Header Ads



'பல்லூஜாவை தெஹ்ரான் கற்பழிக்கிறது'

-Zacky Fouz-

"பல்லூஜா" ஈரானிய அதிகார கும்பலின் புதிய கொலைக்களமாக மாறியுள்ளது. பல்லூஜா நகரை தாக்குதவதற்கான திட்டமிடல்களில் தீவிர ஈரானிய ஆதாரவாளர்களான நூர் மாலிகி மற்றும் ஜனரல் காஸிம் ஸூலைமானி போன்றவர்கள் களமிறங்கியுள்ளனர். மட்டுமன்றி, பல்லூஜா நகரின் மீதான தாக்குதல்களுக்கான தயார்படுத்தல்களில் தெளிவாகவே 'நாம் ஹூசைனுக்காகவும், ஸைனபுக்காகவும் போராடச் செல்கிறோம்' என்ற நாமம் மீட்டி மீட்டி ஓதப்படுவதனை காணக் கூடியதாக உள்ளது.

பல்லூஜா நகரையும் அதிலுள்ளவர்களையம் 'நாகப்பாம்பின் தலை' என்றும் 'சுத்தமான காபிர்கள்' என வர்ணித்து ஈரானிய ஜனரல்கள் உரைநிகழ்த்துகின்றனர். மறுபுறம், ' பல்லூஜா' நகரை நோக்கி இராணுவத்தை நகர்த்தும் ஈரானிய ஜனரல்கள்'குல் யா அயுஹல் காபிரூன்' என்ற வார்த்தையை மொழிந்த வண்ணம் தமது படைகளை உச்சாகமூட்டுகின்றனர். ஜ எஸ் படையை விட 'தீவிர தக்பீர் இயககமாக' ஈரான் மாறிவிட்டது என்ற முஃதஸ் அல் கதீபின் சமீபத்திய டிவீட்டர் செய்தி 'ஈரானிய அரசும் , காஸிம் சுலைமானி தலைமையிலான இராணுவ கும்பலும்' எந்தளவு தூரம் ஸூன்னி உலகின் பலவீனத்தை தனது நாட்டின் அதிகார நலன்களுக்காக பயன்படுத்த துடிக்கின்றனர் என்பதனை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

அரபு வசந்தம் எப்படி வலைகுடா நாடுகளது உள்ளார்ந்த பதவி மோகத்தையும், போலி இஸ்லாமிய கோசத்தையும் அசுத்தமானதாக காட்டியதோ, அதுபோலவே தெஹ்ரானின் கொலை வெறி முகத்திரையை கிழத்துக் காண்பித்துள்ளது. பல்லூஜா அதன் ஒரு அங்கமே.

உண்மையில், பல்லூஜா நகரை 'மஸ்ஜிதுகளின் நகரம்' என்ற புனைப் பெயரால் அழைப்பதுண்டு. அந்நகர மக்கள் உயர்ந்த இஸ்லாமியப் பற்றும் , போராட்ட உணர்வும் கொண்டவர்கள். அமெரிக்காவுக்கு எதிராக கடைசி வரை போரடியவர்கள். பின்பு, De-barthification என்ற பெயரில் நூர் மாலிகி ஆரம்பித்து வைத்த 'ஸூன்னிக் கற்பழிப்பு செயற்திட்டத்தை' எதிர்த்து நின்றதும் பல்லூஜா நகர மக்களே. மவ்ஸூல் மக்களை விடவும் போராட்ட உணர்வும், இஸ்லாமியப் பற்றும் நிறைந்தவர்கள் அவர்கள். ஆழமான அரசியல் விழிப்புணர்வும் கொண்டவர்கள். தெஹ்ரானின் உதவியுடன் மாலிகி செயற்படுத்திய ஸூன்னிகளை அரசியல் தளத்திலிருந்து ஓரங்கட்டும் செயற்திட்டத்தை தளர்த்தினால், அல்கைதாவை விரட்டியடிப்போம் என சவால் விட்டவர்கள். அதனை சாதித்தும் காட்டியவர்கள்.

