Header Ads



ஐ.எஸ். தீவிரவாதிகள் இஸ்லாத்தை பிரதிபலிக்கவில்லை - மங்கள சமரவீர

புலிகள் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை – ஐ.எஸ் தீவிரவாதிகள் இஸ்லாத்தை பிரதிபலிக்கவில்லை:

தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்கள் பிரதிநிதித்துவம் செய்யவில்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மை தமிழ் மக்களின் அபிலாஸைகளையும் எதிர்ப்பார்ப்பிற்காகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் குரல் கொடுக்கத் தவறியதாகத் தெரிவித்துள்ளார்.

மோல்டாவில் நடைபெற்று வரும் பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர்களுக்கான மாநாட்டில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதம், கடும்போக்குவாதம் மற்றும் அடிப்படைவாதம் போன்றன பொதுநலவாய நாடுகள் கொள்கைகள் கோட்பாடுகளை மலினப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் பயங்கரவாத இல்லாதொழிப்பு நடவடிக்கைகளின் போது மிகுந்த நிதானம் அவசியமாகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாதிகளையும் அவர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் பாரிய சமூகத்தையும் கருத்திற் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்கள் அபிலாஸைகளுக்காக குரல் கொடுக்கத் தவறியுள்ளதாகவும், ஐ.எஸ் தீவிரவாதிகள் இஸ்லாத்தை பிரதிபலிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாதிகளினால் பிரதிநிதித்துவம் செய்யப்படுவதாக கூறப்படும் இன அல்லது மத சமூகங்களின் இதயங்களை வென்றெடுப்பதுவம் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. இதே கருத்து தலைவர் ஹக்கீமுக்கும் பொருந்துமா???? என வாசகர்களிடம் கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  2. நல்ல தெளிவான கருத்து,இன்றைய உலக நிலையில் இலங்கையில் ஏதாவது ஒரு பயங்கரவாதம் இருந்தால் அது இலங்கையை கடுமையாக பாதிக்கும் இந்த IS வாதிகளின் பெயரால் தாக்குதல்கள் நடத்தப்பட்டு அப்பாவி முஸ்லிம்களின் தலையில் கட்டிவிடும் வேலைகளை தாராளமாக செய்வார்கள்.மஹிந்த ஒரு வகையில் பாராட்டப்பட வேண்டியவர்தான்.

    ReplyDelete
  3. முஸ்தபா ஜவ்பர் கவனம் அவர்களில் சிலர் பலசேனாவூடன் இணைந்து முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுகின்றனர் (நான் சிங்கள பௌத்தர்களைக் குறிப்பிட்வில்லை)

    ReplyDelete

Powered by Blogger.