Header Ads



துருக்கிக்கு அனைத்து வகையிலும் உதவ தயார் - எர்துகானுக்கு ஒபாமா தெரிவிப்பு

துருக்கிக்கு அனைத்து வகையிலும் உதவ தயார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. உலகையே பதற வைத்துள்ள இந்த கொடூர தாக்குதல்களில் 41 பேர் பலியானர்கள். 230 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். 

இந்நிலையில் துருக்கி பிரதமர் தயிப் எர்டோகனை அமெரிக்க அதிபர் ஒபாமா தொடர்புக்கொண்டு பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக வெள்ளை மாளிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் துருக்கி பிரதமர் தயிப் எர்டோகனை தொடர்புக்கொண்டு பேசிய அதிபர் ஒபாமா அமெரிக்க மக்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். 

மேலும் துருக்கிக்கு அமெரிக்கா அனைத்து வகையிலும் உதவ தாயார் என்றும், விசாரணை மேற்கொள்வதிலோ அல்லது நாட்டின் பாதுகாப்பை அதிகரிப்பதிலோ உதவிக்கேட்டால் செய்ய தாயாராக இருப்பதாக ஒபாமா உறுதியளித்துள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.

2 comments:

  1. ஈராக் , ஆப்கானிஸ்தானுக்கு உதவியது போலவா Mr President!

    ReplyDelete
  2. USA made Iraq and Afganistan better now. Both are democratic countries now, and terrorists are wiped out.
    Afganistan is playing international cricket too.

    ReplyDelete

Powered by Blogger.