Header Ads



"புரியாத புதிர்" - 3 படை கிணற்றில் வாழ்ந்த, பொறி­யி­ய­லாளரின் சடலம் மீட்பு - அம்­பாறையில் அதிர்ச்சி


வெளி­யு­லகத் தொடர்­பின்றி மூன்று படை கிணற்று வீடொன்­றினுள் சுமார் பத்து வரு­டங்கள் தன்­னந்­த­னி­ய­ாக வாழ்ந்­து­ வந்த பொறி­யி­ய­லாளர் ஒருவர் மர­ண­ம­டைந்­துள்ளார். இச்­சம்­பவம் காரை­தீவில் இடம்­பெற்­றுள்­ளது. காரை­தீவைச் சேர்ந்த பவளன் என அழைக்­கப்­படும் செல்­லத்­துரை நடே­சா­னந்தம் (வயது 57) எனும் பொறி­யி­ய­லா­ளரே இவ்­விதம் மர­ண­மா­னவராவார். 

இவர் இரு­வா­ரங்­க­ளுக்கு முன்பு மர­ணித்­தி­ருக்­க­லா­மென நம்­பப்­ப­டு­கி­றது. ஏனெனில் சடலம் உருக்­கு­லைந்­த­நி­லையில் காணப்­பட்­டது. இவ­ரது சடலம் நேற்று  வியா­ழ­க்கிழமை சம்­மாந்­துறைப் பொலிஸாரின் விசா­ர­ணையின் பின்பு பிரேத பரி­சோ­த­னைக்­காக அம்­பாறை ஆதார வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்­டது. அவர் பற்றி அவ­ரது உற­வி­னர்கள் கூறி­ய­­தா­வது: 

காரை­தீ­வைச்­சேர்ந்த செல்­லத்­துரை நடே­சா­னந்தம் பேரா­தனை பல்­க­லைக்­க­ழ­கத்தில் பொறி­யியல் பீடத்தில் பயின்­றவர். அவர் சீறா நிறு­வ­னத்தில் பணி­யாற்­றி­ருந்தார். திரு­ம­ண­மா­க­வில்லை.  பின்பு காயத்­திரி மந்­தி­ரத்தில் பற்­றுப்­பி­டித்த அவர் அவ­ரது சகோ­த­ரியின் வீட்டின் வெளிச்­ச­மின்­றிய அறையில் தனி­மை­யாக தியா­னத்தில் வாழ்ந்­து­வந்தார். சில­வேளை மெழு­கு­திரி மட்டும் எரி­யுமாம். சூரி­ய­ ஒளி புகா­வண்ணம் கும்­மி­ருட்­டிலே நிர்வா­ண­மாக தியா­னத்­தி­லி­ருந்­து­ வந்தார் என்றும் கூறப்­ப­டு­கி­றது. அவ­ருக்­கான உணவு ஒரு வழியால் அனுப்­பட்­டு­வந்­தது.

விசித்­தி­ர­மான கிணறு வடிவ வீடு

சுனா­மி­யின்­பின்பு அவர் தனக்­கென பிரத்­தி­யே­க­மாக அவரால் வடி­வ­மைக்­கப்­பட்ட கிணறு வடி­வ­மான பெரிய வீடொன்றை காரை­தீவு பொது நூல­கத்­திற்­க­ரு­கா­மையில் காத்­தி­ர­மாக நிர்மா­ணித்தார். அவ் விசித்­தி­ர­மான வீடு மூன்று படை­களை அதா­வது 3 சுவர்­களை கொண்டு கிணறு வடிவில் அமைக்­கப்­பட்­டி­ருந்­தது. உள்ளே அனைத்து வச­தி­களும் ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­த­தாக சொல்­லப்­ப­டு­கி­றது. 

