Header Ads



சொந்த தந்தையை கைவிட்ட 5 பிள்ளைகளையும், நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவரும் 80 வயது வயோதிபரின் பிள்ளைகள் 5 பேரையும் எதிர்வரும் 25ஆம் திகதி, பாணந்துறை வைத்தியசாலையில் ஆஜராகுமாறு மேலதிக நீதவான் கல்ஹாரி லியனகே உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வயோதிபரிடம் 500 ரூபாய் பணத்தை கையில் கொடுத்த அவரது மகன்களில் ஒருவர், கேகாலையிலிருந்து கடந்த 26ஆம் திகதி பஸ்ஸில் ஏற்றி அனுப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முதியவர், பாணந்துறை பஸ் நிலையத்தில் வந்து இறங்கியதுடன் சுகவீனமடைந்த நிலையில், பயணியொருவரினால் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதியவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறித்து பிள்ளைகள் 5 பேருக்கும் இரண்டு தடவைகள் அறிவித்தும் அவர்கள் வந்து பார்க்கவில்லை எனவும் அவரின் ஒரு மகன் பொலிஸில் சேவையாற்றுவதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

அதனையடுத்தே, முதியவரின் 5 பிள்ளைகளையும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

1 comment:

Powered by Blogger.