Header Ads



நஸீர் அஹமட்டுக்கு எதிரான, அடிப்படை உரிமை மீறல் மனு தள்ளுபடி

கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன்  நஸீர் அஹமட்டுக்கு எதிராக சட்டத்தரணி பி. லியனஆராய்ச்சியினால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு அதன் முதலாவது தவணை புதன்கிழமை (ஜுன் 29. 2016) விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபொழுதே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 20 ஆம் திகதி திருகோணமலை- சம்பூர் பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வின்போது கடற்படை அதிகாரி ஒருவரை தூற்றியதுடன்இ சீருடையில் இருந்த மாணவி ஒருவரை அசௌகரியத்திற்கு உட்படுத்தியதாக மனுதாரர் குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்த நிலையில் அவர்களினது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக சட்டத்தரணி தனது மனுவில் குறிப்பிட்டிருந்ததுடன்இ குறித்த மனுவில் முதலமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் எனவும் நட்ட ஈட்டுத் தொகையொன்றை வழங்க வேண்டும் எனவும் மனுதாரர் அந்த மனுவில் கேட்டிருந்தார்.

குறித்த வழக்கு புதன்கிழமை (ஜுன் 29இ 2016) மேல் நீதிமன்ற நீதியரசர்களான கே. ஸ்ரீபவன் (சிரேஷ்ட நீதிபதி)இ பிறியந்த ஜயவர்தன மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபொழுது மனுதாரரால் கூறப்பட்ட கோரிக்கையானது முகத்தோற்ற அளவில் அடிப்படையற்ற காரணங்களைக் கொண்டு இந்த வழக்கைத் தொடர முடியாதெனக் கூறிய நீதிபதிகள் வழக்கு தள்ளுபடி செய்தனர்.

பிரதிவாதிகள் சார்பில் ஜனாதிபதிகளான எம்.ஐ.எம்.இஷார்இ எம்.மின்சார் ஆகிய சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.

மே மாதம் 20 ஆம் திகதி திருகோணமலை சம்பூர் பகுதி பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதுஇ கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் கடற்படை வீரர் ஒருவரை கடும் சொற்களால் திட்டியதான சம்பவம் ஊடகங்களிலும் தென்னிலங்கையிலும் சிலாகித்துப் பேசப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன்  நஸீர் அஹமட்டுக்கு எதிராக, சட்டத்தரணி பி. லியனஆராய்ச்சியினால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு அதன் முதலாவது தவணை புதன்கிழமை (ஜுன் 29, 2016) விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபொழுதே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 20 ஆம் திகதி திருகோணமலை- சம்பூர் பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வின்போது கடற்படை அதிகாரி ஒருவரை தூற்றியதுடன், சீருடையில் இருந்த மாணவி ஒருவரை அசௌகரியத்திற்கு உட்படுத்தியதாக மனுதாரர் குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்த நிலையில் அவர்களினது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக சட்டத்தரணி தனது மனுவில் குறிப்பிட்டிருந்ததுடன், குறித்த மனுவில் முதலமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் எனவும் நட்ட ஈட்டுத் தொகையொன்றை வழங்க வேண்டும் எனவும் மனுதாரர் அந்த மனுவில் கேட்டிருந்தார்.

குறித்த வழக்கு புதன்கிழமை (ஜுன் 29, 2016) மேல் நீதிமன்ற நீதியரசர்களான கே. ஸ்ரீபவன் (சிரேஷ்ட நீதிபதி), பிறியந்த ஜயவர்தன மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபொழுது மனுதாரரால் கூறப்பட்ட கோரிக்கையானது முகத்தோற்ற அளவில் அடிப்படையற்ற காரணங்களைக் கொண்டு இந்த வழக்கைத் தொடர முடியாதெனக் கூறிய நீதிபதிகள் வழக்கு தள்ளுபடி செய்தனர்.

பிரதிவாதிகள் சார்பில் ஜனாதிபதிகளான எம்.ஐ.எம்.இஷார், எம்.மின்சார் ஆகிய சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.

மே மாதம் 20 ஆம் திகதி திருகோணமலை சம்பூர் பகுதி பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் கடற்படை வீரர் ஒருவரை கடும் சொற்களால் திட்டியதான சம்பவம் ஊடகங்களிலும் தென்னிலங்கையிலும் சிலாகித்துப் பேசப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.