July 30, 2016

வடபகுதியில் தமிழினத்தை விட, அயலினத்தின் குடியேற்றம் வேண்டாம் - கனடாவிடம் வலியுறுத்திய விக்கி

சிறிலங்காவுக்கு மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்த கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியன், நேற்று யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் ஆளுனரைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

வட மாகாண ஆளுனரை அவரது செயலகத்திலும், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை கைதடியில் உள்ள முதலமைச்சரின் செயலகத்திலும் கனேடிய வெளிவிவகார அமைச்சர் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக, வடமாகாண முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்,

“சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நிலைமையை அறிந்து கொள்ளவே இங்கு வந்ததாக அவர் தெரிவித்தார்.

சிறிலங்காவில் உள்ள பிரச்சினை போன்று தமது நாடும் பிரெஞ்ச் மொழி பேசும் மக்களும் பிரிவினைவாதப் பிரச்சினையை எதிர் கொண்டது. பின்னர் அது சரியான முறையில் தீர்க்கப்பட்டு தற்போது இரு தரப்பினரும் பிரச்சினையின்றி சுமூகமாக உள்ளனர். அது போன்று நம் நாட்டில் அவ்வாறு ஒரு முன்னெடுப்பை செய்வதில் என்ன பிரச்சினை நிலவுகிறது என என்னிடம் கனேடிய வெளிவிவகார அமைச்சர் வினவினார்.

நாட்டின் ஒருமைப்பாட்டை நாம் ஒருபோதும் எதிர்க்கவில்லை என்றும் அதன் அடிப்படையிலேயே மக்கள் எம்மை ஆதரிக்கின்றனர் என்று எடுத்துகாட்டிய நான் நாம் பிரிவினையை ஏற்படுத்தவில்லை. எமது தனித்துவத்தையே கோரி நிற்கிறோம் எனவும் அவரிடம் சுட்டிக்காட்டினேன்.

நாம் முன்னய காலகட்டத்தில் இவ்வாறான ஒரு நிலைமையிலேயே வாழ்ந்து வந்தோம். முன்னர் தமிழர்கள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சென்று தமது வர்த்தக வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால் 1956ஆம் ஆண்டு காலப்பகுதியில் தான் இந்த நிலைமை மாற்றம் பெற்று தனி சிங்கள ஆட்சி நாடாக சிறிலங்கா மாறியது. அதிலிருந்து தமிழ் மக்களின் பிரச்சினைகளும் ஆரம்பமானது. என்பதை அவரிடம் எடுத்துக் கூறினேன்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் மக்களின் இன, மத, மொழி, கலாசாரத்தின் தனித்துவம் எவ்வாறு உள்ளதோ அதனடிப்படையில் எமது இன, மொழி, மத, கலாச்சாரங்கள் பேணப்பட வேண்டும். எமக்கான தனித்துவம் வழங்கபட வேண்டும் என்று நான் கூறிய கருத்தை கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஏற்றுக்கொண்டார்.

நீங்கள் தமிழன் என்பதிலும், இலங்கையன் என கூறுவதிலும் பெருமைப்படுகிறீர்களா? என வித்தியாசமான ஒரு கேள்வியை என்னிடம் அவர் கேட்டிருந்தார்.

அதற்கு ‘அவ்வாறு நான், நாம் இருப்பதற்கு எமது தனித்துவம் எமக்கு வழங்கப்பட வேண்டும், வடபகுதிகளில் தமிழினத்தை விட அயலினத்தின் குடியேற்றம் எமக்கு வேண்டாம் அதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என நான் அவரிடம் கூறினேன். இந்த நாட்டில் இன ஒருமைப்பாடு ஏற்படுத்துவதற்கு கனடா கண்ணும் கருத்துமாக உள்ளது. கனடாவில் உள்ள தமிழர்கள் எந்தவித பிரச்சினையும் இன்றி சிறந்த முறையில் தமது வாழ்வை தொடர்கின்றனர்.

அவ்வாறான ஒரு நிலமையை இங்கு உருவாக்குவதற்கு தம்மால் முடிந்த அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என கனேடிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

12 கருத்துரைகள்:

Muslim parliamentarians should meet the Canadian diplomat and must address the plight of Muslim refugees of North and inform him about the communal minded Vicky's stand.

NPC க்கு குறைந்த அதிகாரங்களே கொடுக்கப்பட்டுள்ளது. இனப்பிரச்சினைக்கு
தீர்வுகள் இல்லை. வடக்கில் இன்னமும் ராணுவத்தினர் உள்ளனர். பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டவில்லை. இதணால் இன்னமும் நிலமை நம்பிக்கையின்றியுள்ளது (insecure).

