Header Ads



ஜாகிர் நாயக்கிற்காக பிரார்த்திப்பது, முஸ்லிம்களின் கட்டாயக் கடமை


இஸ்லாமிய கொள்கையினை உலகிற்கு எடுத்து சொல்கின்ற Dr.ஷாக்கிர் நாயக் அவர்களுக்கு எதிராக  அண்மைக்காலமாக முடுக்கிவிடப்பட்டுள்ள விடயமானது மிகம்பெரும் பேசும் பொருளாக நாளுக்கு நாள் பூதாகரமாக்கப்பட்டு வருகின்றமையினை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. இதற்கு மிக முக்கியமான காரணம் Dr.ஷாக்கிர் நாயக் அவர்கள் தன்னுடைய சமூகப்பனியினை எந்தவொரு மத்தினையும் குறிவைக்காது, எவரையும் பாதிப்பிக்குள்ளாக்காதவாறு, எந்தவொரு மதத்தினதும் விழுமியங்களையும் கேவலப்படுத்தாது, இஸ்லாமிய தஃவா பணியினை மேற்கொள்கின்ற விதத்தினை எப்படியாவது முடக்க வேண்டும் என்பதற்காக முற்றிலும் சோடிக்கப்பட்ட திட்டமாகும்.

அதாவது Dr.ஷாகிர் நாயக் அவர்கள் தனது இஸ்லாமிய தஃவா உரையிலே குறிப்பிட்ட விடயமான I said every Muslim should be a terrorist to all anti social elements." இதுதான் ஷாக்கிர் நாயக் அவர்கள் பேசிய வாசகம். இதன் பொருள், “ஒரு முஸ்லிம் என்பவன் அனைத்து தீமைகளுக்கும் எதிராக போரிடும் விஷயத்தில் தீவிரவாதியாக இருக்க வேண்டும்” இதனை திரிவுபடுத்தியதோடு Dr,ஷாக்கிர் நாயக் அவர்கள் இஸ்லாமிய தீவிரவாதத்தினை உலகில் பரப்புவதற்கு உடந்தையாக இருக்கின்றார் என மக்களை திசை திருப்பி அவருடைய தஃவா பணிகளை முடக்குவதற்கு  இந்திய ஊடகங்கள் செயற்பட்டு வருவதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

அதே போலவே கடந்த காலங்கள் அதிகளவிலான வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த எத்தனையோ வகையான இயக்கங்கள் அதிலும் குறிப்பாக இந்தியாவில் இருக்கின்ற இந்து தீவிரவாத இயக்கங்கள் முஸ்லிம்களுக்கு எதிரான பல வகையான இன்னல்களையும், கஸ்டங்களையும் கட்டவிழ்த்து விட்ட போதெல்லாம் மிகவும் நிதானமாக அவ்வகையான விடயங்களை இஸ்லாமிய பார்வையில் மக்கள் எவ்வாறு அனுக வேண்டும் என்ற அடிப்படையில் கட்டுகோப்பான ரீதியில் இந்திய முஸ்லிம்கள் மட்டுமல்லாது உலக முஸ்லிம்களும் செயற்பட வேண்டும் என்ற வகையில் தனது தஃவா பணியினை மேற்கொண்டிருந்தார்.

பாரதிய ஜனதா கட்சியானது வரலாறு முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டு வந்தாலும் கடந்த இந்திய பாளுமன்ற தேர்தலில் ஒட்டு மொத்த இந்திய முஸ்லிம்களும் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடிக்கே வாக்களித்திருந்தார்கள் என்பது இந்திய முஸ்லிம்கள் இந்தியாவில் சமாதானமாகவே வாழ விரும்புகின்றார்கள் என்பதனை உலகிற்கு எடுத்துக்காட்டியது. அது மட்டுமல்லாது மோடியினுடைய சொந்த மானிலமான குஜராத்திலே மோடி முதலமைச்சராக இருந்த காலத்தில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட முஸ்லிம்களை உயிரோடு கொன்றொழித்த புகைவண்டி எரிப்பு சம்பவம், பாபரி மஸ்ஜித் உடைப்பு என வரலாற்றில் அழிக்க முடியாத சம்பவங்கள் இடம் பெற்றிருந்த பொழுதும் குஜராத் மானிலத்தில் வாழுகின்ற ஒட்டுமொத்த முஸ்லிம்களும் பாரளுமன்ற தேர்தலிலே நரேந்திர மோடிக்கு வாக்களித்து இந்திய முஸ்லிம்கள் மதவாதத்திற்கோ அல்லது இனவாதத்திற்கோ ஆதரவளிக்காதவர்கள் என்பதனை நிரூபித்திருந்தார்கள்.

ஆகவே இந்திய பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறான முஸ்லிம்களினுடய உள்ளத்தினையும், செயல்களையும் புரிந்து கொண்டு இந்திய முஸ்லிம்களை மதித்து நடப்பது மாத்திரமன்றி நல்ல முறையில் விளங்கி செயற்படவும் வேண்டும். அத்தோடு இனச்சுத்திகரிப்பு, மற்றும் இன ரீதியான செயற்பாடுகளில் இருந்து தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்கு மிகப் பெரிய உதாரணமாக இருப்பதுதான் கடந்த காலத்தில் இலங்கையில் இருந்த அரசாங்கமானது தனது ஆட்சியினை இஸ்தீரப்படுத்தி கொள்வதற்காக மத ரீதியாகவும், இன ரீதியாகவும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டவிழ்த்து விட்ட பொழுது மிக மோசமாக தோற்கடிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்ட வரலாறானது நரேந்திர மோடிக்கு சிறந்த பாடம் என்பதனை நான் இங்கு ஞாபகப்படுத்திக்கொள்ள விரும்புகின்றேன்.

