July 03, 2016

நாம் ராஜகுடும்பமுமல்ல, ராஜகுடும்பங்களை அபிவிருத்தி செய்யவுமில்லை - சஜித்

(JM.Hafeez) 

துற்போதைய ஆட்சியாளர்கள் உயர்வட்டிக்கு (கினிபொலியட) கடனைப் பெற்று விமான நிலையமும், துறைமுகமும், விளையாட்டு மைதானமும் அமைக்க வில்லை, நபம் அபிவிருத்திப் பணியில் ஈடுபடவில்லை  என நிராகரிக்கப்பட்ட ஒரு குழுவினரே கூறித்திரிவதாக வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

(30.6.2106)கண்டி தபால் கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற கண்டி மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 1073 குடும்பங்களுக்கு வீடமைப்புக் கடன் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து அவர் உரையாற்றும்போதே  இவ்வாறு தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாம் ராஜகுடும்பமுமல்ல, நாம் ராஜகுடும்பங்களை அபிவிருத்தி செய்யவுமில்லை என்பதாலே எம்மைப்பார்த்து அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட வில்லை. ஆசியாவின் ஆச்சரியத்தின் தந்தை என்ற ஒருவர் செய்த அபிவிருத்தியுடன் ஒப்;பிடும் போது நாம் செய்யும் அபிவிருத்தி பாரிய வேறு பாட்டைக் கொண்டது. அவர்கள் இராஜ குடும்பம் ஒன்றைப் போசித்தனர். ஒரு குடும்பத்தை மட்டும்  வளர்த்தனர். நாட்டிலுள்ள அனைத்து வளங்களையும் தமது சுக போகத்திற்காகப் பயன் படுத்தினர். ஸ்ரீலங்கள் விமான சேவையில் முழுக்குடும்பமும் தமது அடிவருடிகளும் சுற்றுப் பயணம் செய்தனர். ஆடம்பர விமானங்களை கூலிக்கமர்த்தினர். இதன் காரணமாக ஸ்ரீலங்கள் விமான சேவையின் மிஹின் லங்கா மூடு விழாக்காண வேண்டிய நிலை ஏற்பட்டது.

எமது ஜனாதிபதி மைந்திரிப்பால சிரிN சனாவோ சுமார் பதினைந்து அதிகாரிகளுடன் சாதாரண விமானத்தில ;தான் வெளிநாடு செல்கிறார். தனது குடும்பத்தையோ தனது அடியாட்கள் என்று கூறிக் கொள்ளும் அளவு எவரையுமோ அழைத்துக் கொண்டு போவதில்லை. தனது பிரதேசத்தை மட்டும் அபிவிருத்தி செய்து தரகுப் பணம் பெறவில்லை. 

தற்போதைய அரச தலைவர்கள் தாம் தரகுப் பணம் பெறுவதற்காகவே உயர்வட்டிக்கு (கினிபொலியட) கடனைப் பெற்று விமான நிலையமும் , துறைமுகமும், விளையாட்டு மைதானமும் அமைக்க வில்லை.  தான் இல்லாத காலத்திலும் தனது பெயர் நிலைக்க வேண்டும் என்பதற்காகவே கடன் வாங்கியேனும் விமானம் தரை இறங்காத விமான நிலையத்தையும் கப்பல்கள் வருகைதாரத துறைமுகத்ததையும் விளையாட்டு வீரர்கள் விளையாடாத  மைதானங்களையும் அமைத்தனர். இதனால் எவருக்கும் பயன் ஏற்பட வில்லை. ஆனால் அவர்களது பெயர் மட்டும் அங்கு காட்சிப்படுத்தப் படுகிறது. தனது பெயர் இருந்தால் போதும் நாட்டுக்கு நலல்து நடக்கத் தேவையில்லை என்ற அந்தக் கோட்பாட்டை நாம் கடைப்பிடிக்காத காரணத்தால் எம்மைப் பார்த்து அபிவிருத்தி இல்லை என்கின்றனர். அவர்கள் யார் என்றால் பொது மக்களால் நிராகரிக்கப்பட்டு சுயமாக நிற்க முடியாது அடுத்தவர் தயவில் தொங்கிக் கொண்டிருப்பவர்களே எம்மீது விரல் நீட்டுகி;ன்றனர்.

