Header Ads



பெண் உறுப்பை அழித்தால் 3 வருட சிறை - ரமழான் இறுதி நாளில் காம்பியா ஜனாதிபதி


காம்பியா நாட்டில் குழந்தை திருமணத்தை தடுக்கும் வகையில் அச்செயலில் ஈடுபடுவர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காம்பியாவில் குழந்தை திருமணம் மிகவும் அதிகளவில் நடைபெற்று வருகிறது.

ஐ.நா சபை வெளியிட்ட அறிக்கையில், காம்பியாவில் உள்ள 46 சதவிகித சிறுமிகள் 18 வயதுக்கு முன்னதாகவே திருமணம் செய்துக்கொள்வது தெரியவந்தது.

இந்த தகவலை தொடர்ந்து அந்நாட்டு ஜனாதிபதியான Yahya Jammeh ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ரமழான் இறுதி நாளில் அவர் பொதுமக்கள் முன்னிலையில் பேசியபோது, ‘இனிவரும் காலங்களில் 18 வயதுக்கு குறைவான சிறுமிகளை திருமணம் செய்யக்கூடாது.

இதனை மீறி திருமணம் செய்பவர்களுக்கு 20 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும். இந்த திருமணத்திற்கு ஆதரவாக உள்ள பெற்றோர் மற்றும் இமாம்களுக்கும் தண்டனை கிடைக்கும்.

இதனை நடைமுறைப்படுத்தும் புதிய சட்டம் விரைவில் வரவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமில்லாமல், FGM எனப்படும் பெண் பிறப்புறுப்பு அழித்தல் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 3 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

2 comments:

  1. குழந்தைகளை எப்படி வளர்க்கவேண்டும், பெண்பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும், எப்பொழுது திருமணம் செய்ய வேண்டும் என்பதை எழு வானங்களுக்கு மேலால் இருந்து அனைத்தையும் படைத்த ரப்புதான் தீர்மானிக்க வேண்டும், அந்த ரப்பின் தீர்மானத்தை மற்ற யாருக்கும் அதிகாரம் இந்த பூமியிலே இல்லை.

    புகாரி ஹதீஸ் -3894

    ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.

    நான் ஆறு வயதுடையவளாக இருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னை மணந்துக் கொண்டார்கள். பிறகு நாங்கள் மதீனா வந்து ஹாரீஸ் பின் கஸ்ரஜ் குலத்தாரிடம் தங்கினோம். எனக்கு காய்ச்சல் கண்டு விடவே என் முடிகள் உதிர்ந்து விழுந்தன. பிறகு (என் முடி வளர்ந்து அதிகமாகிவிட்டது. நான் என் தோழிகள் சிலருடன் ஊஞ்சலாடிக் கொண்டிருந்த போது என் தாயார் உம்மு ரூமான் (ரலி) அவர்கள் என்னிடம் வந்து என்னை சத்தம் போட்டு அழைத்தார்கள். நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்னிடம் எதை நாடி வந்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. அவர்கள் என் கையைப் பிடித்து (அழைத்துச் சென்று) வீட்டின் கதவருகே என்னை நிறுத்திவிட்டார்கள். நான் (வேகமாக வந்ததால்) எனக்கு மூச்சிறைக்கத் தொடங்கிடவே, அவர்கள் சிறிது தண்ணீரை எடுத்து என் முகத்தையும் தலையையும் துடைத்துப் பிறகு என்னை வீட்டினுள் கொண்டு சென்றார்கள். அங்கு வீட்டில் சில அன்சாரிப் பெண்கள் இருந்தார்கள். அவர்கள்/ நன்மையுடனும் அருள் வளத்துடனும் வருக! (அல்லாஹ்வின) நற்பேறு உண்டாகட்டும் என்று (வாழ்த்துக்) கூறினர். உடனே என் தாய் என்னை அப்பெண்களிடம் ஒப்படைக்க அவர்கள் என்னை அலங்கரித்து (வீடு கூடுவதற்காகத் தயார்படுத்தி) விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முற்பகல் வேளையில் திடீரென வந்தார்கள். அவர்களிடம் அப்பெண்கள் என்னை ஒப்படைத்தனர். நான் அன்று ஒன்பது வயதுடையவளாக இருந்தேன்.

    நமது உயிரினும் மேலான நபி (ஸல்) அவர்களை விட உலகில் சிறந்த மனிதன் இதற்கு முன்னர் பிறந்ததும் இல்லை, இதன் பிறகு பிறக்கப் போவதும் இல்லை.