குழாய்நீர் வசதி, மின்­சார வசதி சக­லதும் ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது

இவ்­வீட்­டினுள் அவர் 2007 ஆம் ஆண்டளவில் குடி­யேறி இறக்­கும்­வரை சூரி­ய­வெ­ளிச்­ச­மின்றி தன்­னந்­த­னி­ய­ாக வெளி­யு­ல­கத் ­தொ­டர்­பின்றி வாழ்ந்­து­ வந்­தி­ருக்­கின்றார். அவ­ருக்குத் தேவை­யான உண­வுகள் அவர்தம் உற­வி­னரால் ஆனால் ஒரு­வரால் மட்டும் குறிப்­பிட்ட வழியால் வழங்­கப்­பட்­டு­வந்­தது.   வங்­கியில் பணம்­கொ­டுக்கல் வாங்­க­லுக்­காக ஒரு­வ­ருடன் தொடர்­பி­ருந்­த­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது. 

ஆனால் இறக்கும் வரை யாருமே உட்­செல்­ல­வில்லை எனக்­கூ­றப்­ப­டு­கி­றது. ஒரு தடவை விசேட அதி­ரடிப்­ப­டை­யினர் தேடு­த­லின்­போது சென்­று­வந்­த­தா­கவும் தக­வ­லொன்று தெரி­விக்­கி­றது. இறு­தி ­கா­ல­கட்­டத்தில் அவர் தானே சமைத்து உண்­ப­தாக தெரி­வித்­த­மை­யினால் உண­வுப்­பொ­ருட்கள் கொள்­வ­னவின் நிமித்தம் கடைக்­கா­ர­ரொ­ரு­வ­ருக்கும் இவ­ருக்கும் தொடர்­பி­ருந்­துள்­ளது. இது­த­விர உற­வி­ன­ரொ­ரு­வ­ரி­டமும் தொலைபேசியில் பேசு­வாராம்.

மரண சந்­தே­கங்­­க­ளுக்­கான கார­ணங்கள்

இத்­தொ­டர்­புகள் கடைசி ஒரு­வாரம் தடைப்­பட்­டி­ருந்­த­தா­கவும் அவ­ருக்கு செல்லும் குழாய்நீர் மானி (இது வீட்­டிற்கு வெளி­யி­லி­ருக்­கி­றது) வேலை­செய்­யா­ம­லி­ருந்­த­தா­கவும் வழ­மை­யாக வெளியில் எரியும் மின்­கு­மிழ்கள் எரி­யா­ம­லி­ருந்­த­தா­கவும் வீட்­டைச்­சுற்றி ஒரு­வித துர்­நாற்றம் வீசி­ய­தா­கவும் சொல்­லப்­ப­டு­கி­றது.

இத­னை­ய­டுத்து நேற்று முன்தினம் வியா­ழக்கிழமை காலை அவ­ரது உற­வி­ன­ரொ­ருவர் இவர் வாழ்ந்­து­வந்த வீட்­டுக்­க­தவை உடைத்து உள்ளே சென்­ற­போ­து­அவர் பிண­மாக கட்­டிலின் குறுக்­காக கிடந்­தாராம்.ஆனால் உருக்­கு­லைந்த நிலையில் துர்­நாற்றம் வீசி­ய­நி­லையில் கிடந்தார். பொது­மக்கள் பலரும் சென்று பார்த்­துள்­ளனர்.

அம்­பா­றைக்கு அனுப்­பி­ வைப்பு

சம்­மாந்­து­றைப் ­பொ­லி­ஸா­ருக்கு தகவல் கொடுக்­கவே அவர்­களும் வந்து பார்­வை­யிட்டு நீதி­வானின் உத்­த­ர­வுக்­க­மைய சட­லம் பிரேத பரி­சோ­த­னைக்­காக அம்­பா­றைக்கு அனுப்­பி­ வைக்கப்பட்டது.

புரியாத புதிர்

57 வயதுடைய பொறியியலாளரான இவர் ஏன் இவ்வாறு 10 வருட காலம் வெளியுலகத் தொடர்பின்றி தனிமையில் வாழ்ந்து வந்தார் என்பது இன்னும்  மக்கள் மத்தியில் புரியாத புதிராகவுள்ளது.

No comments

Powered by Blogger.