Header Ads



"பஸ் நிலையத்தில் கவிதை வாசிப்பது போல, என்னால் பேச முடியாது" பொன்சேக்கா பற்றி மேர்வின்

அமைச்சர் சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுக்கொண்ட பின்னர் அவர் கட்சியின் களனி தொகுதி அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.

பிரதான அரசியல் கட்சியின் உறுப்பினர் என்ற வகையில் செயற்பாட்டு ரீதியான அரசியலில் ஈடுபடாவிட்டாலும் களனியில் அரசியல் அதிகாரமிக்கவராக செயற்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா ஐக்கிய தேசியக் கட்சியில் மாத்திரமல்ல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஊடாகவும் அரசியலில் ஈடுபட்டார்.

இந்த நிலையில், சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியின் களனி தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் சமேர்வின் சில்வாவிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.

கேள்வி - சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியின் களனி தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டமை குறித்து உங்களுடைய கருத்து என்ன?

பதில் - அது ஐக்கிய தேசியக் கட்சியின் முடிவு. அதற்கு நாங்கள் வார்த்தைகளை கூறி பயனில்லை. அவர் களனி தொகுதியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை. நான் மகிழ்ச்சியடைகிறேன்.

கேள்வி - பொன்சேகாவின் பணிகளுக்கு நீங்கள் உதவி செய்வீர்களா?

பதில்- அவர் நாட்டை மீட்க தலைமைத்துவத்தை ஏற்றவர் என்ற வகையில் நான் அவரை எதிர்ப்பதால் எந்தப் பயனும் இல்லை.

கேள்வி - சரத் பொன்சேகா அரசியல் செய்ய களனியில் நல்ல சூழல் இருக்கின்றதா?.

பதில் - இது பற்றி நான் பேச முடியாது. கட்சி ஒன்று எடுத்த தீர்மானம் குறித்து பஸ் நிலையத்தில் கவிதை வாசிப்பது போல் என்னால் பேச முடியாது என மேர்வின் சில்வா பதிலளித்துள்ளார்.

No comments

Powered by Blogger.