Header Ads



எனது உயிரை விட்டாவது, நான் யார் என ஜனாதிபதிக்கு காட்டுவேன் - சுமணரத்ன தேரர்


ஜனாதிபதி மட்டக்களப்பிற்கு விஜயம் செய்தும் கிழக்கின் பிரதான விகாரையான மட்டக்களப்பு மங்களராம விகாரைக்கு விஜயம் செய்யாதது முழு கிழக்கு மாகாண பௌத்த மக்களையும் அவமானப்படுத்திய செயலாகும். ஜனாதிபதி விகாரைக்கு விஜயம் செய்யாதமைக்கான காரணம் என்னவென்று எனக்கும் தெரியும். அவருக்கும் தெரியும் என சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் மட்டக்களப்புக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ள போதும் மட்டக்களப்பில் அமைந்துள்ள விகாரைக்கு அழைப்பு விடுத்தும் செல்ல மறுத்ததை கண்டித்தது, கிழக்கு மாகாண பிரதி சங்க நாயக்கரும் மட்டக்களப்பு ஸ்ரீமங்களாராம ரஜமஹா விகாரையின் விகாராதிபதியுமான அம்பிட்டடி சுமணரத்ன தேரர் தலைமையில் ஊடக சந்திப்பொன்று நேற்று -13-  மாலை இடம்பெற்றது. இந்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த சுமணரத்ன தேரர்,

ஜனாதிபதி 4 தடவைகள் மட்டக்களப்புக்கு விஜயம் செய்தும் 4 தடவையும் விகாரைக்கு வருவதற்கு விரும்பவில்லை 

இங்கு மொத்தம் 3 விகாரைகள் உள்ளன இதில் ஒன்றுக்காவது வர மறுத்தது ஏன்.? பள்ளிவாசலுக்கு செல்ல முடியும் ஆலயங்களுக்கு செல்ல முடியும் என்றால் ஏன் விகாரைக்கு அழைப்பு விடுத்தும் வர மறுத்தது என்று எனக்கும் தெரியும் அதுபோல ஜனாதிபதிக்கும் தெரியும் என நினைக்கின்றேன்.

இங்கு யுத்தகாலம் முதல் இனபேதம் மத பேதமின்றி நான் தனியாளாக இருக்கின்றேன். ஆனால் எனது அழைப்புக்கு அவர் செவி சாய்க்காதது வேதனைக்குரிய விடயமாகும்.

ஜனாதிபதி பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டை நான் சேதப்படுத்திய காட்சியை சில ஊடகங்கள் தவறான பாதைக்கு கொண்டு செல்கின்றன. அது உண்மை இல்லை.

இங்குள்ள சிங்கள மக்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினைகள் தொடர்பாக பேச விரும்பிய எனக்கு ஜனாதிபதியின் இந்த புறக்கணிப்பு என்னை கல்வெட்டை சேதப்படுத்தும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளது.

நான் ஜனாதிபதியுடன் விவாதிக்க தயாராக உள்ளேன். முடிந்தால் என்னுடன் விவாதிக்க வருமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கின்றேன்.

இன்று நான் இங்கு இருப்பதற்கு எத்தனை உயிர் தியாகங்கள் இடம்பெற்றுள்ளது. என்பது எனக்குத்தான் தெரியும். அன்பான ஊடக நண்பர்களே நீங்கள் என்னை தப்பானவனாக சித்தரிக்க வேண்டாம்.

எனது உயிரை விட்டாவது நான் யார் என்பதை ஜனாதிபதிக்கு காட்டுவேன் என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 (சசி, ஜவ்பர்கான்)

3 comments:

  1. Ayyo theeevira vathattilum oru kanneeer...???

    ReplyDelete
  2. நீங்கள் உயிரைவிட்டு நீங்கள் யார் எனக் காட்டினால் இந்த நாட்டு மக்கள் நீங்கள் யார் என அறி்ந்து கொள்வார்கள். அதை தயவுசெய்து செய்வீர்களா?

    ReplyDelete
  3. U r a mental thero. That's y president didn't come 2 meet u

    ReplyDelete

Powered by Blogger.