எனவே, ஈராக்கைப் பொருத்தவரை பல்லூஜாவை இனச் சுத்திகரிப்பு செய்தல் என்பது அங்குள்ள மனிதர்களை அகற்றி விடுதல் என்பதனை விட அகன்ற பொருளைத் தரக் கூடியது. 'பல்லூஜா' என்பது ஸூன்னி முஸ்லிம்களின் பாரம்பரிய கலாச்சார,அரசியல் மற்றும் சமூகவியல் தளமாகும். அதனை முழுமையாக சுத்தப்படுத்த வேண்டும் என காஸிம் ஸூலைமானியும், காமைனியும் தீர்மானித்து விட்டார்கள்.அதாவது, ரமாதியை, டிக்ரிட்டை , ஹலபை , ஹமாவை மற்றும் டமஸ்கஸைப் போன்று ஸூன்னி முஸ்லிம் பெரும்பான்மை பிராந்தியங்களின் சனப்பரம்பலை சீர்குலைக்கும் (Demography) தெஹ்ரானிய செயற்திட்டத்தின் தொடர்ச்சியே பல்லூஜா என்பது முழுமையான உண்மை.

அதேபோன்று ஈராக்கிய அரசாங்கம் தனது இருப்பை பாதிக்கும் பாரிய சவால்களை எதிர்கொள்வதிலிருந்து தப்பிக் கொள்வதற்கான 'இராஜதந்திர கதவாக' (Diplomatic exit) ஆக பல்லூஜா மீதான தாக்குதல்களை பயன்படுத்திக் கொள்கிறது. சமகாலத்தில் ஈராக் ஜந்து மிகப் பெரிய சவால்களை ஏககாலத்தில் முகங்கொடுத்து வருகிறது. இவை ஈராக்கிய அரசாங்கத்தை மொத்தமாக இல்லாமல் செய்து விடக்கூடியவை மட்டுமல்லாமல் சீயா அரசியல் கழகத்த்திற்குல் போரை வெடிக்கச் செய்யும் சக்தி மிக்கது.

முதலாவது, மோசடியாளர்களை உள்ளடக்கிய அரசாங்கம், தேசிய ஒருமைப்பாடற்ற தன்மை, குழுநிலைவாத மோதல்கள், ஈரானிய ஏஜன்டுகளாக செயற்படும் ஆயுதக் குழுக்கள் வன்முறைச் சூழல் என்பனவாகும். 

இதற்கு பல்லூஜாவைத் தாக்குதினுடாகவோ அல்லது மௌஸூலைக் கைப்பற்றுவதினுடாகவே தீர்வு கிடைக்கப் போவதுமில்லை என்பது தெளிவானது.

ஆனால்,தற்போதைய ஈராக்கில் 50 வீதம் அமெரிக்காவுக்கு சொந்தமானது, அடுத்த 50 வீதம் ஈரானுக்கு சொந்தமனது. இந்த இரண்டு சாராரினதும் நலன்களை வைத்து ஊடாட்டம் (Interplay) நடாத்துவதினுடாக ஈராக்கின் வங்கரோத்து அரசாங்கம் இருப்பை தக்க வைத்துக் கொள்ள முயல்கிறது. மாறாக, ஈரானிடமோ அல்லது அதன் வால் பிடிக்கும் ஈராக்கிய அரசாங்கத்திடமோ ஈராக் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான பரந்த வேலைத்திட்டமொன்றிலை;லை என்பது பட்டவர்த்தனமானது.

இது ஈராக்கிய அரசாங்கம் என்ற புள்ளியிலிருந்து பல்லூஜாவை மதிப்பீடு செய்யும் போது புலப்படும் சில அம்சங்களாகும்.

இது போக , ஈரானுடைய சமீபத்திய கொலைவெறித்தனமான நகர்வுகளும், அதனை நியாயப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் குழுநிலை கருத்துக்களும் 'Sectarian Rhetoric' மையநிலை இஸ்லாமிய அறிஞர்கள் சகலரையும் 'இனி ஒரு போதும் மன்னிக்க முடியாத தேசம் ஈரான். அதன் அரசும் , தலைமைகளும் அதியுச்ச குழுநிலைவாத அரசியலை செயற்படுத்துகிறது. அது தோல்வியடைய வேண்டும்' என்ற நிலைப்பாட்டை நோக்கித் தள்ளியிருக்கிறது

1 comment:

  1. I hope... those sunni brothers in our country who talks in support of Iran will realize their wrong understanding.

    If you ask christians 'Who are the best in your religion"? They will say the companions of Jesus (pbuh). But If you ask Shia "who are the worst in Islam"? They say companions of Muhammed (pbuh).

    This the how they treat sahaaba,, so it is nothing for them to kill our brothers and sisters in Iraq.

    ReplyDelete

Powered by Blogger.