Header Ads



கோதாவை கைது செய்வதில் 2 நிலைப்பாடு - ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தவும் உத்தேசம்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய  ராஜபக்ஷவை  எப்படியாவது சிறையிலடைக்க வேண்டுமென்ற கடும் நிலைப்பாட்டில்  அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசிக் கட்சியினர் இருப்பதாகக் கூறப்படுகிறது.

எனினும் அரசாங்கதில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக அங்கம் வகிக்கும்  இரு தரப்பினருக்கு இடையில் கடும் கொள்கை முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

அவன்கார்ட்  சம்பவம் ஊடாக கோதாபய ராஜபக்ஷவை கைது செய்யும் முயற்சி தோல்வியடைந்தது. இதனால் மாற்று வழி குறித்து கவனம் செலுத்தி வரும் ஐக்கிய தேசியக் கட்சி, பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் லசந்த விக்கிரமதுங்க, வசீம் தாஜூடீன் கொலைகள் தொடர்பில் கோதாபய ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டுமென்ற கடும் நிலைப்பாட்டில் இருப்பதாக அந்தக் கட்சியின் சிரேஷ்ட  அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் கோதாபய ராஜபக்ஷ கைது செய்யப்படுவதை கடுமையாக எதிர்க்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாத பட்சத்தில் கோதாபய ராஜபக்ஷவை வேட்பாளராக நிறுத்தும் உத்தேசத்தில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 2
இன்னும் இரண்டு மாதங்களுக்குள் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவு வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உயர்மட்டத்தில் இடம்பெற்ற சில குற்றச்செயல்கள் தொடர்பாக நடத்தப்படுமு் விசாரணைகளின் தொடர்ச்சியாகவே கோத்தாபய ராஜபக்ச கைது செய்யப்படுவார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கோத்தாபய ராஜபக்ச கைது செய்யப்பட்டால், சிறைக்குச் செல்லும்டு, ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த நான்காவது நபராக அவர் இருப்பார்.
ஏற்கனவே பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, யோசித ராஜபக்ச ஆகியோர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, கோத்தாபய ராஜபக்ச அரசியலில் நுழைவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
கோத்தாபய ராஜபக்ச நாடாளுமன்றத்துக்கு வர வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புவதாகவும் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிரான பரப்புரைகளை அவர் ஏற்கனவே ஆரம்பித்திருப்பதாகவும், கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.