July 02, 2016

ஞானசாரருக்கு எதிராக உடனடி நடவடிக்கை - ஜனாதிபதி மைத்திரி உறுதியளிப்பு


(எம்.சி.நஜிமுதீன்)

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் நிந்திக்கும் வகையில் தெரிவித்த கருத்து பலத்த கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் சம்பந்தமாக மேலும் தெரியவருவதாவது, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கடந்த 21 ஆம் திகதி மஹியங்கனையில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வித்தில் உரையாற்றியிருந்தார். அவ்வுரை குறித்த பிரதேசத்தில் அச்ச நிலையினைத் தோற்றுவித்திருந்தது.

ஆகவே அவ்விவகாரம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு முஸ்லிம் கவுன்சில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தது. அக்கடிதம் தொடர்பில் ஞானசார தேரர் ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில், ' முஸ்லிம் கவுன்சில் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் பிரதியொன்றை நபி(ஸல்) அவர்களூடாக அல்லாஹ்வுக்கு அனுப்புமாறு ' தெரிவித்திருந்தார்.

அவர் இவ்வாறு இஸ்லாத்தை நிந்திக்கும் வகையில் வெளியிட்ட கருத்துகள் முஸ்லிம் சமூகம் உட்பட பல்வேறுபட்ட தரப்பிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.  ஞானசார தேரர் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிராக தொடர்ந்து தெரிவிக்கும் மத நிந்தனைக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம், எம்.எச்.ஏ.ஹலீம் ஆகியோர் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர். மேலும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் கவுன்சில்  உட்பட பொது அமைப்புகளும் ஜனாதிபதிக்கு கடிதமூலம் வேண்டுகோள் விடுத்துள்ளன.     

இதேவேளை பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக ஆர்.ஆர்.டி. அமைப்பு பொலிஸ் மா அதிபரிடம் மூன்று   முறைப்பாடுகளைச் சமர்ப்பித்துள்ளது. அம்மூன்று முறைப்பாடுகளும் பொலிஸ் மா அதிபரினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் விரைவில் ஞானசார தேரர் விசாரணைக்குட்படுத்தப்படுவார் எனவும் உறுதி வழங்கப்பட்டுள்ளது. 

ஆகவே பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசாரர் வெளியிட்டுள்ள மத நிந்தனை கருத்துகள், அதனைந்தொடர்ந்து எழுந்துள்ள அதிர்வலைகள் தொடர்பில் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் ஜனாதிபதியுடன் பேச்சுவார்தை நடத்தியபோதே, அவ்விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.    

11 கருத்துரைகள்:

YAHAPALANAYA JOKERS WILL DO NOTHING.

வழமையாக நடந்தேறும் விசாரணையும் விடுதலையுந்தான், வேறேன்ன எதிர்பார்க்க முடியும்?

how could we expect something different from yahapalanaya than from mahinda chinthanaya . these two groups being managed and combined by manjalpalanaya.we muslim still acting like childis. these puppets muslim ministers have protect their seats in the parliament. useless trust these guys. pl bring people like agar mohamed etc to speak the real things.

இவ்வாறான விடயங்களில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஓர் அணியாய் நின்று போராடினால் மாத்திரமே பூரண வெற்றியை அடைய முடியும்.இல்லையென்றால் கண்துடைப்புத்தான் நடக்கும்.காரணம் காமுதுரு மார்களை கைது செய்வதென்றால் என்னை கேட்டுத்தான் செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி கூறியிருப்பது முஸ்லிம்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே முஸ்லிம் அரசியல்வாதிகள் கட்சி ரீதியாக பிரிந்திருந்தாலும் தயவு செய்து சமூக ரீதியாக ஒன்றுபடுங்ள். அப்பொழுதுதான் பேரினவாதிகளின் முஸ்லிம்கள் மீதான பலகோண தாக்குதல்களில் இருந்தும் வெற்றிகாண முடியும். இலங்கையின் அபிவிருத்திக்கும், முன்னேற்றத்துக்கும் பல்வேறு காலகட்டங்களிலும் பல துறைகளிலும் முஸ்லிம்கள் பங்களிப்பு செய்துள்ளார்கள். நாட்டில் பங்கு கேட்கவில்லை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நாட்டின் நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்த வில்லை. எனவே இவ்வாறான விடயங்களை இனவாதிகளுக்கு அடிக்கடி சுட்டிக்காட்டி நியாயத்தை நிரூபிப்பதன் மூலம் எமது உரிமைகளை நாம் வெற்றிகொள்ளக் கூடியதாக இருக்கும்.