நான் நேற்று மாத்தலையில் ஒரு கிராம வீடமைப்புத்திட்டத்தை ஆரம்பித்தேன் இன்று காலை ஓர் இடத்திலும் மாலையில் கண்டியிலும் ஆரம்பித்துள்ளேன்.

நாளை திருகோணமலை, நாளை மறுதினம் யாழ்ப்பாணம், அதனைத் தொடாந்து கிளிநொச்சி, மின்னேரியா, வவுனியா என்று காலை மாலை என எனது நேரசூசிகள் அமைந்துள்ளன. இவை அனைத்தும் வீடமைப்புத்திட்டங்களை ஆரம்பிக்கும் நிகழ்வுகளாகும், 
கண்டியில் மட்டும் கிராமிய வீடமைப்புத்திட்டம், வீடமைப்புக் கடன் திட்டம், பகுதியளவில் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் என மூன்று வகைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அண்மையில் உடதும்பறையில் ஒரு வீடமைப்புத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதே போல் நாவல்பிட்டிய, ஹேவாஹெட்ட உற்பட பல இடங்களிலும் ஆரம்பித்துள்ளோம்.

 நாடளாவிய ரீதியில் அதிக வீடமைப்புத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உதாகம, உதாகல கம்மான, பகுதியளவிலான வீடுகளை அமைக்கும் திட்டம், வீட்டு உதவித்திட்டம், சிறிய கிராம அபிவிருத்தி வீட்டுத்திட்டம், அரச ஊழியர் வீடமைப்புத்திட்டம், இளைஞர் கிராம அபிவிருத்திட்டம், ஊடகவியலாளர் வீடமைப்புத்திட்டம், சுதேச வைத்தியத் துறைக்கான 'வெத கம்மான', இப்படி பல்வேறு வீட்டுத்திட்டங் இன்று இடம் பெறுகின்றன.

எனவே நாட்டை அபிவிருத்தி செய்ய வில்லை என எப்படிக்கூற முடியும். ஆனால் ஆச்சரியத்தின் தந்தை மேற்கொண்ட அபிவிருத்தி போல் இல்லை என்பது உண்மை. ஏனெனில் அதற்கும் நாம் செய்வதற்கும் இடையே மேற்சொன்ன வேறுபாடு உண்டு.

இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாக்கிய சாலிகளுக்கு எனது கையால் வீடமைப்புக்கடன் வழங்கக் கிடைத்ததை யிட்டு மகி;ச்சி அடைகிறேன். ஏனெனில் எமது தந்தை ரனசிங்க பிரேமதாச அவர்களின் கனவான சகலருக்கும் வீடு என்ற திட்டத்தை நிறைவேற்று எனக்கு கண்டி மக்களால்தான் சந்தர்ப்பம் கிடைத்தது. அது எப்படி என்றால் கண்டியிலுள்ள சுமார் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களில் பெரும்பாலனர்கள் ஐக்கிய தேசியக்கட்சிக்கு வாக்களித்தனர். கண்டிலுள்ள 13 தொகுதிகளிலும் ஐ.தே.க. யை வெற்றி பெறச் செய்யதனர். கண்டி மக்கள் இந்தளவு பாரிய ஆதரவை தரவில்லை என்றால் இன்று நான் அமைச்சராக இருக்க முடியாது. அப்படியாயின் எனது தந்தையின் கனவும் நறைவேறாது போயிருக்கும். 
2022ல் சகலருக்கும் வீடு என்ற கோட்பாட்டையும் அடைய முடியாது போயிருக்கும். எனவே இதய சுத்தியுடன் கூறுகின்றேன் கண்டி மக்களின் ஆதரவே எம்மை ஆட்சியில் ஏற்றியது. எனவே ரனசிங்க பிரேமதாசவின் மகனுக்கு வீடமைப்புத்திட்டம் ஒன்றை தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்த வரம் தந்நதவர்கள் கண்டி மக்களாகும்.
முன்னைய தலைவரைப்போல் நான் தலதா மாளிகையின்  முன் (தலதா ஆமதுரு முன்னிலையில்)  பொய் உரைக்கவில்லை. முன்னைய தலைவர் எத்தனை முறை வந்து பொய்யுரைத்தார். நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பேன்... ஒழிப்பேன்... என்று பல முறை இந்தக் கண்டியில் வந்து கூறியும் கடைசி வரை அதனைச் செய்யவில்லை. அந்த விதமாக நான் பொய் உரைக்க மாட்டேன்.
கடந்த பத்து வருடங்களை எடுத்துக் கொண்டால் எமது கடன் தொகை இன்றைய கடனுடன் ஒப்பிடும் போது மிகக் குறைந்ததாக இருந்தது. உதாரணத்திற்கு பத்து வருடங்களுக்கு முன் நாட்டிலுள்ள ஒவ்வொறுவரும் தலா 125 000 ரூபா (ஒரு இலட்சத்து இருபத்தையாயிரம் ரூபா) கடன் செலுத்த வேண்டி இருந்தது. ஆனால் இன்று ஒவ்வொருவரும் தலா 450 000 ருபா      (நான்கு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா) செலுத்த வேண்டியுள்ளது. 
அதாவது நான்கு மடங்காகிவிட்டது. பெற்ற கடனைக் கொடுக்கவும் வேண்டும். அதற்கான தவணைக் கட்டணமாக வட்டியையும் செலுத்தவும் வேண்டும். ஏனைய தேவைகளுக்கு புதிய கடன் பெறவும் வேண்டும். இவ்வாறான ஒரு பொருளாதார சிக்கள் அடுத்து ஏற்படப்போகிறது என்பதை முன்னைய ஆட்சியாளர்களுக்கு நன்கு தெரியும். எனவே அதனை மூடி மறைத்து ஏதாவது ஒரு குழப பநிலையைத் தோற்று விக்கவே (ஜரமற) இரண்டு வருடங்களுக்கு முன் தேர்தலை நடத்தினர். மக்கள் மீதிருந்த அன்பினால் அல்ல.  அது திசை மாறி இன்று எமது கைக்கு வந்துள்ளது. அது முறை கேடான ஒழுங்கற்ற நிதிக் கொள்கையை மூடி மறைக்க மேற்கொண்ட ஒரு நடவடிக்கையாகும். இந்த அநீத கடனால்தான் இன்று ஒரு பொருளாதாரக் கஷ்ட நிலை தோன்றியுள்ளது.
நாமும் சுக போகம் அனுபவிக்க விருப்பம்தான். ஆனால் எடுத்த கடனைச் செலுத்தா விட்டால் எம்மை கறுப்புப் பட்டியலில்;;;;;;;;;;;;;;;;;;;; சேர்த்து விடுவார்கள். பிளக் லிஸ்ட் பண்ணிடுவார்கள். அப்படியாயின் சர்வதேச நாடுகள் எம்மைக் கை விட்டு விடும். அவ்வாறு கைவிடப்பட்ட நாடுகளின் நிலைமை உங்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன்.
எனவே எமது அரசியல் அமைப்பின் படி இன்னும் இரண்டு வருடங்கள் தேர்தல் நடத்தாது இருந்திருந்தால் நாடு இன்று செயல் இழந்திருக்கும். போதாமைக்கு ஜெனீவாகும் எம்மை விழுங்கி இருக்கும். 
