Header Ads



பாதுகாவலர்களின் தவறு, கடுமையாக திட்டிவிட்டு, மன்னிப்புக்கேட்ட மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாவலர்கள் அசட்டையாக செயற்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளில் பெரும் கோட்டை விடுவதாக இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கான அண்மைய உதாரணம் கடந்த 27ம் திகதி நடைபெற்றுள்ளது.

குறித்த தினம் விளையாட்டுத்துறை அமைச்சின் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதன் பின்னர் சினமண்ட் ஹோட்டலில் நடைபெற்ற திருமண வைபவம் ஒன்றில் சாட்சிக் கையெழுத்திடுவதற்காக திட்டமிட்டிருந்தார்.
 
இந்த திருமண நிகழ்வின் பின்னர் கல்கிஸ்சையில் சுகாதாரத்துறை ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றில் கலந்து கொள்ள அவர் திட்டமிட்டிருந்தார்.

எனினும், விளையாட்டுத்துறை அமைச்சின் நிகழ்வு முடிந்து காரில் ஏறி அமர்ந்த ஜனாதிபதி, தன் கையில் இருந்த சில கோப்புகளை பார்வையிட்டுக் கொண்டிருக்கும் போது அவரது பாதுகாவலர்கள் நேரே கல்கிஸ்சை நிகழ்வுக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு சென்றபின் தான் தனது பாதுகாவலர்களின் தவறை உணர்ந்த ஜனாதிபதி மைத்திரி, அவர்களைக் கடுமையாக திட்டிவிட்டு, சினமண்ட் ஹோட்டலுக்கு விரைந்துள்ளார்.

பின்னர் மீண்டும் சுகாதாரத்துறை விருது வழங்கல் நிகழ்வுக்கு வருகை தந்த ஜனாதிபதி தனது தாமத வருகை குறித்து அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

இதற்கு முன்னரும் காலிக்கு செல்வதற்காக ஜனாதிபதிக்கு ஹெலிகொப்டர் தயார் நிலையில் இருந்த போது அவரது பாதுகாவலர்கள் தரைப்பாதை வழியாக அவரை அழைத்துச் சென்றிருந்தனர்.

அத்துடன், நிகழ்வொன்று முடிந்து திரும்பிச் செல்லும் வழியில் ஜனாதிபதியின் வாகனத்திற்கு பதிலாக பிரதமரின் வாகனத்தில் அவரை ஏற்றி உட்கார வைத்துள்ளனர்.

ஒரு நாட்டின் ஜனாதிபதியின் பாதுகாப்பை பொறுப்பில் எடுத்திருக்கும் பாதுகாப்புத் துறை இவ்வளவு தூரம் அசட்டையாக இருப்பது பல தரப்பினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 comments:

  1. ஏதும் அந்தரங்க சூட்சிகள் நடக்கிறதா?

    ReplyDelete
  2. I do not know what this man doing, this is the conspiracy and his security is handled by unseen power.Now he is facing great danger.The problem is that He trust those security of former President.Soon after President assumed power, he said that those who wants to stay can stay and those who wants can go.So still former security men who are pro Rajapakshe hovering around him.So he is playing with fire.

    ReplyDelete

Powered by Blogger.