Header Ads



"ஸகாதுல் பித்ரை பணமாகக் கொடுத்தல் - ஒரு மகாஸிதியப் பார்வை"

-அஷ்ஷெய்க் TM முபாரிஸ் ரஷாதி-

ஸகாதுல் பித்ர் சம்பந்தமாக வந்துள்ள அனைத்து நபிமொழிகளையும் ஆய்வு செய்கின்ற போது தாரகுத்னி மற்றும் பைஹகி போன்ற கிரந்தங்களில் பதிவாகியுள்ள (ஏழைகளை பெருநாள் தினத்தன்று பிறரை விட்டும் தேவையற்றிருக்கச் செய்தல்) என்ற இந்த (பலவீனாமான) செய்தியே ஸகாதுல் பித்ர் சம்பந்தமான ஒட்டுமொத்த செய்திகளினதும் இலக்கை சொல்ல வருகிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

அந்த வகையில் ஸகாதுல் பித்ரை பணமாக கொடுப்பதுவே இந்த காலத்தையும் சூழலையும் பொறுத்தவரையில் மிகவும் உசிதமானது என்றே நாம் கருதுகின்றோம்.

இங்கு மனித நலன்களை முன்னுரிமைப் படுத்துதல் என்ற பகுதிக்கமையவே  இந்த நிலைப்பாட்டை நாம் முன்மொழிகிறோம் அதுவல்லாது அடுத்த வழிமுறை உசிதமற்றது என்ற நிலைப்பாடிலல்ல  என்பதனையும் கவனத்தில் கொள்க.

ஸகாதுல் பித்ரை பணமாக கொடுக்க முடியுமென்ற நிலைப்பாட்டை இமாம்களான ஹஸன் பஸரி , சுப்யான் அத்தௌரி , அபூ ஹனீபா , உமர் இப்னு அப்துல் அஸீஸ் ரஹிமஹுமுல்லாஹ் போன்றோர் கொண்டுள்ளனர் .

மனித நலன்காக்க ஒரு சட்டத்தை ஷரீஅத் விதியாக்கையில் குறித்த சட்டத்தின் நெகிழ்வுத் தன்மையை புரிந்து கொண்டு அதன் இலக்கை அடைய முயற்சிப்பதை விட்டு விட்டு குறித்த வாசகங்களை மொழிபெயர்த்து  இலக்கை புறக்கணித்து மொழிபெயர்ப்பை மாத்திரம் அடிப்படை சட்ட மூலமாக்கி விடக்கூடாது.

அல்லாஹு அஃலம்
 30-06-2016

1 comment:

  1. It is the best time to give sadakatul fitra In the day of eid before prayers.if a person up hold a load of his family's fitra and giving to the door of a poor family is better than collection
    of money distribution.bcs the person who gives, shows the fear to his lord ALLAH.
    If somebody gives money to a collecting centre he dosnt feel the poor.

    ReplyDelete

Powered by Blogger.