April 30, 2016

சியோனிஸத்தை விட, ஷியாயிஸம் ஆபத்தானது

-Khanbaqavi-

இன்றைய மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளைப் பற்றி எழுதுவதென்றாலே மனம் பதைக்கிறது. பேனா மறுக்கிறது. சிந்தனை தடைபடுகிறது. அந்த அளவிற்கு அங்கே ஓயாத மரண ஓலங்கள். பீரங்கி சப்தங்கள். துப்பாக்கி ரவைகளின் பாய்ச்சல்கள். கட்டட இடிபாடுகள். குடும்பங்குடும்பமாக அகதிக் கூட்டங்கள். பச்சிளங்குழந்தைகளின் அலறல்கள். ஒருவேளை சோற்றுக்கும் குடிநீருக்கும் கதறல்கள். தினமும் நெஞ்சைப் பிளக்கும் காட்சிகள். மனிதர்கள் வாழும் நாடுகளா? விலங்குகள் வசிக்கும் காடுகளா? பிரித்துப் பார்க்க முடியாத வன்கொடுமைகள். இரத்தக் கிளரிகள். சகிக்க முடியாத சண்டைகள். இரண்டு பக்கமும் மடிவது முஸ்லிம் உயிர்கள். அந்நிய சக்திகளின் உதவியோடும் கண்காணிப்போடும் அடித்துக்கொண்டு சாகும் ஒரே மண்ணின் மைந்தர்கள். எல்லாம் ஆட்சியதிகாரத்திற்காகவும் நாடு பிடிக்கும் பேராசைக்காகவும்தான்! இதில் பழைய பாரசீகமான ஈரானுக்கே முதலிடம்! ஈரானுக்குள்ள வெறியைப் பற்றி ‘அல்முஜ்தமா’ இதழுக்குக் கட்டுரை எழுதத் தொடங்கிய முஹம்மது ஃபாரூக் அல்இமாம் எனும் அரசியல் விமர்சகர் இப்படிக் குறிப்பிடுகிறார்: முஹம்மது ஃபாரூக் அல்இமாம் இதை எழுதுவதற்கு வருத்தமாக இருக்கிறது. இஸ்ரேல் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் மோஷா தய்யான் ஃபிரான்ஸ் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டியளிக்கிறார். 1967 ஜூன் 5ஆம் நாள் சினாய், ஜவ்லான், கிழக்குக் கரை ஆகிய பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் படைகள் கைப்பற்றுவதற்குமுன் இப்பேட்டி நடக்கிறது. அதுவும் 18 நாட்களுக்குமுன்! செய்தியாளர், “இந்த ஆபத்தான திட்டத்தை எவ்வாறு தீட்டினீர்கள்?” என்று வியப்போடு வினவுகிறார். கிண்டலும் கேலியுமாக தய்யான் அளித்த பதில் என்ன தெரியுமா? “அரபுகள் படிக்கிறார்களா?” படிப்பதாக வைத்துக்கொள்வோம். இது செய்தியாளரின் இடைமறிப்பு. அதற்கு தய்யானின் பதில்: படித்தாலும் விளங்கமாட்டார்கள். 

உண்மை என்ன? 

இது, நம்மைப் பற்றி நம் எதிரி சொன்னதானாலும் உண்மை என்ன? ஈரானின் ஆபத்தைப் பற்றி எத்தனை முறை எத்தனை எழுத்தாளர்கள் உணர்த்தியும் எச்சரித்தும் எழுதினார்கள்! அவர்களில் டாக்டர் அப்துல்லாஹ் நஃபீசி, குவைத் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும் வழக்குரைஞருமான நாஸிருத் துவைலா ஆகியோரும் அடங்குவர். ஆனால், இவர்களின் எச்சரிக்கை அரபுகளின் எள்ளலுக்கும் நகைப்புக்கும்தான் ஆளானது. பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய பொன்மொழிகள் பலவற்றை நம் முன்னோர்கள் உதிர்த்துவிட்டுத்தான் சென்றுள்ளனர். “புழுக்கை கிடந்தால், அங்கு ஒட்டகம் இருக்கிறது என்று அர்த்தம்” என்பதும் அவற்றில் ஒன்று. ஈரானின் புழுக்கைகள் நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களை அங்கும் இங்குமாக விதைத்துவருகின்றன; கலாசார மையங்களை உருவாக்கிவருகின்றன. ஈரான் சார்புள்ள அரசியல் தலைவர்களும் இராணுவ அதிகாரிகளும் மார்க்க ஆட்களும் வெளிப்படையாக அறிக்கைகளை வெளியிட்டுவருகின்றனர். நாம் நான்கு அரபு தலைநகரங்கள்மீது அதிகாரம் செலுத்துகிறோம் -என்று பஃக்தாத் (இராக்), பைரூத் (லெபனானன்), திமஷ்க் (சிரியா), ஸன்ஆ (ஏமன்) குறித்துச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். 

