Header Ads



மாட்டிறைச்சி உட்கொண்டால், கிரிமினல் குற்றம் என்பதை நீக்கக்கோரி மனு

மகாராஷ்டிரம் உள்ளிட்ட சில மாநில அரசுகள் பசுவதையை தடுக்கும் வகையில் மாட்டிறைச்சி உண்ணுவதை தண்டனை மற்றும் அபராதத்துக்குரிய கிரிமினல் சட்டமாக இயற்றியுள்ளன. இதேபோன்றதொரு சட்டம் டெல்லி (விவசாய கால்நடைகள்) பராமரிப்பு சட்டத்திலும் இடம்பெற்றுள்ளது. 

இந்த சட்டத்தை நீக்க வேண்டும் என சட்ட மாணவரான கவுரவ் ஜெயின் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். இதேபோல், டெல்லியை சேர்ந்த என்.ஜி.ஓ ஒன்று இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு ஒன்றை தாக்கல் செய்தது.

இந்த இரு மனுக்களும்,  டெல்லி உயர் நீதிமன்ற  தலைமை நீதிபதி ஜி.ரோஹினி மற்றும் நீதிபதி சங்கிதா திங்ரா செஹ்கல் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது,  மனு தொடர்பாக வரும்  செப்டம்பர் மாதம் 14-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான டெல்லி அரசுக்கு நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பினர்.

No comments

Powered by Blogger.