கடந்த ஆட்சியாளர்கள், நாம் மத்திய வருமானம் கொண்ட நாடு என்று தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டனர். அப்படியான மத்திய வருமானம் கொண்ட நாடுகளான மலேசியா, இந்தோனீயா, தாய்லந்து சிங்கப்பூர் போன்ற நாடுகளை எடுத்துக் கொண்டால் அவர்களது தேசிய வருமானத்தில் 20 சதவீதம் அவர்களுக்கு ஆதாய மாகக் கிடைக்கிறிது. ஆனால் எமது நாட்டை எடுத்துக் கொண்டால் தேசிய வருமானத்தில் 10 வீதம் கூட இலாபமாகக் கிடைப்பதில்லை. அதுவும் எடுத்த கடனுக்கு வட்டி கொடுக்கக் கூடப் போதாது. அப்படியாயின் எப்படி நாம் மத்திய வருhனம் கொண்ட நாடாக முடியும். வரிய நாட்டிலும் வரிய நாடாக எம்மை கடந்h கால ஆட்சியினரது சுக போகம் மாற்றி விட்டதை மறக்க வேண்டாம். 
ராஜபக்ஷ  ஆட்சியாளர்கள் கொண்டுவந்த  ஆச்சரியத்தை நாம் மீள் செப்பனிட வேண்டியுள்ளது. அவர்கள் வெளிநாடுகளுக்குப் போகும் போது 300  பேர் அளவில் குடும்பத்துடன் 'பிக்னிக்' போனார்கள். அவர்கள் பயனித்த ஏ-350 ரக விமானங்களில் இரண்டு மாடிகள் உண்டு. அதில் மேல்மாடி சுக போகங்கள் அனைத்தையும் கொண்டது. அதில் ரெஸ்டுரண்ட், மதுபான சாலை, படுக்கை அறை கேளிக்கைகள், என அனைத்தும் இருந்தன. இறுதியில் அவர்கள் சவாரி செய்த ஸ்ரீலங்கள் எயார்வேஸின் மி1pன் லங்கா கோடிக்கணக்கில் நட்டத்தை சந்தித்தது. இப்படியா நட்டங்களை விட்டு நாட்டை மீட்டெடுக்க பிரதமர் ரனில் விக்ரமசிங்கவும் ஜனாதிபதி மைந்திரிப்பால சிரிசேனாவும் முயற்சி செய்துகொண்டிருக்கிறாhகள்.
நான் ஏற்கனவே பிரதி அமைச்சராக இருந்த காலத்தில் எனது சம்பளத்துடன் எனக்கு வழங்கப்பட்ட எரிபொருள் அலவன்சையும் எடுத்துக் கொண்டேன். ஆனால் தற்போது நாடு போகும் நிலையைப் பாhத்து எனக்கு கவலையாக உள்ளது. இதனால் நான் எனது சம்பளம் போக மிகுதியாக உள்ள எரிபொருளுக்கான அலவன்ஸ் தொகையான மூன்று இலட்சத்து இருபத்தையாயிரம் ரூபாயை வீடமைப்பு நம்பி;க்கை நிதியத்திற்கு மாதா மாதம் வெலுத்துகிறேன்.
கண்டி மாவட்த்தில் 13 இலட்சம் பேர் அளவில் வசிக்கின்றனர். இவர்களுக்காக 3196 சிறிய கிராமிய வீடமைப்புத்திட்டங்களை மேற்கொள்ள உள்ளோம். அதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. 'கெமி கிராம நிவாச கிரமய' என்ற சிறிய கிராமிய வீடமைப்புத் திட்டத்திற்கு சாதி,மத வேறு பாடுகள் எதனையும் உள்வாங்க மாட்டோம். எவருக்கு வசிக்க வீடு இல்லையோ அவர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.
காணி இல்லாதவர்களுக்கு காணி பெற்றுக் கொடக்கப்படும். காணி உள்ளவர்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும். வீடுகட்ட போதிய பணம் இல்லாதவர்களுக்கு கடன் அடிப்படையில் பணம் பெற்றுக் கொடுக்கப்படும். காணியோ, பணமோ, எதுவுமே இல்லாதவர்களுக்கு உதவி அடிப்படையில் வீட்டுகள் வழங்கப்படும். அதேநேரம் கிராமங்கள் தோரும் சிறிய கிராமிய வீடமைப்புத்திட்டம், பிரதேச ரீதியில் பிரதேச வீடமைப்புத்திட்டம், மாவட்டம் தொரும் மாவட்ட வீடமைப்புத் திட்டம்,  மாகாண வீடமைப்புத் திட்டம் என பல்வேறு திட்டங்களை முன் எடுக்க உள்ளோம். இதற்கான கெபினட் அனுமதி கிடைத்துள்ளது.இத்திட்டங்கள் மூலம் வீட்டுப் பிரச்சினை 2022ம் ஆண்டு முற்றாக நீக்கப்படும் என்றார்.

0 கருத்துரைகள்:

Post a Comment