இவைகளை தீர்காமல் குடியேற்றங்களை மட்டும் NPCமை புரக்கணித்து செய்யப்போவது பிழை. சந்தேகப்படவேண்டியது.

இப்பிரச்சணையை TNA மீண்டும் சர்வதேசத்துக்கு எடுத்து செல்லவேண்டும்.

ஓரளவு அதிகாரங்களை வைத்துக் கொண்டே, இந்த துவேஷி இப்படித் துள்ளுது!

போலீஸ் அதிகாரங்களும் கிடைத்தால், குரங்கின் கையில் கிடைத்த பூமாலைதான்..

Thamilar vedaiyaththil Muslim kal moukku nulaikka veendam

வேண்டுமென்றே உண்மையான செய்திகளை திரிபு படுத்தி வெளியிடுகிறார்கள். விக்னேஸ்வரன் அவர்கள் கூறியது சிங்கள ஆக்கிரமிப்பையே தவிர அப்பாவி சிங்கள முஸ்லீம் மக்கள் குடியேருவதை அல்ல . விக்னேஸ்வரன் அவர்கள் இனவாதி அல்ல தொடர்ந்து துயரங்களை சந்தித்து வரும் ஒரு இனத்தின் அடிப்படை உரிமைகள் சிலவற்றையாவது மாகாண சபை மூலம் பெற முயற்ட்சிப்பவர் . அவர் இனவாதி என்றால் றிசாட் போன்றவர்களை என்னவென்று கூறுவது ?

இவர் தன் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து நாட்டில் இன்னும் ஒரு இனப்பிரச்சினைக்கு வித்திட முயல்கின்றார் என்பது திட்ட வட்டமாக தெரிகின்றது அதிலும் இனிமேல் ஒரு இனப்பிரச்சனை வந்தால் சர்வதேசம் முன்வராது இதை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்,

இவன் இருக்கும் வரை தமிழனுக்கு எந்தவொரு தீர்வும் கிடைக்காது. இவரைபோன்றவர்கள் இப்டி இனவாதம் பேசியே சிங்களவர் உள்ளத்தில் சந்தேக நிலையை தோற்றுவிக்கின்றநர்

Vicki is a racist.

Government should consider to arrest him and put him behind the bars.

These rasict tamil should kicked out from other parts of srilanka. See they don't like to give rights to other communities. .but they want alll...what kind of hypocrisy. .one should remember as per latest census we are more than tamils in srilanka so muslims no more less than them..

சரி அயலினம் என்றால் என்ன?
அப்படி ஒரு இனத்தை எவ்வாறு அடையாளம் கண்டுகொண்டார்?!

தமிழ் மக்களின் உணர்வுகளைத்தூண்டி வேண்டுமானால் ஒருசிலர் தொடர்ந்நு பாராளுமன்றம் செல்லமுடியுமே தவிர வேறெதுவுமே சாத்திமில்லை!
அப்பாவி தமிழர்களை உசுப்பேற்றி வேண்டுமானால் நடத்தலாம், விரும்பியே அவர்களும் பலியாவர்கள்!
ஆனால்!
வரளாறு தோறும் முஸ்லிம்களை அடக்கியாளலாம்,ஏதோ நாம் பார்த்து தாரத வாங்குகள் போன்றவாறன எண்ணங்களும் செயற்பாடுகளும் வெறும் பகற்கணவுதான் என்பதை ப அழுகிய புண்ணைக்காட்டி அரசியல் செய்யும் தமிழர் தலைமைகள் விளங்கிக்கொள்ளனும், இல்லாட்டி விளங்க வைப்போம், நாம் உலக வரளாற்றில் எப்போதுமே அடிமைகளோ ,கொத்தடிமைகளாகவோ எப்போதுமே இருந்த்தில்லை என்பதை ஞாபகம் வைத்து நடந்துகொள்ளுங்கள்

90ல் முஸ்லிம்கள் உடுத்த துணிதவிர அனைத்தையும் உரிவிக்கொண்டு கொலைகாரக் கும்பலால் விரட்டப்பட்டபோது கும்மாளமிட்டவர்கள் எப்படி நீதிக்காகப் பேசுவார்கள்.இதில் வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டால் அம்மாடியோ!பிரிவினை வாதிகளின் கையில் அதிகாரம் கிடைத்த போதெலாலாம் நசிக்கப்படு.கசக்கபட்டு கொல்லப்பட்டதே வரலாறு.

Post a Comment