ஈரானின் கை ஓங்குகிறது 

எதார்த்தமும் அதுதான். இராக் தலைநகர் பஃக்தாதில், ஈரானுக்கு ஆதரவான ஒரு குழுவே அதிகாரம் செலுத்துகிறது. இராக் இராணுவப் படை, குடிப்படை (Militia) எல்லாமே அக்குழுவைச் சேர்ந்தவையே. இந்தக் குடிப்படைதான் இராக்கில் சீரழிவைத் தூண்டிவருகிறது. அவ்வாறே, லெபனானை அதிகாரம் செய்யும் ‘ஹிஸ்புல்லாஹ்’வும் அதே குழுவினர்தான். சிரியாவில் என்ன நடக்கிறது? அங்கு ஈரான் புரட்சிப் படையினர் 2 லட்சம்பேர் இருக்கிறார்கள். அத்தோடு ‘ஹிஸ்புல்லாஹ்’ குடிப்படை, உலகம் முழுவதிலிருந்தும் ஈரான் திரட்டியுள்ள கொலைகாரக் கூலிப்படை ஆகியவையும் சிரியாவில் களமாடுகின்றன. கடந்த ஐந்தாண்டுகளாத் தன் சொந்த மக்கயே படுகொலை செய்துகொண்டிருக்கும் பஷ்ஷார் அசதுக்கு ஆதரவாக இக்குழுக்கள் போரிட்டுவருகின்றன. ஏமன் நாட்டிலும் இதேநிலை. ஹூஸிக்களின் கை அங்கே ஓங்கியுள்ளது. தஹ்ரானின் (ஈரான்) கூலிப்படைகளும் அவர்களுடன் இணைந்து, பதவியிலிருந்து விரட்டப்பட்ட அலீ அப்துல்லாஹ் ஸாலிஹிற்கு ஆதரவாகப் போரிட்டுவருகின்றனர். தலைநகர் ஸன்ஆவிலும் ஏமன் நகரங்கள் அனைத்திலும் அதிகாரத்தைக் கைப்பற்ற களமிறங்கியுள்ளனர். சில வாரங்களுக்குமுன் “பஹ்ரைன், ஈரானின் ஒரு மாகாணம்” என்று அறிவித்துக்கொண்டார்கள். சுருங்கக் கூறின், வளைகுடா நாடுகளில் குற்றம், கொலை, நாசம் ஆகிய வலைகளை ஈரானிய ஷியாக்கள் பின்னிவருகின்றனர். சதிவலைகளில் சில கண்டுபிடிக்கப்பட்டாலும் வேறுசில திட்டமிட்டபடி செயல்படுத்தப்பட்டுவருகின்றன. ஆனால், அரபியர் உள்ளூர் சமாதானம், மனித உரிமைகள், சமூக இணக்கம் என்று சொல்லி உறங்கிக்கொண்டிருக்கிறார்கள் -என்று சாடுகிறார் விமர்சகர் ஃபாரூக் இமாம். 

