Header Ads



அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின், ஈதுல் பித்ர் வாழ்த்துச் செய்தி

அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்,

புனித ரமழான் மாதம் முழுதும் வணக்க வழிபாடுகள் புரிந்துவிட்டு இன்று மகிழ்ச்சியோடு பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் முஸ்லிம் சகோதரர்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. 

இலங்கை முஸ்லிம் மக்கள் அனைவரும் இன்று ஈகைத் திருநாளாம் ஈதுல் பித்ரைக் கொண்டாடுகிறார்கள். புனித ரமழானில் நோன்பிருந்துஇ நாவடக்கிஇ பொறுமை காத்து ஆன்மீகப் பயிற்சி பெற்றோர் கொண்டாடும் பெருநாளே ஈதுல் பித்ர். இரவிலே நின்று வணங்கி, அல்குர்ஆன்  ஓதி,  நல்லன கேட்டு பயன்பெற்ற அடியார்கள் மனநிறைவு கொள்ளும் பெருநாளே ஈதுல் பித்ர். ஈகை, பொறுமை போன்ற அருங்குணங்களை மனிதனிடம் வளர்;த்து கடமையான தொழுகைகளோடு உபரியான சுன்னத்தான அமல்களையும் அதிகமாக செய்யும் சந்தர்ப்பத்தை வழங்கிய மாதத்தின் இறுதி நாளே ஈதுல் பித்ர்.

ரமழானிலே கடமையான தொழுகைகள், குர்ஆன் ஓதுதல், இஃதிகாப் இருத்தல் மற்றும் இதர ஸுன்னத்தான அமல்கள் மூலம் பள்ளிவாசல்கள் நிரம்பிக் காணப்பட்டன.  இரவும் பகலுமாக நல்லுபதேசங்கள் கிடைத்த வண்ணம் இருந்தன. இவ்வாறெல்லாம் நல்ல பல விடயங்களைப் பெற்றுக் கொண்ட நாம் அதன் பக்குவத்திலும் பயிற்சியிலும் எமது வாழ்க்கையை தொடர்ந்து அமைத்துக் கொள்வதே ரமழானில் நாம் அடைந்த பயனாகும்.

ஆன்மீகப் பயிற்சிகளைப் பெற்று பெருநாளை கொண்டாடும் இவ்வேளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நம் எல்லோரது அமல்கள் அங்கீகரிக்கப்படவும் சகல மக்களும் நிம்மதியோடும் கௌரவத்தோடும் புரிந்துணர்வோடும் சகவாழ்வு வாழவும் அருள் பாலிக்க வேண்டுமென அல்லாஹுத் தஆலாவை வேண்டிக் கொள்கின்றது.

தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்,
ஈத் முபாரக்,

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments

Powered by Blogger.