து மேன்ஷன் மேலாளர்களையும் காவல்நிலையத்துக்கு வரவழைத்துத்தான் விசாரித்தார்கள் என்றுதான், ராம்குமார் தங்கியிருந்ததாக கூறப்படும் மேன்சன் மேனேஜர் அல்லது உதவியாளர்கள் கூறுகிறார்கள்.

இத்தனை விஷயங்களையும் எவ்வாறு புறந்தள்ள முடியும்? இதில் உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்பதால்தான், சுவாதி கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே தமிழச்சி என்பவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், சுவாதிக்கு திருமணம் ஆகிவிட்டது. அது ‪பதிவுத் திருமணம்‬ என்றும் கூறுகிறது.

அவர் கொல்லப்படும் போது ரம்ழான் ‪நோன்பு‬ இருந்ததாகவும் கூறப்படுகிறது.

உடனே இந்த கொலையை சுவாதியின் கணவர்தான் செய்திருக்க வேண்டும் என்று முடிவுக்கு வருவதைவிட, இது ஏன் ஆணவக் கொலையாக இருக்கக் கூடாது என்கிற கோணத்தில் கவனிக்கத் தவறுகிறோமா? அல்லது தவிர்க்கிறோமா?

ஏற்கனவே திருமணமாக கதையை ஏன் சுவாதியின் பெற்றோர் மறைக்க வேண்டும். அப்படியானால் சுவாதியின் பெற்றோருக்கும் கொலைக்கும் தொடர்பு இருக்கிறதா என்று ஏன் காவல்துறையினர் விசாரிக்கக் கூடாது? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

- Dina Malar

2 comments:

  1. Tamilar kalai veeru mathathiduku
    Maatra mudpada veendam ulagaththin muoththa enam tamilar khal

    ReplyDelete
  2. vr methusan methu,
    இந்து மதத்திலும் கிறிஸ்தவ மதத்திலும் இருந்துதான் அதிக நாத்திகர்கள் உருவாகின்றார்கள். தங்கள் மதத்தில் கூறப்பட்டுள்ள கடவுள் கொள்கையே இவ்வாறு நாத்திகர்கள் உருவாவதற்கு காரணமாகும். சிந்திப்பவர்களே இவ்வாறு நாத்திகர்களாக மாறுகின்றனர். பின்னர் உண்மையான மார்க்கத்தைத் தேடுகின்றனர். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கின்றனர். இவர்களை யாரும் மாற்றுவதில்லை. தாமாகவே மாறுகின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.