தாஇஷ் - கொலைகாரர்கள் 

இதற்கிடையே மத்தியகிழக்கில் பயங்கரவாத இயக்கமான ‘தாஇஷ்’ (ஐஎஸ்) எனும் கொலைகாரக் கூட்டத்தை ஈரானும் அதன் ஏஜெண்டுகளும் உருவாக்கிவிட்டனர். “அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் சாவு; யூதர்களுக்கு சாபம்” என்ற அதன் கோஷம் பொய் என்பது அனைவருக்கும் தெரிந்துவிட்டது. ஐ.எஸ். பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம் என்ற போர்வையில் இஸ்ரேல், ரஷியா, இராக் மற்றும் சிரியாவின் ஷியா அரசுகள் ஆகியவற்றுடன் கூட்டுச்சேர்ந்து அரபுகளுக்கெதிரான போரை ஈரான் நடத்திவருகிறது. அரபுகளுக்கும் இஸ்லாத்திற்கும் எதிரான கூட்டுச் சதியே இது. கொலை வெறிபிடித்த அசதை எதிர்த்து சிரியாவில் போராடிவரும் ஆயுதக் குழுக்களை அழித்தொழிப்பதே இந்த ஐ.எஸ்.ஸின் முக்கிய இலக்காகும். ரஷியாவின் போர் விமானங்கள் சிரியாவின் நூற்றுக்கணக்கான கிராமங்களையும் கட்டடங்களையும் தரைமட்டமாக்கிவிட்டன. பெண்கள், குழந்தைகள், முதியோர், சிவிலியன்கள் என ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுவிட்டனர். ஈரானோ அதன் புரட்சிப் படைகளோ ஒரு சிறு துரும்பையும் பாதுகாக்கவில்லை. அப்படியானால், ஈரானின் நோக்கம் என்னவென்று புரிகிறதல்லவா? இக்கட்டான இந்தச் சூழ்நிலையில், அரபுகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து, குறிப்பாக வளைகுடா நாடுகள் இணைந்து ஈரானை அதன் எல்லைக்குள் கட்டுப்படுத்திவைக்க சாத்தியமான எல்லா முயற்சிகளையும் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டியதிருக்க, நடந்துகொண்டிருப்பது என்ன? 

அநியாயமாக வீழ்த்தப்பட்ட முர்சி 

எகிப்தின் முன்னாள் அதிபர் முஹம்மது முர்சீ அரபுகளின் திண்ணையான எகிப்து நாட்டில், சுதந்திரமான தேர்தல்வாயிலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அரபுத் தலைவரான முஹம்மது முர்சியை வீழ்த்த அரபுக் குழுக்களே வேலை செய்தன. (சலஃபிகளான ‘அந்நூர்’ கட்சியினரும் அவர்களில் அடக்கம்.) முர்சியின் முதல் நடவடிக்கை என்னவாக இருந்தது தெரியுமா? கனரக ஆயுதங்களை சினாய் பகுதிக்குக் கொண்டுசென்று, ‘ஃகஸ்ஸா’மீது கைவைத்தால் நடப்பதே வேறு என இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்ததுதான். ‘ஃகஸ்ஸா’ மக்கள்மீதான முற்றுகையை அகற்றுவதற்கு வசதியாக எகிப்தின் கடற்கரைப் பகுதியான ‘ரஃபஹ்’ வழியைத் திறந்துவிட்டதும்தான். சிரியா புரட்சிக்கு முர்சி ஆதரவளித்தார். இதையெல்லாம்விட, ஈரான் தலைநகர் தஹ்ரானில் நடந்த இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொண்டது மட்டுமன்றி, கண்ணியமிக்க நபித்தோழர்கள் ஏசப்படும் ஒரு நாட்டில் நபித்தோழர்களைக் கண்ணியத்தோடு குறிப்பிட்டு, மரபுப்படி ‘ரலியல்லாஹு’ சொன்னவர் முர்சீ. அமீருல் முஃமினீன் உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களைக் கொலை செய்த மஜூசியான அபூலுஃலுஆவுக்கு ‘மஸார்’ (நினைவிடம்) எழுப்பப்பட்டுள்ள ஒரே நாடு ஈரான்தான். அந்த நாட்டில் வைத்துத்தான் தைரியமாக, கலீஃபா உமர் (ரலி) அவர்களின் புகழ் பாடிவிட்டுவந்தார் முர்சி. தற்போதுள்ள நிலை எகிப்தில் நீடித்தால்... சிரியாவின் புரட்சி அணைந்தால்... டமாஸ்கஸில் ஈரான் காலூன்றினால்... அரபுகள் கசப்பான, கடினமான, மிகத் தீங்கான முடிவை எதிர்பார்க்க வேண்டியதுதான். ஈரானியர் செய்துவரும் அட்டூழியங்களைப் பார்க்கும் எவருக்கும் ஈரான் ஒரு பேரபாயம் என்பது விளங்காமல்போகாது. 