    அவர்களின் செயலை மறுத்து சட்டமாக்க யாருக்கும் அல்லாஹ் அதிகாரத்தை வழங்கியதாக இல்லை.
    وَالّٰٓـىٴِْ يَٮِٕسْنَ مِنَ الْمَحِيْضِ مِنْ نِّسَآٮِٕكُمْ اِنِ ارْتَبْتُمْ فَعِدَّتُهُنَّ ثَلٰثَةُ اَشْهُرٍ وَّالّٰٓـىٴِْ لَمْ يَحِضْنَ‌ ؕ وَاُولَاتُ الْاَحْمَالِ اَجَلُهُنَّ اَنْ يَّضَعْنَ حَمْلَهُنَّ ‌ؕ وَمَنْ يَّـتَّـقِ اللّٰهَ يَجْعَلْ لَّهٗ مِنْ اَمْرِهٖ یُسْرًا‏ 

    (அல் குர்ஆன் 65:4)

    இதனையே அல்லாஹ்வின் வார்த்தைகளும் உண்மைப் படுத்துகின்றன. இதிலே அல்லாஹ் பருவமடையாத பெண்களுக்கான இத்தவுடைய காலங்களை வரையறை செய்து வழிகாட்டியதாக இருக்கின்றது. ஆகவே, பெண்களுக்கு இதுதான் திருமண வயது என்று அல்லாஹ் அறிவிக்காத ஒன்றை யார் அறிவிக்கின்ராரோ, அவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்து தெளிவாகவே வரம்பு மீறி விட்டார்.

    ReplyDelete
  2. இதற்கும் மேலதிகமாக இந்த மனிதர் மீண்டும் அல்லாஹ்வின் தூதரும், அல்லாஹ்வும் தீர்மானித்ததில் கையை வைத்து வரம்பு மீறுகின்றார்.

    உம்மு அதிய்யா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் பெண்களுக்கு கத்னா செய்பவர்களாக இருந்தார்கள் அவர்களுடம் ஒட்ட நறுக்கிவிடாதே! மேலோட்டமாக நறுக்குவாயாக என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்.

    நூல்: ​​அபூதாவூத் 4587

    526 عَنْ أَبِي مُوسَى قَالَ اخْتَلَفَ فِي ذَلِكَ رَهْطٌ مِنْ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ فَقَالَ الْأَنْصَارِيُّونَ لَا يَجِبُ الْغُسْلُ إِلَّا مِنْ الدَّفْقِ أَوْ مِنْ الْمَاءِ وَقَالَ الْمُهَاجِرُونَ بَلْ إِذَا خَالَطَ فَقَدْ وَجَبَ الْغُسْلُ قَالَ قَالَ أَبُو مُوسَى فَأَنَا أَشْفِيكُمْ مِنْ ذَلِكَ فَقُمْتُ فَاسْتَأْذَنْتُ عَلَى عَائِشَةَ فَأُذِنَ لِي فَقُلْتُ لَهَا يَا أُمَّاهْ أَوْ يَا أُمَّ الْمُؤْمِنِينَ إِنِّي أُرِيدُ أَنْ أَسْأَلَكِ عَنْ شَيْءٍ وَإِنِّي أَسْتَحْيِيكِ فَقَالَتْ لَا تَسْتَحْيِي أَنْ تَسْأَلَنِي عَمَّا كُنْتَ سَائِلًا عَنْهُ أُمَّكَ الَّتِي وَلَدَتْكَ فَإِنَّمَا أَنَا أُمُّكَ قُلْتُ فَمَا يُوجِبُ الْغُسْلَ قَالَتْ عَلَى الْخَبِيرِ سَقَطْتَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جَلَسَ بَيْنَ شُعَبِهَا الْأَرْبَعِ وَمَسَّ الْخِتَانُ الْخِتَانَ فَقَدْ وَجَبَ الْغُسْلُ رواه مسلم

    ஒருவர் தம் மனைவியின் (இரு கைகள், இரு கால்கள் ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையே அமர்ந்து கத்னா செய்யப்படும் இரு உறுப்புக்கள் சந்தித்து விட்டாலே (இருவர் மீதும்) குளிப்பு கடமையாகிவிடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

    நூல் : முஸ்லிம் (579)

    இந்தச் செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆணுறுப்பையும் பெண்ணுறுப்பையும் கிதான் என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார்கள். இந்த வார்த்தைக்கு கத்னா செய்யப்பட்ட உறுப்பு என்று பொருள் இருக்கின்றது.

    ஆகவே, யாரும் அதிகாரம், ஆணவம் கொண்டு அல்லாஹ்வின் சட்டங்களோடு விளையாடாமல் இருக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.