Header Ads



தற்போதைய ஆட்சியிலேயே, முஸ்லிம்ளுக்கு பாரிய அச்சுறுத்தல் - பொங்குகிறார் அஸ்வர்

வடக்கு, கிழக்கு என முஸ்லிம்களிடையே பாகுபாட்டுடன் உறவை ஏற்படுத்தவோ அல்லது நாட்டை பிரிக்கவோ நாம் ஒருபோதும் எண்ணவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -30- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தாம் எப்போதும் நல்லிணக்க அடிப்படையில் ஆட்சி செய்வதையே விரும்புவதாகவும் ஏ.எச்.எம்.அஸ்வர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் நாட்டை பிரிக்கும் செயற்பாட்டை மேற்கொள்வதாகவும் இந்த செயலுக்கு எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் துணை நிற்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன், கடந்த அரசாங்கத்தில் முஸ்லிம் மக்களுக்கு பாரியளவில் அச்சுறுத்தல் காணப்பட்டதாக தற்போதைய அரசு கூறுகிறது. ஆனால் தற்போதைய ஆட்சியிலேயே அவ்வாறான அச்சுறுத்தல் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பொது பல சேனா அமைப்பை உருவாக்கியதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு தொடர்பு உள்ளதா என ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு இல்லை என பதிலளித்ததுடன், இந்த அமைப்பு முஸ்லிம் மக்களிடையேயும் சிங்கள மக்களிடையேயும் பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டது என முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. KINATTHU THAWALAI.RAJAPAKSA POSHAKAR

    ReplyDelete
  2. A clown by nature. Stop worrying about Muslims.Muslims are well protected now.

    ReplyDelete

Powered by Blogger.