Header Ads



மரண தண்டனையை அறிமுகப்படுத்தினால், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடியாது - துருக்கிக்கு எச்சரிக்கை

துருக்கி மரண தண்டனையை திரும்பவும் அறிமுகம் செய்தால் அது ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடியாது என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கைத் தலைவர் ஃபெடரிக்கா மொகரினே எச்சரித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள், அமெரிக்க செயலர் ஜான் கெர்ரியை பிரசல்ஸில் சந்தித்த பிறகு, மனித உரிமைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் உடன்பாட்டில் துருக்கி கட்டுப்பட்டுள்ளது என மொகரினே நினைவுறுத்தினார்.

வார இறுதியில் தனது ஆதரவாளர்களிடம் பேசிய ரிசப் தயிப் எர்துவான், ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் ஈடுபட்ட தலைவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற அவர்களது கோரிக்கை அவருக்கு கேட்டதாக தெரிவித்துள்ளார்.

துருக்கியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமைத்துவத்திற்கு அமெரிக்கா முழுமையாக ஆதரவளிப்பதாகக் கூறிய ஜான் கெர்ரி, அமெரிக்க ஆதரவு மதகுரு ஃபெத்துல்லா க்வூலென் இந்த சதிக்கு பின்னணியில் இருப்பதாக கூறும் குற்றச்சாட்டிற்கு துருக்கி ஆதாரத்தை வழங்க வேண்டும் என சவால் விடுத்துள்ளார்.

2 comments:

  1. நோயாளிகளுடன் இணைய துருக்கியர்களுக்கு விருப்பமில்லை என்பதை துருக்கியில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு தெரியும் ஆனால் மீடியாவை நம்பும் இந்த உலகம் இந்த செய்தியை தான் நம்பும்

    ReplyDelete
  2. EU countries cant hve death sentence. Only genocide and war crumes

    ReplyDelete

Powered by Blogger.