ஆகவே இன ரீதியாக எந்தவொரு அரசியல் இலாபம் தேடிக்கொள்ளும் திட்டங்கள் அனைத்தும் இன்று சர்வதேச ரீதியில் தோல்வியையே தழுவி வருகின்றமையினை அண்மைக்காலமாக அவதானிக்ககூடியதாக இருக்கின்றது. இதற்கு சிறந்த உதாரணமாக  கடந்த சில வாரங்களாக அமரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரான டொனால்ட் ட்ரம் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான தீவிரமான கருத்துக்களை வெளியிட்டு வந்த நிலையில் திடீரென மக்கள் ஆதரவினை இழக்க கூடிய நிலைமை ஏற்பட்டது. இதனை நன்கறிந்து கொண்ட வேட்பாளர் ட்ரம் ஈராக்கின் மீதும் லிபியாவின் மீது அமரிக்கா படையெடுத்தமையானது மிகவும் பிழையானது என்ற கருத்தினை நேற்றைய தினம் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் இச்சம்பவமானது இன அல்லது மதவாதத்தினை தூண்டி விட்டு அரசியல் ரீதியாக உலக அளவில் செலவாக்கைனை பெற முடியாது என்பதனை எடுத்துக்காட்டுகின்றது.

Dr.ஷாக்கிர் நாயக் அவர்களின் விடயத்தினை பொறுத்த மட்டில் அவர் மிகவும் நிதானமாக எந்தவொரு இன, மத, சமூக ரீதியாக விழுமியங்களை கொச்சைப்படுத்தாது, கேவலப்படுத்தாது, விமர்சிக்காது, ஒப்பீட்டளவு தனது தஃவா பணியினை மேற்கொண்டு வருகின்றார். மற்றைய மதத்தில் உள்ள விடயங்கள் எவ்விடத்தில் இஸ்லாத்துடன் நெருங்கிச் செல்கின்றது என்று மிக நுன்னியமான முறையில் பகுப்பாய்வு செய்வது மட்டுமல்லாமல் எந்த இடத்தில் இஸ்லாத்துடன் ஏனைய மார்க்கங்களில் சொல்லப்பட்ட விடயங்கள் முரண்படுகின்றது என்பதனை மக்களுக்கு தெளிவுபடுத்துகின்ற விடயத்தினையே ஷாக்கிர் நாயக் மேற்கொண்டு வருகின்றார். அவர் எவரையும் வற்புறுத்தி இஸ்லாத்தில் இணைத்துக்கொள்ளவோ அல்லது இஸ்லாம் மட்டுமே சரியான மார்க்கம் என்ற ரீதியில் தனது தஃவா பணியினை மேற்கொள்ளதினை காணமுடியாது.

இஸ்லாத்தினையும் மற்றைய மதங்களையும் ஒப்பிட்டு அதனூடாக உங்களினுடைய அறிவினை பயன்படுத்தி இறுதி முடிவினை தேர்ந்தெடுங்கள் என்ற அடிப்படையில் அறிவு ரீதியாகவும் நிதானமாகவும் தஃவா பணியினை Dr.ஷாக்கிர் நாயக் மேற்கொண்டு வருகின்றார். உதாரணமாக இந்துக்களினுடைய புனித நூல்களை நூறு வீதம் கற்றவராக பக்கம் பக்கமாக, அத்தியாயம் அதியாயமாக எவ்வாறு சொல்லப்படுகின்றது என்பதனை அக்குவேறு ஆணிவேறாக இஸ்லாத்துடன் ஒப்பிட்டு மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக தெளிவுபடுத்தி வருக்கின்றார்.

ஆகவே இஸ்லாமிய கொள்கைக்குள்ளும் அதன் வரம்பிற்குள்ளும் நின்று கொண்டு மனித உள்ளங்களை கடுகளவேனும் புன்படுத்தாது தனது தஃவா பணியினை மேற்கொள்ளும் Dr.ஷாக்கிர் நாயக் அவர்களுக்கு எதிராக ஏற்பட்டுத்தப்பட்டுள்ள சூழ்ச்சிகளையும் ,திட்டங்களையும் முறியடிப்பதற்காகவும், Dr.ஷாக்கிர் நாயக் அவர்களின் பாதுகாப்பிற்காகவும், மன வலிமைக்காவும், உடல் நலத்திற்காவும் அவருடைய தஃவா பணி எந்த தடங்களும் இல்லாமல் நடை பெறுவதற்கும் அல்லாஹ் இடத்தில் கையேந்தி பிரார்த்திக்க வேண்டியது கலீமா கூறிய முஸ்லிம்கள் அனைவரினதும் கட்டாய கடமை என்பதனை இங்கு ஞாபகப்படுத்திக்கொள்ள விரும்புகின்றேன். 

இப்படிக்கு -கிழக்கு மகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக்.
தொகுப்பு- ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

No comments

Powered by Blogger.