Header Ads



ஆசிய நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் - இலங்கையில் முப்படைகளும் முழு விழிப்புடன்

ஆசிய நாடுகளில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் இலங்கை அதிக கவனம் எடுத்துவருவதாகவும் முப்படைகளும், புலனாய்வு பிரிவும் சர்வதேச புலனாய்வு பிரிவுகளுடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

எக்காரணம் கொண்டும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளை இலங்கைக்குள் செயற்பட அனுமதிக்கப்போவதில்லை எனவும் இலங்கைக்குள் எவரது செயற்பாடுகள் உள்ளதா எனவும் ஆராய்ந்து வருவதாகவும் இராணுவம் குறிப்பிட்டது. 

கடந்த காலங்களில் மேற்கத்தேய நாடுகளில் இடம்பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதகள் தற்போது ஆசிய நாடுகளின் பக்கம் திரும்பியுள்ளது. கடந்த வாரத்தில் மாத்திரம் பங்களாதேஷ், சவூதி அரேபியா, ஈராக், போன்ற நாடுகள் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கத்தின் தற்கொலை குண்டுத்தாக்குதலில் பலநூறு மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஆசிய நாடுகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையின் பாதுகாப்பு செயற்பாடுகள் எவ்வாறு அமைந்துள்ளது என வினவியபோதே இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.