Header Ads



யாழ் பல்கலைக்கழகத்துக்கு, பிள்ளைகளை அனுப்பப் போவதில்லை - சிங்கள பெற்றோர்

தமது பிள்ளைகளுக்கு அரசாங்கம் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும் வரை, அவர்களை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப் போவதில்லை என்று, சிங்கள மாணவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் நேற்று -21- நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் சிங்கள மாணவர்களின் பெற்றோர் சிலர் கலந்து கொண்டனர்.

“யாழ்.பல்கலைக்கழகத்தில் நடந்த தாக்குதலை அடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகள் எமக்குத் திருப்தி அளிக்கவில்லை. பல்கலைக்கழகத்தில் இருந்து சிங்கள மாணவர்கள், வவுனியா வரை பேருந்தில் கொண்டு வந்து விடப்பட்டனர். அதற்கு அப்பால் அவர்களின் பாதுகாப்பு பற்றி கரிசனை கொள்ளவில்லை.

மோதல்கள் நிகழ்ந்து 40 நிமிடம் கழித்தே,  பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு வந்தனர். யாழ். பல்கலைக்கழகத்தில் பெரும்பான்மையாக கல்வி கற்கும் தமிழ் மாணவர்களுக்கும் சிங்கள மாணவர்களுக்கும் இடையில் எந்த பிரச்சினைகளும் இல்லை.

சில கலைப்பீட மாணவர்கள் மாத்திரமே தாக்குதலில் ஈடுபட்டனர்” என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

யாழ். பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்தும் வரை தமது பிள்ளைகளை அங்கு அனுப்பப் போவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்

இது தொடர்பான மனுவொன்றை தாம் யாழ். பல்கலைக்கழ துணைவேந்தர், சிறிலங்கா அதிபர், பிரதமர், உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

No comments

Powered by Blogger.