கேன்சர் கட்டி 

எனவே, இந்த கேன்சர் கட்டியை அகற்றும் நேரம் முஸ்லிம்களுக்கும் அரபுகளுக்கும் வந்துவிட்டது. இந்த கேன்சர் அரபுடலைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்துக்கொண்டிருக்கிறது. சியோனிஸ ஆபத்தைவிடப் பன்மடங்கு ஆபத்தானது. ‘தூ கார்’ சம்பவத்தின்போது நம் முன்னோர்களான அரபுகள் பாரசீகர்கள்மீது எடுத்த துணிச்சலான அதே நிலைப்பாட்டை இப்போது எடுத்தாக வேண்டும் -என்கிறார் அரசியல் விமர்சகர் முஹம்மது ஃபாரூக் அல்இமாம். (அல்முஜ்தமா) இதிலிருந்து ஈரானின் கனவு என்ன என்பது புரிந்திருக்கும். ஈரானின் தலைமையில் இராக், ஏமன், பஹ்ரைன், லெபனான், சிரியா, சஊதி முதலான நாடுகளைக் கொண்ட அகண்ட பாரசீகத்தை உருவாக்குவதுதான்! அதாவது சுன்னத் ஜமாஅத் கொள்கைளை ஒழித்துவிட்டு ஷியாயிஸத்தை நிலைநாட்டுவதுதான் ஈரானின் கனவு! இதை எப்படி அனுமதிக்கலாம்?

16 கருத்துரைகள்:

Clean your head?
Shia are muslims but jews are not?

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 20ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏப்ரல் 30ம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சு கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற விசேட வைபவத்தில் அல்ஹாஜ் முபாரக் அலி, அல்ஹாஜ் ரஷீத் எம் ஹபீழ், முன்னாள் முஸ்லிம் விவகார ராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் ஆகியோருடன்.

ஈராக்கில் சுன்னத் வல் ஜமாத்தினரை கொல்வதற்கு அமெரிக்காவுக்குத் துணை போனது, ஈரான் அல்ல, சவூதி அறேபியா ...!

லிபியாவில் சுன்னத் வல் ஜமாத்தினரை கொல்வதற்கு அமெரிக்காவுக்குத் துணை போனது, ஈரான் அல்ல, சவூதி அறேபியா ...!

எகிப்தில் சுன்னத் வல் ஜமாத்தினரை கொல்வதற்கு அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் துணை போனது, ஈரான் அல்ல, சவூதி அறேபியா ...!

உண்மை இவ்வாறிருக்க......

ஈரான் சுன்னத் வல் ஜமாத்தினரின் எதிரியாம்... சவூதி சுன்னத் வல் ஜமாத்தினரின் நண்பனாம்.... இதை நாமும் நம்பனுமாம்....!!!

Try to increase your knowledge, It's obvious to see Pakistan to Yemen the so called Sunni muslims killing and bombing shia muslims including their mosques etc. A true muslim will never accept sects like shia and sunni. It's crystal clear in Qur'an and authentic hadith.

Well-said. Muslims must be vigilant about the plot and sinister moves of Shia. Absolutely Shia'ism is a menace to Islam. We all want to uproot it.

சியோனிஷம்,சியாயிஷம் இரண்டையும் விட இஸ்லாத்தின் மிகப்பெரிய விரோதிகள் சவூதிஅரேபிய அரசுதான்.

அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் சாவு; யூதர்களுக்கு சாபம்” என்ற கோசம் ஐ எஸ் தீவிரவாதிகளின் கோசமல்ல அது ஹிஸ்புல்லாக்களின் கோசம் தற்போது ஹிஸ்புல்லாக்கள் தீவிரவாதிகளை துடைத்தெரிந்து கொண்டிருக்கிறார்கள், விரைவில் சவுதியின் ஆட்டம் அடங்கிவிடும் இஸ்ரேல் விரட்டியடிக்கப்படும் வஹ்ஹாபிஸம் ஓய்ந்துவிடும்
இஸ்லாத்துக்கு எதிரான சவுதி மன்னராட்சிக்கு எதிராக பிரச்சாரங்களில் ஈடுபட தௌஹீத் ஜமாத் தயாராகி கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது
சவுதியின் மன்னராட்சி இஸ்லாத்துக்கு முரணானது ஆகவே அவர்களுக்கு எந்த வகையிலும் உதவுவது தெளிவான சிர்க் என்றும் கருத்துக்கள் பரிமாரிக்கொள்ளப்பட்கிறது ,
சவுதியின் நிதியுதவியையும் நிராகரிக்கப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்ஹம்து லில்லாஹ்

சவூதி ஆட்சியாளர்களுக்கும் சியோனிஸ இஸ்ரேலுக்குமிடையில் வளர்ந்து வரும் உறவையும், அதன் விளைவாக இஸ்லாமிய உலகு எதிர் நோக்கியுள்ள ஆபத்தையும் மக்களுக்கு உணர்த்த வேண்டிய கடப்பாடு எமது உலமாக்களுக்கும் புத்திஜீவிகளுக்கும் உள்ளது.

இஸ்லாமிய உலகின், குறிப்பாக அரபுலகின், வளங்கள் இப்போதே அழிக்கப்பட்டுவிட்டன. ஒவ்வொரு முஸ்லிம் நாடும், ஒன்றன்பின் ஒன்றாக, சுடுகாடாகிக் கொண்டிருக்கிறது என்பது கண்கூடாகத் தெரிகிறது. எனினும், எமது உள்ளங்கள் இருகிவிட்டனவோ என்று கேட்கும் அளவுக்கு மௌனிகளாகிவிட்டோம்.

உலமாக்களே, புத்திஜீவிகளே..!

உங்கள் கடமையைத் தட்டிக் கழிக்காதீர்கள், எஞ்சியிருக்கும் ஒரு சில நாடுகளையாவது இஸ்லாத்தின் எதிரிகளின் சூழ்ச்சியில் இருந்து காப்பாற்றியாக வேண்டும்.

மக்களுக்கு கண்முன்னே தெரியும் ஆபத்தின் விளைவை உணர்த்தப் போகிறீர்களா..? அல்லது..... எரியும் நெருப்பில் குளிர்காயப் போகிறீர்களா...?

Wahhabism and Sheism are both created by enemies to destroy Islam, In srilanka we don't have to allow these two dangerous diseases to spread among our muslims, we are always sunni muslims following madhab shafie in Islamic Jurisprudence and Asharie in Islamic creed.

Those who say SHIA has not role in killing Sunnis in Siriya... Clear your minds,,, Go and see what is happening to

Sunnis inside IRAN
Sunnis in ANBAR Iraq
Sunnis in Alepo Siriya.

SHIA already declared ABOOBAKER, UMAR, UTHUMAN (ral) to be Kafir with many more SAHAABIs. They have already staged many killings during the HAJ in makkah in the recent past.

Still you people says IRAN is not Killing...GO affect countries and say your are SUNNI.. Will what they will do to you.. THEY will kiss you at ..

May Allah Bring our brothers and sisters from darkness to light and know what is happening around ARAB WORLD and to know who is our Brother and and Who is our enemy.

Killing innocent people in IRAQ , SIRIYA and other lands is not the WAY of ISLAMIC JIHAAD.

Muhammed (sal) did not kill KIDS, WOMEN, OLD and MONKS of even other religious people. BUT These so call groups killing even their own brohters.. How come they are related to ISLAM. They are far away from DEEN as we know.

