Header Ads



வவுனியா இளைஞரின் 2 கண்டுபிடிப்பு - 200 கோடிக்கு விற்பனை, முந்தியடித்து வாங்கிய இந்தியா

வவுனியாவைச் சேர்ந்த இளம் கண்டுபிடிப்பாளர் ஒருவர் தனது  இரண்டு கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையை, 200 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளார்.

31 வயதுடைய என்.ஜக்சன் என்ற இந்த இளம் கண்டுபிடிப்பாளரிடம் இருந்து இந்திய நிறுவனம் ஒன்றும், சிறிலங்கா நிறுவனம் ஒன்றுமே, சுமார் 200 கோடி ரூபாவைக் கொடுத்து இந்தக் காப்புரிமையை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், காப்புரிமை விற்பனையின் சரியான பெறுமதி வெளியிடப்படவில்லை.

மாற்றுத் திறனாளிகளுக்காக வடிவமைக்கப்பட்ட  கழிப்பறைத் தொழில்நுட்பத்துக்கான காப்புரிமையை இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த, நிறுவனம் ஒன்று வாங்கியுள்ளது.

கடந்த வாரம் இதுதொடர்பான உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்தக் காப்புரிமைக்காக 125 கோடி ரூபாவை இந்திய நிறுவனம் வழங்கியதாக கூறப்படுகிறது.
 
அதேவேளை, ஜக்சனின் மற்றொரு கண்டுபிடிப்பான, மின்சக்தி இல்லாமல், நீரிறைக்கும் இயந்திரத்தை இயக்குவது தொடர்பான தொழில்நுட்பத்தை, ஈஸ்ட் ஈகிள் புரொப்பர்டி டிவலப்பேர்ஸ் நிறுவனம், வாங்கியுள்ளது.

இந்த தொழில்நுட்பத்தில் நீரிறைக்கும் இயந்திரத்தை இயக்குவதற்கு மின்சாரமோ, சூரியகலமோ, காற்றாலை மின்சக்தியோ, எரிபொருளோ தேவையில்லை. சுற்றாடலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது.

இது விவசாயிகளுக்குப் பெரும் நன்மையைத் தரக்கூடிய ஒன்று என ஜக்சன் தெரிவித்துள்ளார். 75 கோடி ரூபாவுக்கு இந்தக் காப்புரிமையை விற்பனை செய்யும் உடன்பாடும் கடந்தவாரம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

கிளிநொச்சியை பூர்வீகமாக கொண்ட இளம்கண்டுபிடிப்பாளர் ஜக்சன், 1997ஆம் ஆண்டு வரை கிளிநொச்சி பாரதிபுரம் வித்தியாலயத்தில் கல்வி கற்றவர். அதன் பின்னர் வவுனியா வீரபுரம் மாணிக்கவாசகம் வித்தியாலயத்தில், கல்வி கற்றார்.

க.பொ.த உயர்தரத்தில் கலைப்பிரிவில் கற்ற இவர் புதிய கண்டுபிடிப்புகளின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். தந்தையை இழந்த இவருக்கு ஆசிரியையாகப் பணியாற்றும் தாயாரே ஆலோசகராக விளங்குகிறார்.

இதனிடையே, ஜக்சனின் நீரிறைக்கும் தொழில்நுட்பத்தின் காப்புரிமையைப் பெற்றுக் கொண்ட ஈஸ்ட் ஈகிள் புரொப்பர்டி டிவலப்பேர்ஸ் நிறுவத்தின் பணிப்பாளரான திமிந்த கருணாரத்ன, “இந்த தொழில்நுட்பத்தின் மூலம், விவசாயிகளுக்கு பயனளிக்கும் நீரிறைக்கும் இயந்திரங்களை ஒரு ஆண்டுக்குள் தயாரித்து விற்பனைக்கு விடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

75 கோடி ரூபாவுக்கு தாம் இந்த தொழில்நுட்பத்தின் காப்புரிமையை வாங்கியுள்ளதாகவும்,  இது ஒரு நல்ல முதலீடு என்றும் தெரிவித்துள்ள அவர், இதன் மூலம்,  பல நூறு பில்லியன் ரூபாவை சம்பாதிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.


15 comments:

  1. Congrats Jackshon! Keep it up!

    ReplyDelete
  2. Amazing and wonderful talent
    God bless you and your success

    ReplyDelete
  3. tamilan.tamilanakPiranthathukku.perumai.padykiren

    ReplyDelete
  4. I'm. Proud of you Jackson..

    ReplyDelete
  5. Really appreciated, congrats Jacson

    ReplyDelete
  6. Masha Allah... Congratulations dear...

    ReplyDelete
  7. Good..congratz.. keep it up

    ReplyDelete
  8. எந்தப் பல்கலைக் கழகமும் போகாமல் சிந்தனை, விடாமுயற்சி என்பவற்றை முதலீடாகக் கொண்டு சிறந்த தொழில் நுட்பங்களைக் கணடு பிடித்து மனித சமூகத்திற்கு மிகச் சிறந்த ஒரு சேவையைச் செய்துள்ள் ஜக்சன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. Congratulations! Bring more credits to our country

    ReplyDelete
  10. I keep my fingers crossed for you Jackson and meantime I encourage you to explore the Al-Quran in which you may scrutinize many facts. May the almighty Allah enlighten you the immaculate Islam!

    ReplyDelete
  11. Unfortunately the guys who threatened Jackson and asked 100 crores are also tamils. So by the mean time you are proud be ashamed of what you are. Coz still you can control these sects after such a long war and they control you.

    ReplyDelete
  12. Wel done bro keep it up multiple

    ReplyDelete

Powered by Blogger.