Header Ads



போலியான தேசப்பற்றின் வெறித்தனங்கள், நாட்டின் வளர்ச்சியை பின் தள்ளிவிடும் - ராஜித

இனவாதப் போக்குகளை கைவிட்டு நாட்டின் முன்னேற்றத்துக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன அறைகூவல் விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் கடற்படை அதிகாரியுடன் வாய்த்தர்க்கம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிடும் போது அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

இலங்கையில் பெரும்பாலானவர்கள் கிணற்றுத் தவளைகள் போன்று குறுகிய மனப்பான்மையைக் கொண்டிருக்கின்றனர்.

உலகின் ஏனைய நாடுகள் குறித்த அறிவு கூட அவர்களிடம் இல்லை. இதன் காரணமாகவே எமது நாடு இன்னும் முன்னேற்றமடையாமல் பின்தங்கியுள்ளது.

அத்துடன் போலியான தேசப்பற்றின் மூலமான வெறித்தனங்கள் இந்நாட்டின் வளர்ச்சியை இன்னும் பின் தள்ளிவிடும்.

எனவே அனைவரும் இனவாதப் போக்குகளை கைவிட்டு நாட்டின் முன்னேற்றத்துக்காக ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

1 comment:

  1. The only minister that was true to his word , An honest politician being respected by all three communities ,

    ReplyDelete

Powered by Blogger.