I my self teaching to many Shia students in SAUDI Arabia.

By Allah I says to you sunnis in Srilanka... These SHIA students avoid saying SALAM To me.. clearly confirmed me that they do not consider We SUNNIS as Muslims.

This is from not stories but from My Experience till todate

well, apart from the issues these kind of articles bring out the hidden shias and it's supporters in srilanka.

heartbreaking news coming out of Aleppo. without arab forces Yemen would have become another disastrous place. evidence coming out of Syria proves how dangerous the Iranians are. in public they say they not sunny or Shia but in fact they are root cause of all inhumane activities. thank you Mohammed rasheed for your inputs.

What is the meaning of this article.It's heading,contents, and objective are poles a part.Heading is venomous against shia and pro Israel.Allegation and objective are not substantiated.First IS is not pro Iran and pro Shia, killing Muslims and looting the oil from Iraq and Syria.Mohamed Mursi is democratically elected president was toppled by not pro Iran or pro Shia but Anti Islamic Abdul Fathah Al sisi is the dictator, who is responsible for the massacre of several hundred Muslim and given death sentence to more than 500 muslim brother hood movements members, who are peace fully demonstrated supporting Mursi is their fault.What Mohamed Mursi's fault is that he is anti Israel and pro palastinian, This article agree with.So Sisi toppled him and well supported by Saudi Arabia not By Iran.But this crazy man blame to Iran and Shia.

Saudi Arabia supported Israel war against Hamas,Supported Israel war against Hisbullah, who inflicted heavy blow to Well advanced Israel and carried the war for more than a month but Well established Egypt, Syria and Jordan could not resist for a week the 1967 war of weak Israeli forces. So Hisbullah was banned and put in terrorist list By Saudi Arabia and it's ally because they wants to protect Israel.Egypt closed all the border and supply rout to Gaza making Gaza open Jail and starved palastinian people which is well supported by Saudi Arabia because Israel is their ally and having secret connection.

Saudi Arabia is destroying Muslim world economy and having self destruction, Supplying oil to America for low price and doubled it's production to cover it's loosing money. As a result now oil price is drastically gone down and suffering economically.They did so to Punish Russia and Iran but Back fired on them and now big companies are cutting jobs in Thousand to cope with this hardships. That's too again affect it's economy as lack of man power.

In Iraq, Syria, Yemen, Somalia and Nigeria muslims are killed in the name of Islam by ISIs or IS is not Shia ir Iranian but Sunnis are sponsored by Saudi Arabia. Recently Saudi Arabia rewarded Gujarat Butcher Narendra Modi.

So all the problem is created by Saudi Arabia because of it's wrong foreign policy and bad company of America and Israel. They hate Iranian and Shia more than Israel and Jews.Not only that They have no any Concern for the world Muslims or Palestinian.But Iranians are pro Palestinian and have great concern about them. one must see the Press TV to see the real news and how it highlight the Palastinian Problem in daily basis.

So Saudi Arabia and Wahhabism more danger than Iran and Shia but both are playing politics with Islam for the domination of middle east. So we should not follow neither of them as both are same. We have our own Islam.

nadaimurai theriyamal pesavendam america matrum isreal valayil sariyaga maatikkondadu! Innum thelivaga sollaponal iran sakthi vainda nadaga marinal adan moolam saudiyai miratti makkah madeenavai thanadu kattupaatukkul kondu vandu rowla shareefilulla umar rali matrum abu bakr siddeek avargalin ziyarangalai agatruvade thalayaya nokam! Inda oru karanaththitkagave saudi americavukku adi paniyavendiya nilai, iranukku pressure kodukka anusakthiyai thadukka saudi pala valiyil poradi varugiradu idai america thurumbaga payan paduththi varugiradu

I don't make an arguments with the people those who are already made a final decision and arguing.and it's not about saudi,iran or turkey it's all about our country.worry is still most people they don't even know this shias are non muslims. thise who reading of this comments please make an aawareness of shiaism in sriLanka before it's too late.

Post a Comment