Header Ads



"அரசாங்கத்திற்கு காய்ச்சல் வந்து விட்டது"

ஆளுங்கட்சியில் உள்ள பலர் தம்முடன் இணைவதற்கு ஆர்வமாகவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பேலியகொட பாதயாத்திரையில் தம்முடன் இணைவதற்கு ஆளுங்கட்சியின் அமைச்சர் ஒருவர்தம்மிடம் கேட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று -29- கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரை நெலும்தெனியவில் நிறைவடைந்த சந்தர்ப்பத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அதிகம் மக்கள் எம்முடன் இணைந்து கொள்ளமாட்டார்கள் என்று நினைத்ததாகவும், ஆனால் எதிர்பார்த்ததை விடவும்அதிகமானோர் இதில் கலந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தம்முடன் இணைந்துள்ள மக்களைப் பார்த்து அரசாங்கத்திற்கு காய்ச்சல்வந்து விட்டதாகவும் தெரிவித்துள்ள அவர் தமது பாதயாத்திரை கொழும்பை வந்தடையும்போது பேலியகொட சந்ததியில் கண்ணீர்ப்புகை குண்டுகளையும், மீதியுள்ளகுண்டுகளையும் எடுத்துக்கொண்டு வருமாறும் தெரிவித்துள்ள கம்மன்பில, என்னசெய்தாலும் கொழும்பிற்குள் உள்நுழைவதை அரசாங்கத்தால் தடுக்க முடியாதென்றும் சவால் விடுத்துள்ளார்.

மேலும் எமது பாதயாத்திரை ஆரம்பமாகியதும் நீதிமன்றில் இரண்டு உத்தரவுகளைபெற்றார்கள். பின்பு நீதிமன்றம் இவர்களுக்கு உத்தரவு வழங்க மறுத்துள்ளது என்றுதெரிவித்துள்ள அவர், பச்சை நிற பொலிஸார் எதிர்வரும் நாட்களில் பலதடையுத்தரவுகளை பெற நீதிமன்றம் வரவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பொலிஸ்மா அதிபரே உங்களது பச்சை நிறத் தொப்பியை அணிந்து கொண்டு நீங்கள் சிறிகொத்தாவிற்கு செல்லுமாறும் உதய கம்மன்பில பொலிஸ்மா அதிபருக்கு வேண்டுகோள்விடுத்துள்ளார்..

No comments

Powered by Blogger.