Header Ads



சிரியாவிலிருந்து வரும் 10,000 அகதிகளுக்கு, அமெரிக்கா புகலிடம் அளிக்கும் - ஒபாமா

சிரியாவிலிருந்து வரும் 10,000 அகதிகளுக்கு அமெரிக்கா புகலிடம் அளிக்கும் என்று அதிபர் ஒபாமா கூறினார்.

 தலைநகர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

 திட்டமிட்டிருந்த எண்ணிக்கையில் கடந்த ஆண்டு சிரியா அகதிகளுக்குப் புகலிடம் அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

 சிரியாவில் உள்நாட்டுப் போர் கடுமையாக நிகழ்ந்து வந்த நிலையில், பெரும் எண்ணிக்கையில் அந்த நாட்டைவிட்டு மக்கள் வெளியேறி வந்தனர்.

 திடீரென அதிக எண்ணிக்கையில் அகதிகளை ஏற்பது தொடர்பாக அமெரிக்க மக்களுக்கு எழக் கூடிய கவலைகளைப் போக்குவது அவசியமாக உள்ளது. அதன் காரணமாகவே, கடந்த ஆண்டில் நான் எண்ணியபடி, அதிக எண்ணிக்கையில் சிரியா அகதிகளுக்கு அமெரிக்காவில் அடைக்கலம் தர முடியவில்லை.

 இந்த விவகாரத்தின் உண்மை நிலையை அமெரிக்க மக்கள் தற்போது உணர்ந்திருக்கிறார்கள். எனவே, இந்த ஆண்டு 10,000 அகதிகளை ஏற்க இயலும் என்று உறுதியாகக் கூற முடியும். அகதிகளாக வருவோரின் பின்னணி உள்ளிட்டவற்றை நன்கு ஆராய்ந்து, சந்தேகத்துக்கு இடமின்றி அவர்களைப் பற்றிய விவரங்கள் உறுதி செய்யப்படும். இதற்கான தகவல் கட்டமைப்பு இப்போது தயார் நிலையில் உள்ளது என்று ஒபாமா கூறினார்.

No comments

Powered by Blogger.