Header Ads



"மரங்கொத்தி மரங்கொத்த, கிளிப்பிள்ளை பெயர் எடுத்துச் செல்லுமாம்"

-அனா-

எனது முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை தான்தான் திறந்து வைக்க வேண்டு; என்று ஆசைப்பட்டது கிடையாது என்று கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் வாழைச்சேனை 206டி மற்றும் 206 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் அமைக்கப்பட்ட கொங்ரீட் வீதி மற்றும் மீனவர் படகு இறங்கு துறைக்கான தடுப்புசுவர் என்பற்றை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (16.07.2016) இடடம் பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற் சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

எமது மாகாணத்தில் யார் ஆரம்பித்த அபிவிருத்தி திட்டங்களாக இருந்தாலும் அதனை கிழக்கு மாகாண முதலமைச்சர் தான்தான் திறக்க வேண்டும் என்று முன்டியடித்துக் கொண்டு திறந்து விடுகின்றார் என்ற காரணத்தினால்தான் எனது முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட வேலைகளை நான் திறந்து வைக்கிறேன். 

எமது மாகாணத்தில் தற்போதைய முதலமைச்சர் முதலமைச்சராக பதவி ஏற்றதன் பின்னர் புதிய கலாசரம் ஒன்று தோன்றியுள்ளது மாகாணத்தில் மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட நிதியாக இருந்தாலும் சரி மாகாண அரசால் ஒதுக்கப்பட்ட நிதியாக இருந்தாலும் சரி யார் ஒதுக்கீடு செய்தாலம்சரி அதற்கு அடிக்கல் நாட்டுவதும் தான்தான் அதனை திறந்து வைப்பதும் தான்தான் என்ற பேராசையில் தற்போதைய கிழ்கு மாகாண முதலமைச்சர் அழைந்து திரிகின்றார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் அடிக்கல் நாட்டக் கூடாது திறந்து வைக்க கூடாது என்று நான் ஒரு போதம் செர்லவில்லை அவர் முயற்சி செய்து நிதி ஒதுக்கீடு செய்து விட்டு அவ் வேளைத்திட்டங்களை செய்யட்டும் மாறாக எவரோ முயற்சி செய்ய அவர் வந்து பேர் எடுத்துக் கொண்டு செல்வதற்கு நாங்கள் தயாரில்லை.

எமது பிரதேசத்தில் பழமொழி ஒன்று சொல்வார்கள் மரங்கொத்தி மரங்கொத்த கிளிப்பிள்ளை பெயர் எடுத்துச் செல்லுமாம் என்று அதைப் போன்றுதான் கிழக்கு மாகாண முலமைச்சரின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன அவர் எங்கு வேண்டுமானாலம் அடிக்கல் நாட்டட்டும் அதனை திறந்தும் வைக்கட்டும் ஆனால் அதற்கான பணத்தினை அவரது முயற்சியினால் கொண்டு வந்துவிட்டு செய்யட்டும் என்பதுதான் எனது அவா என்றும் தெரிவித்தார்.

அமைச்சரின் நிதி ஒதுக்கிட்டில் மீனவர் படகு இறங்கு துறைக்கான தடுப்புசுவர் அமைப்பதற்காக முப்பது லட்சம் ரூபாவும் வை.அஹமட் வீதிக்கு கொங்ரீட் வீதி அமைக்க பத்து லட்சம் ரூபாவும், ஹைராத் முதலாம் குறுக்கு வீதி மற்றும் ஹைராத் 02ம் குறுக்கு வீதிகளுக்கு தலா ஏழு லட்சம் ரூபாவும் பிரதி அமைச்சரினால் நூறு நாள் வேலைத்pதட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.

3 comments:

  1. All our muslim brothers of mp and ministers don't fight for chair and political day by day BBS planning to destroy muslim society but u all fighting for plitical birthing time born with political

    ReplyDelete
  2. muslim congrase illati umakku no addres mahinda money box bulti no forgeting mamu

    ReplyDelete
  3. ஊரில் 1000 பிரச்சனைகள் அவன் அவன் வாழ வழியில்லாமல் திரிகிறான்.உங்களுக்குல் நினைவுக் கல்லில் யாரின் பெயரை போடுவது என்ற பிரச்சனை,நீங்களெல்லாம் சமூத்தலைவராக இருக்கும் வரை அந்த சமூகம் உருப்பெரும்.

    ReplyDelete

Powered by Blogger.