The Muslim Voice is fully in agreement with the comments made by Brother Mohomed Deen.
Added to it, The Muslim Voice wishes to state:
Muslims in Sri Lanka do NOT have a voice - a POLITICAL VOICE for that purpose. The SLMC is dead. The ACMC is busy making money, the Muslim politicians stooging the UNP are ONLY interested in their personal benefits by selling the VOTE BANK of the Muslims who have been deceived lock-stock-and-barrel. The Muslim Civil Society and Muslim Media organizations in Sri Lanka and their leaders will stage dramas by releasing "press statements" because all of them have been well taken care by the Yahapalana government. Like what happened in Aluthgama and Beruwela, Maharagama and Dambulla, they all will COVER up the TRUTH and the Muslims will be told a "LONG STORY. The Muslim Civil Society and Muslim Media organizations (excluding www.jaffnamuslim.com) in Sri Lanka and their leaders, all of them have DECEIVED THE MUSLIM COMMUNITY for their personal benefits. Atrocities created in Aluthgama and Beruwela, Maharagama and Dambulla, they HAVE ALL COVERED UP THE TRUTH ON BEHALF OF THE YAHAPALANA GOVERNMENT TILL NOW. “The Muslim Voice” WARNED the Muslim Community of this in many of our comments – Alhamdulillah. So now all the TRUTH cannot be COVERED up and the Muslims cannot be told a "LONG STORY, because www.jaffnamuslim.com is revealing hot news, Alhamdulillah. WHY HAS NOT THIS unscrupulous UNDEMOCRATICALLY MUSLIM LEADERS NOT CALLED FOR A PRESIDENTIAL COMMISSION OR A HIGH LEVEL INQUIRY BY THE YAHAPALAN GOVERNMENT ON THE ALUTHGAMA and BERUWELA VIOLENCES/INCIDENCES UP TO NOW? Just making press statements or sending letters to the President and Prime Minister means NOTHING. Because they do NOT care for our so-called Muslim Leaders.
As a Long term solution – What is needed is that, INSHA ALLAH – all the Jummah Mosques, Muslim Ministers, Muslim Parliamentarians, Muslim Civil Society Groups, Muslim Religious Organizations, Mosque Alliances, Muslim Academics, Muslim Intellectuals and Muslim politicians should formulate a memorandum to be presented to the Minister of Muslim Cultural Affairs REQUESTING the Minister to SUBMIT a CABINET PAPER REQUESTING PARLIAMENT TO AUTHORIZE SRI LANKA MUSLIMS TO HAVE THE RIGHT TO CONSTRUCT THEIR PLACES OF WORSHIP ADHERING TO THE CIVIL AND ADMINISTRATIVE LAWS AND REGULATIONS OF SRI LANKA AS SPECIFIED WITHIN THE CONSTITUTION. The Muslims should also call for the “promised Hate Speech Bill” to be enacted soon. If there are NO such laws in the present Constitution, then, under the proposed Constitutional Reforms, such laws have to be enacted/written under the “SECTION OF RIGHTS as “RELIGIOUS RIGHTS”. It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any above challenges politically through RIGHTFUL legislations adopted in our favour in the coming future, Insha Allah.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

பழைய குருடி கதவ திறடி!
அதே நாடகம். அதே பல்லவி.
எல்லாம் வெறும் கண்துடைப்பு.

Let Muslims and Muslim Leaders act with far sightedness and tactfulness in dealing with communal issues to avoid backlashes and negative consequences.

ஜும்மாவுக்குத் திரள்வது போல், மக்கள் ஐவேளையும் பள்ளிகளில் திரண்டால், நம் நாட்டு பொதுபல சேனா மாத்திரம் அல்ல முழு இஸ்ரேலிய யெஹுதிகளும், முழு இந்துத்வ தீவிரமும், முழு ரோஹிங்கிய பயங்கரவாதமும், முழு சீன முஸ்லிம் எதிர்ப்பு முயற்சிகளும், அமெரிக்காவில், ஐரோப்பாவில், உலகளாவிய ரீதியில் எங்கெங்கெல்லாம் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் சக்திகள் இருக்கின்றனவோ, அந்த அத்தனையையும் அல்லாஹ் தலை குனிய வைப்பான் ..

நாம் இபாதத் என்னும் இந்த ஆயுதத்தை முழுமையாக கையில் ஏந்தாத வரை எம் முயற்சிகளில் அதிக பயனை எதிர் பார்க்க முடியாது. அது வரையிலும் பல அழிவுகள், நஷ்டங்கள், குழப்பங்கள், உயிர் - பொருள் இழப்புகள் என்று அதிகம் நடந்தே தான் தீரும்.

اللــــــــــــــــــــــــه المستعان

IN OUR HISTORY WE ARE ALWAYS IN MINORITY BUT WE WON ALL EVEN WAR, BUT NOW WE HAVE DIVIDED MORE THAN HINDU GOD, SO LOST WILL COME NO ONE CAN'T STOP

Post a Comment